என்னை யாரும் விலக்கவில்லை. நானே விலகிக் கொண்டேன் 

 - வீரகேசரி வாரவெளீட்டில் வெளியான நேர்காணல் -

நீங்கள் ஏற்கனவே அங்கம் வகித்த அணியில் இருந்து விலகிக் கொண்டீர்களா அல்லது விலக்கப்பட்டுள்ளீர்களா ?

என்னை விலக்கும் அளவுக்கு தேவை ஒன்று அங்கே எழவில்லை. நானாகவே அந்த அணியினருடன் சேர்ந்தியங்குவதில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்து விட்டேன். தொழிலாளர் தேசிய சங்கத்தில் நான் வகித்த பதவியை சங்கத்தின் தேவை நிமித்தம் வேறு யாருக்கும் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தை 2012 ஆம் ஆண்டு தொழிலாளர் தினத்தன்றே பொதுச்செயலாளர் பிலிப் இடம் கையளித்து விட்டே தொடர்ந்தும் செயற்பட்டேன். ஏனெனில் அப்போதும் இப்படி விலகி இருந்தேன். அது தற்காலிக விலகல்.

 

2015 ல் பாராளுமன்ற உறுப்பினர் ஆக தெரிவானதுடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தைத் தூது வந்தவர்களிடம் “வேண்டுமானால், வெள்ளைப் பேப்பரில் கையொப்பமிட்டு தருகிறேன். எந்த நேரத்திலும் எனது பாராளுமன்ற பதவியை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். இப்போதைக்கு எனக்கு மக்கள் வழங்கிய ஆணைப்படி செயற்பட விடுங்கள். உங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் எந்தப் பதவியையும் விட்டுவிலக நான் தயாராகவே இருக்கிறேன்” என 2015 ஆகஸ்ட் மாத இறுதியிலேயே உறுதி அளித்துவிட்டே செப் முதலாம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொண்டேன். எனவே என்னை விலக்க யாரும் சிரம்ப்படும் தேவை இருக்கவில்லை. எல்லாமே சுமூகமாக நடைபெறுகிறது.

 

தேர்தலில் போட்டியிட ஒரு தொகைப் பணம் கேட்கப்பட்டது என்று தெரிவித்து இருந்தீர்கள். அது ஏன் தேர்தல் செலவுகளுக்கானதாக இருந்திருக்கக் கூடாது ?

ஆம். நீங்கள் கேட்பதும் நான் கூறியதும் ஒன்றுதான். சிங்களத்தில் நான் கூறியதை நீங்கள் புரிந்து கொண்ட அளவுக்கு பலர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நான் அதைத்தான் சொன்னேன். 2020 மார்ச் 11 அஅன்று எங்களிடையே இடம்பெற்ற உரையாடலை அதே விதமாக சிங்கள ஊடகம் ஒன்றில் பதிவு செய்துள்ளேன்.

அதில் என்னுடைய வாதம் என்னவெனில் ‘எனது’ தேர்தல் செலவுகளுக்கு இரண்டு கோடி தேவை இல்லை என்பதே. ஏனெனில், 2007 முதல் தொழிலாளர் தேசிய சங்க மீள் உருவாக்கம், கட்சி கட்டமைப்பை விருத்தி செய்தல், செயற்பாட்டாளர்களுக்கு அரசியல் வகுப்பு நடாத்துதல், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளித்தல் , தொழிற்சங்க முழுநேர ஊழியர்களுக்கு மாதாந்த மீளாய்வு கூட்டம் நடாத்துதல், முன்னோடிகளுக்கு விழா எடுத்தல், வட்டார அமைப்பு முறை அடிப்படையில் கட்சிக் கட்டமைப்பைப் பேணுதல், கூட்டணி கலாசாரம் பேணல், கொள்கைத் திட்டமிடல், ஊடக அறிக்கையிடல், ஊடகப்பங்கேற்றல் எனும் பல்பரிமாண அடிப்படையில் எனது மூளை உழைப்பை பல வருடங்களாக அமைப்புக்காக செலவிட்டவன்.

