நுவரெலிய மாவட்டத்திற்கு என வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட  ‘ஐந்து புதிய பிரதேச செயலகங்களை அமைப்பதற்கான பொது மக்கள் மனு’

முன்னெடுப்பு : மலையக அரசியல் அரங்கம்

இலங்கை அரசாங்க நிர்வாகப் பொறிமுறையில் கிராமசேவகர் பிரிவுக்கு மேல் நிலையில் உள்ள பிரதேச செயலகங்கள் முக்கிய இடம்பெறுகின்றன. நுவரெலிய மாவட்டத்தின் சனத்தொகைக்கு ஏற்றவாறு அல்லாது பிரதேச செயலகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக அமையப் பெற்றுள்ளமை பற்றி கடந்த பல வருடங்களாக எடுத்துக் கூறப்பட்டுள்ளதுடன், மாவட்ட மக்களும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை அதிகரிககு; மாறு கோரிக்கை வைத்து வந்தனர்.

2016 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றில் இந்தக் கோரிக்கையை அப்போதைய நுவரெலிய மாவடட் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜா சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையாக முன்வைத்ததை அடுத்து, பிரேரணைக்கு பதில் அளித்த அப்போதைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவரத்தன நுவரெலிய மாவட்ட பிரதேச செயலகங்களை ஐந்தில் இருந்து பத்தாக உயர்த்துவதற்கு உறுதி அளித்தார்.

 2018 ஆம் ஆண்டு நுவரெலிய மாவட்ட அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்களை பாராளுமன்ற கடட்டத்தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் சந்தித்த அமைச்சர் வஜிர அபேவரத்தன ஐந்து புதிய பிரதேச செயலகங்களை அமைப்பதற்கு உத்தரவாதம் அளித்ததுடன் அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தையும் சமர்ப்பித்து அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொண்டார். அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் நுவரெலியாவுககு மேலதிகமாக காலி மாவட்டத்திலும் (அமைச்சரின் மாவட்டம்) மேலதிக மூன்று பிரதேச செயலகங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டு இருந்தது.

 2019 ஒக்டோபர் 30 ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் நுவரெலிய மாவடட் த்தில் புதிய ஐந்து பிரதேச செயலகங்களும், காலி மாவட்டத்தில் புதிய மூன்று பிரதேச செயலகங்களும் உருவாக்கப்படுவதற்கான பிரகடனம் வெளியானது.

 2020 மார்ச் முதலாம் திகதி முதல் நுவரெலிய மாவட்டத்தில் புதிய ஐந்து பிரதேச  செயலகங்களை திறப்பதற்கும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆகும் போது காலி மாவட்டத்தில் புதிதாக உருவாகக்பப்ட்ட மூன்று பிரதேச செயலகங்கள் பத்தேகம இரண்டாகப் பிரிக்கப்பட்டு வந்துரம்ப என்ற புதிய பிரதேச செயலகமும், ஹிக்கடுவை பிரதேச செயலகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மேலதிகமாக ரத்கம, மாதம்பாகம ஆகிய புதிய பிரதேச செயலகங்களும் அமைக்கப்படுள்ளன. ஆனால் அதே வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்பட்ட  நுவரெலிய மாவட்டத்தின் (அம்பகமுவ ) நோரவு; ூட், (நுவரெலியா) தலவாக்கலை, (வலப்பன) ராகலை, (கொத்மலை) திஸ்பனை, (ஹங்குரங்கெத்த) மத்துரடட் புதிய ஐந்து பிரதேச செயலகஙலகளும் நடைமுறைக்கு வரவில்லை.

 2021 நவம்பர் மாதம் நுவரெலிய மாவட்டச் செயலாளர் திரு. நந்தன வைச் சந்தித்து கலந்துரையாடிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தனது உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கோரிக்கை மனு ஒன்றையும் கையளித்து இருந்தார்.

 2021 டிசம்பர் தலவாக்கலை நகரில் புதிய பிரதேச செயலகத்துக்குப் பதிலாக ‘உப பிரதேச செயலகம்’ ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இது,

– உயர் தீர்மானங்களை எடுக்கும் பாராளுமன்ற உறுதிப்பாட்டுக்கும்

– அமைச்சரவையின் கூட்டுத் தீர்மானத்துக்கும்

– வர்த்தமானிப் பிரகடனத்துக்கும்

எதிரானது என்பதை வலியுறுத்துவதுடன் காலி மாவடட் த்திற்கும் நுவரெலிய மாவட் டத்திற்கும் பாரபட்சமான முறையில் அரசாங்கம் தீர்மானம் எடுத்து செயல்படுவதாகவும் மாவட்ட மக்கள் உணர்கிறார்கள் என்றும் இந்த பாரபட்சத்தை நிவர்த்தி செய்து நாட்டில் ஏனைய மாவட்ட  மக்களைப் போன்று நுவரெலிய மாவட்ட மக்களுக்கும் நிர்வாகத்தில் சமவாய்ப்பு வழங்குமாறும் கோரி, ‘மலையக அரசியல் அரங்கம்’ முன்னெடுக்கும் இந்த மனுவில் கையெழுத்து இட்டு நுவரெலிய மாவட்ட மக்களின் நியாயமான கோரிக்கைக்கு எனது ஒருமைப்பாட்டைத்த் தெரிவிக்கின்றேன்.