பொருளியளின் அமையச் செலவு ( Opportunity cost ) கோட்பாட்டுக்கு அமைவாக அந்த மூளை உழைப்பை எனது சொந்த உழைப்புக்காகப் பயன்படுத்தி இருந்தால், இரண்டு கொடி என்ன என்னிடத்தில் நான்கு கொடியே இருந்திருக்கும். அமையச் செலவு கொட்பாடு தெரியாதவர்களுக்கு எனது கருத்துப் புரியாது. அதற்காக நான் ஒன்றும் செய்யவும் முடியாது. எனவே நான் உருவாக்கிவைத்த கட்டமைப்பு, என்னுடைய ஆடம்பரமற்ற எளிமையான அரசியல் நடத்தைகள் ( Simple Political behaviors) அடிப்படையில் தேர்தலை எதிர் கொள்ள சுமார் பத்துலட்சம் எனக்கு போதுமானது என்பதே எனது வாதம்.

2015 லும் நான் நண்பர்களின் உதவியுடன் அத்தகைய தொகையுடனேயே தேர்தலை வெற்றி கொண்டேன். அப்போது என்னிடம் யாரும் கோடிகள் கொடுக்கவும் இல்லை. கேட்கவும் இல்லை. 2015 தேர்தல் பிரசாரகாலப் படங்கள் இப்போதும் எனது முகநூலில் உண்டு. அப்போதும் நான் தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் வசிக்கும் அசோக் எனும் சகோதரனின் LH ரக வாடகை வேிலும், ஆட்டோவிலுமே பிரசாரத்துக்கு போனேன். சில சமயங்களில் மலையக மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் இராஜாராம் அவரது பழைய ஜீப்பில் என்னை உட்காரவைத்து ‘கெத்தாக’ அழைத்துக் கொண்டு போயுள்ளார் என்பதை நன்றியுடன் நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

நீங்கள் கூறுவது போல தேர்தலில் போட்டியிட அந்தந்த வேட்பாளர்கள்தான் செலவிட்டுக் கொள்ள வேண்டுமானால் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவரது நுவரெலியா மாவட்ட செலவுகளுக்கு சஜித் பெற்றுக் கொடுத்த தொகை பற்றி வெளியே பேசப்படுகிறதா? அல்லது கணக்குகள்தான் காட்டப்படுகிறதா? என்னுடைய சொத்துப் பொறுப்பு விபரங்களை பொது வெளியில் வெளியிட நான் எழுத்து மூல அனுமதி கடிதத்தை 30 சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்த பொது வழங்கி உள்ளேன். அது ஒரு பப்ளிக் டொக்கியுமன்ட்.

தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏன் தேசிய பட்டியல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை?

ஆர்வம் காட்டிப் பெற்றுவிட்டால், அதனை எனக்கு வழங்க வேண்டி வந்திருக்கும் அல்லவா? அதனால் ஆர்வம் காட்டவில்லை போலும். ஹ...ஹ..😄

அப்படியாயின் உங்களைத் திட்டமிட்டே ஓரங்கட்டினார்கள் என்கிறீர்களா ?

நிச்சயமாக. பாராளுமன்ற உறுப்பினராக முதல் முறையிலேயே மக்கள் இடத்தில் நன்மதிப்பைப் பெற்றவனை, மாவட்டத்தில் முதலிடம் பெற்றவனை, பாராளுமன்றில் 225 ல் 29 ம் இடத்தில் தரப்படுத்தப்பட்டவனை தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததில் இருந்தே புரியவில்லையா இது திட்டமிடப்பட்ட சதி என்று?. ஏற்கனவே உறுப்பினராக சிறப்பாக செயற்பட்ட ஒருவரை போட்டியிட அனுமதிக்காதிருக்க எத்தனைத் துணிவு வேண்டும். அதனைத் துணிந்து தீர்மானிக்க முடியுமெனில் அதாவது போட்டியிட வாய்ப்பு இல்லை என அறிவிக்க முடியுமெனில் தேசிய பட்டியல் இல்லை என அறிவிப்பது எம்மாத்திரம்.

நீங்கள் நுவரெலியா பிரசாரத்துக்கு வராமல் விட்டதுதான் தேசிய பட்டியல் வழங்காமைக்கு காரணம் என சொல்லப்பட்டதே ?

ஹா... ஹா .. 😄 நான் மார்ச் 11 கட்சி மட்டத்திலும் மார்ச் 15 கூட்டணி மட்டத்திலும் இடம்பெற்ற உரையாடல்களில் “நுவரெலியா பிரசாரத்துக்கு வரமாட்டேன்” என்ற நிபந்தனை அடிப்படையிலேயே தேசிய பட்டியல் நியமனத்தை ஏற்றுக் கொண்டேன்.முதலாவதின்போது கட்சியின் தேசிய அமைப்பாளரும், கூட்டணி மட்டத்தில் அன்றைய தினம் கலந்து கொண்ட அனைத்து அரசியல் உயர்பீட உறுப்பினர்களும் இதற்கு சாட்சி. தவிரவும் மார்ச் 15 உயர்பீட கூட்டக்குறிப்பிலும் அது எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்தவர் பிரதி செயலாளர் சட்ட முதுமாணி சண்.பிரபா. நிலைமை இப்படி இருக்க நான் நுவரெலியா வரவில்லை என்பது “ வெத்துக் காரணம்” என்பது விளங்கவில்லையா?.

 

தவிரவும் நான் நுவரெலியா பிரசாரத்துக்கு வராமல் விட்டது மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 5 வரையான தேர்தல் பிரசார காலம் முழுவதும். ஆக, ஐந்து மாநங்களாக நான் நுவரெலியா மாவட்டத்துக்கு வராமல் இரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, காலி மாவட்டங்களில் ‘தொலைபேசி’ சின்னத்துக்காக பிரச்சாரம் செய்தபோது ஊடகங்கள் கூட்டணி தலைவர்களிடம் எனது தேசிய பட்டியல் விவகாரம் குறித்து கேட்டபோது கூறிய பதில்கள் என்ன? “திலகராஜ் படித்தவர் .. திறமையானவர் அதனால்தான் தேசிய பட்டியல் வழங்குகிறோம்” என்றார் ஒருவர்.

திலகராஜின் அருமை பெருமை எல்லாம் பேசி தேசியபட்டியல் நிச்சயம் வழங்கப்படும் என பெட்டிப்போட்டு, வட்டம்போட்டு பேசினார் இன்னொருவர். “நாங்கள் மூன்றுபேரும் வென்றால் திலகராஜுக்கு தேசிய பட்டியல்” என நுவரெலியா மாவட்டம் முழுவதும் மேடைக்கு மேடை முழங்கினார்கள் மூவர். அந்த பதிவுகள் எல்லாம் எழுத்திலும் வீடியோ வடிவத்திலும் இன்னும் கிடைக்கக் கூடியதாக உள்ளது. இப்படி எல்லாம் எல்லாம் ஏன் அப்போது பதில் சொல்லி இருக்க வேண்டும். திலகராஜ், நுவரெலியா மாவட்ட பிரச்சாரத்துக்கு வரமாட்டேன் என்கிறார். ஐந்து மாதமாக அவர் நுவரெலியா வரவில்லை. அதனால் அவருக்கு தேசிய பட்டியல் வழங்க மாட்டோம் என தேர்தலுக்கு முன்னமே சொல்லி இருக்கலாமே. இப்போது புரிகிறதா ‘வெத்துக்காரணம்’ என்று?

நுவரெலியாவுக்கு பிரசாரத்துக்கு வரமாட்டேன் என ஏன் அந்த நிபந்தனை .. ?

நான் மார்ச் 11 முதல் கூறிவரும் இந்த நிபந்தனைக்கான காரணத்தை இதுவரை யாரும் கேட்கவில்லை. இப்போது, எல்லாம் முடிந்தபின்னர் சரி நீங்கள் கேட்டதற்கு நன்றி. தேர்தலில் ஒருவருக்கு எதற்கு பணம் வேண்டும்? பிரசாரத்துக்கு செலவழிக்க. எனக்கு ஏன் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை? பிரசாரத்துக்கு பணம் இல்லை என. என்னிடம்தான் பிரசாரத்துக்கு பணம் இல்லையே.

அப்போ எந்தப்பணத்தைக் கொண்டு நான் நுவரெலியா பிரசாரத்துக்கு வருவேன்? என் கையில் பத்து லட்சத்தை வைத்துக் கொண்டு எனக்கே பிரச்சாரம் செய்து கொள்ள முடியாதபோது அதனைக் கொண்டு நான் அங்கே யாருக்கு பிரசாரம் செய்வது? அப்படி 2010 பொதுத்தேர்தலில் நான் பிறருக்கு பிரசாரம் செய்திருந்தபோதும் அப்போதும் தேசிய பட்டியல் வழங்காமல் மறுக்கப்பட்டதே. இப்போது 2020 ல் வழங்குவார்கள் என்பதில் என்ன நிச்சயம். அதுதானே நடந்தது.

எனவேதான் என்வசம் இருந்த பணத் தொகையைக் கொண்டு தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டால் எனது வேலைத்திட்டம் என்ன என்பதை விளக்கும் வகையில் கூட்டணி எம்பிக்கள் இல்லாத மாவட்டங்களில் எனது பிரசாரத்தை தொலைபேசிக்காக செலவிட்டேன். அதன் மூலம் பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத மலையக மாவட்டங்களை இலக்குவைத்து எனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டத்தை முன்வைத்தேன்.

முற்போக்குக் கூட்டணி வடக்கு கிழக்குக்கு வெளியே அரசியலை முன்னெடுக்கும் தமிழ்த்தரப்பு எனில் நிச்சயமாக தேசிய பட்டியல் உறுப்புரிமையைப் பெற்று எனது திட்டத்தை நடைமுறைப் படுத்தினால் மட்டுமே அது சாத்தியம். அந்த பதவியில் நான்தான் இருக்கவேண்டும் என்பது இல்லை.அடுத்த இருவராக பிரேரிக்கப்பட்டு இருந்த லோரன்ஸ் அல்லது குருசாமிக்கு சரி பெற்றுக் கொடுத்திருக்கலாம்.இதனைக் கூட செய்ய முடியாத பலவீனம் யாருடையது?

நான்தான் நுவரெலியா வரவில்லை எனும் வறட்டு வாத்த்தை வைத்துக்கொண்டாலும், தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது நுவரெலியா மாவட்டம் முழுவதும் பிரசாரப் பணியில் ஈடுபட்ட அண்ணன் லோரன்சுக்கு அதனை வழங்காது விட்டதன் காரணத்தை யார் சொல்வது?தமது தளபதி குருசாமிக்கு கொடுங்கள் என அவர்களது படைவீர்ரளின் கோரிக்கைக்கு ஏன் செவி சாய்க்கவில்லை? குருசாமிக்கே கொடுக்கவில்லை என்றால், சாமியே சரணம் ஐயப்பா .. ஹா ...ஹா... ஹா..

 

தமிழ் முற்போக்கு கூட்டணி பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கலின் பின்னணியில் நீங்கள் இருப்பதாக ...

ஹா...ஹா.. 😄 ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து போய் செய்யமுடியாத ஒரு காரியத்தை ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தியதாக காரணம் காட்டினால் அது யாருடைய பலவீனம்? உயர்பீடத்தில் ஒரு பெண் உறுப்பினர் இணைக்கப்படாத கட்சி பதிவு நடைமுறை பின்பற்றப்படாததுதான் பதிவு விண்ணப்ப நிராகரிப்புக்கு காரணம் என முன்னாள் செயலாளர் லோரன்ஸ் ஊடகங்களுக்கு அறிவித்து உள்ளாரே.

அதில் இருந்து தெரியவில்லையா அறுவருக்கும் அந்த விடயத்தில் உள்ள அனுபவக் குறைவே காரணம் என்று. அந்த ஆறுபேரில் ஒருவருக்கு கூட கட்சி ஒன்றை யாப்பெழுதி உருவாக்கிய அனுபவம் இல்லை. அதற்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்த ஒரு கட்சியில் தங்களைக் கட்டமைத்துக் கொண்டவர்கள்.

நான் அதில் இருந்து மாறுபட்டவன். எனக்கு யாப்பெழுதி, கட்டமைப்பு உருவாக்கி, கட்சியைப் பதிவு செய்த அனுபவம் உண்டு. என்வசம் இருந்த கூட்டணியின் ஆவணங்களை அவர்கள் நேர்முகத் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பொதுச் செயலாளர் சந்த்ரா ஷாப்டர் வீட்டுக்கே சென்று கையளித்து விடைபெற்றுக் கொண்டவன் நான். எனக்கு கட்சி தாவுதல், கட்சியை அழிக்கும் கலைகள் தெரியாது. கட்சியை மக்களிடையே கட்டமைப்புச் செய்யவும் அதற்கு ஆணைக்குழுவிலும் மக்களிடமும் அங்கீகாரம் பெறவும் தெரியும். அதனை எனது காலகட்ட அரசியல் நடத்தைகளில் நீங்கள் அவதானிக்கலாம்.

அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவேன் ஆனால் எதிர் அணியில் இணையவோ புதிய கட்சி தொடங்கவோ எண்ணமில்லை என்பதன் அர்த்தம் என்ன?

ஆற்றில் போட்டுவிட்டு கிணற்றில் தேடக்கூடாது என்பது அர்த்தம். தொழிலாளர் தேசிய சங்கம் எனது மானசீக ஆசான்கள் வி.கே.வெள்ளையன் - சி.வி.வேலுப்பிள்ளை போன்ற ஆளுமைகளின் உயர்ந்த எண்ணத்தில் உருவானது. எனது நேசத்துக்குரிய சங்க / கட்சி உறுப்பினர்களை நான் குறைசொல்ல தயாராக இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் என்னில் அன்பும் மதிப்பும் வைத்து இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.

இப்போது அங்கே ஒரு சிலர் எனக்கு அநீதி இழைத்தார்கள் என்பதற்காக முழு அமைப்பையும் சாடுவதற்கும், அதனை வாழை மரம் என்றும் எதிரணிதான் ஆலமரம் என்றும் வாய்கூசாமல் கூறி எனது குடும்பத்தை இகழ்ந்தும் எதிரணியைப் புகழ்ந்தும் பேசும் நாக்கு எனக்கு வாய்க்கவில்லை. அப்படி ஒரு அரசியல் வாழ்க்கை எனக்கு அவசியமும் இல்லை.இந்த உத்தரவாதத்தையே என்னைச் சந்திக்கவந்த சங்கத்தின் மூத்தவர்களிடம் கூறி வைத்தேன். அதனையே நடைமுறைப்படுத்தியும் வருகிறேன்.

நீங்களும் அனுஷா சந்திரசேகரனும் இணைந்து ஏன் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கக்கூடாது?

அவரிடம் அதிக நேரம் நான் பேசியது கூட இல்லை. ஆனால் ஊடகங்களில் அவரது உரைகளைக் கேட்டு இருக்கிறேன். அவரும் ‘அப்பா’ அரசியலை முன்வைக்கும் ஒருவராகவே இப்போதைக்கு எனக்குத் தெரிகிறார். அவரது அப்பா எங்களுக்கு ‘அண்ணனாக’ இருந்தபோது அப்போதும் எங்களுக்கு எதிரணியில் இருந்த ‘தம்பி’ யுடன் மல்லியப்புசந்தியில் கரம் கொர்த்ததை நேரடியாக விமர்சித்ததே ‘மல்லியப்புசந்தி’.

அது எழுதப்பட்டதும் எனது கள அரசியல் ஆரம்பமானதும் 2000 ஆம் ஆண்டுகளில். என்னிடத்தில் அண்ணன் - தம்பி - அப்பா - மாமா - மச்சான் அரசியலுக்கு இடமில்லை. நான் மக்கள் அரசியலை முன்வைத்து பேசி, செயற்பட்டு வருபவன். அனுஷா இப்போதுதான் அரசியல் கற்றுக் கொண்டு இருக்கிறார். ஒரு அண்ணனாக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்க மாத்திரமே இப்போதைக்கு என்னால் முடியும்.

மலையக மக்கள் முன்னணி பொதுச் செயலாளராக பேராசிரியர் விஜேசந்திரன் நியமிக்கப்பட்டு இருப்பது பற்றி ..

அவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்தும் ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்துத் தெரிவித்த முதல் ஆள் நானாகவே இருக்கலாம். மலையக அரசியலின் புதிய திசை வழியை தீர்மானிக்கும் திகதி அந்த நாள் என அறிவித்து உள்ளேன். பேராசிரியராக பணியில் இருக்கும்போதே மலையக அரசியல் கட்சி ஒன்றின் பொதுச் செயலாளராக ஒருவர் வந்திருப்பது இதுவே முதல்தடவை. மலையகம் அதற்கான பிரதிபயனைப் பெற வாழ்த்துகிறேன்.

இன்னுமொரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் கலாநிதி ஒருவர் வரவுள்ளதாக அறிய முடிந்தது. அரசியல் கட்சிக்குள் வந்து கலாநிதி ஆகிக் கொள்ளும் காலகட்ட சூழலில் கலாநிதி ஒருவர் கட்சி செயலாளர் ஆக வருவதை வரவேற்கிறேன்.அவருக்கும் முன்கூட்டியே வாழ்த்துகிறேன்.(அது யார் என என்னிடம் கேட்காதீர்கள்.ஹா ஹா. 😄 நீங்கள் ஊடகவியலாளர்கள்)

உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்குமானால் உங்களது அமைப்பில் இருந்தே மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாமே... ?

இப்போதே அங்கு ‘எங்க ஏரியா உள்ள வராத’ சண்டை ஆரம்பித்துவிட்டது. அந்தச் சண்டையில் ஏன் என்னையும் இழுத்து விடப்பார்கிறீர்கள். ஹா ஹா .ஹா

ஆறுமுகன் தொண்டமானின் அனுதாபப் பிரேரணையில் மலையகப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாமை குறித்து..?

அது அரசியல் அநாகரீகம் என உங்கள் பத்திரிகை ஆசிரிய தலையங்கமே எழுதி உள்ளதே. என்னைப்போல அவரை நேரடியாக பெயர் கூறி விமர்சித்தவர்கள் யாரும் இல்லை என நினைக்கிறேன். அதற்கு பாராளுமன்ற ஹன்சாட் சாட்சி பகரும். அதேநேரம் அவர் இறந்து இரண்டு மணித்தியாலங்களிலேயே நேரலையில் அஞ்சலி செலுத்தவும் அவர் பற்றிய நினைவுகளைப் பகிரவும் நான் தயங்கவில்லை. அதனை வானொலி தொலைக்காட்சி ஊடகங்களிலும் கூட செய்திருந்தேன்.

இறந்தவுடன் அவர் இல்லம் நோக்கி ஓட முடியுமென்றால், பாராளுமன்ற முன்றலில் குனிந்து கும்பிடுபோட்டு அவருக்கு அஞ்சலி செலுத்த முடியுமென்றால், நோர்வூட் மைதானத்தில் பூதவுடல் முன்னே உட்கார்ந்து காத்துக் கொண்டிருக்க முடியும் என்றால் ஏன் அனுதாபப் பிரேணையில் கலந்து கொள்ள முடியாது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

நான் பாராளுமன்றில் இருந்திருந்தால் அவரது அரசியல் செயற்பாட்டில் உள்ள நிறை குறைகளைச் சுட்டிக்காட்டி, அன்னாரது குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவித்து, அவரது பூதவுடலின் பேரில் மலையக மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி அவருக்கு உண்மையான அனுதாபத்தை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை அழுத்தி இருப்பேன்.அதில் 1000/= நாட்சம்பளம் முதல் மலையகப் பல்கலைக்கழகம் வரையான பல விடயங்கள் அடக்கம். கட்சி பேதங்களுக்கு அப்பால் அவையாவும் மலையக மக்களின் கோரிக்கைகள் என்பதுதானே உண்மை. அமரர் ஆறுமுகனின் பேரில் அவை நடந்தாலும் மக்களுக்குத்தானே நன்மை.

 

உங்கள் எதிர்கால அரசியல் நகர்வுகள் எவ்வாறு இருக்கும்?

நிகழ்காலத்தில் சர்வதேச மாநாடுகள், பங்கு பற்றல்கள் உரைகள் என இயங்கிக் கொண்டு இருக்கிறேன். கடந்த திங்களன்று கூட ஐக்கிய நாடுகள் இணை நிகழ்வு ஒன்றில் ஐ.நாவுக்கான ஜேர்மனிய நாட்டு தூதரகத்தின் ஊடாக மலையகப் பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஐ.நாவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தேன். அதற்கு முதல்வாரம் ஆசிய மதிப்பாய்வு மாநாட்டில் இலங்கை சார்பில் உரையிற்றி இருந்தேன்.

அதற்கு முதல் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் நெல்லைக் கிளை ஏற்பாட்டில் ஒரு மணித்தியால உரை ஒன்றை இணையவழியாக ஆற்றி இருந்தேன். கடந்த வாரம் உள்நாட்டு தேர்தல் முறைமைகள், அரசியலமைப்பு மாற்றச் செயற்பாடுகள் குறித்த சிவில் சமூக கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இருந்தேன்.ஊடகங்களில் அரசியல் கலந்துரையாடலில் கலந்து கொள்கிறேன்.

இதுபோல நிகழ்காத்தில் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் அரசியல் செயற்பாட்டில் இருப்பதால் எதிர்காலத்தில் அரசியலை நகர்த்துவது இலகுவாக இருக்கும் என நினைக்கிறேன். முக்கியமாக நாளை முதல் இந்த நேர்காணலுக்கு வழங்கப்படும் பதிற்குறிகளை செவிமடுக்க மாட்டேன்.எனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளுக்கான எனது ‘எனர்ஜியை’ வீண்டிக்க நான் விரும்பவில்லை.

நன்றி : வீரகேசரி வாரவெளியீடு - சிவலிங்கம் சிவகுமாரன்

 


மலையகத்தின் புதிய பரிமாணமாக….

ஈழம் என்று சொன்னால் நாம் எல்லாம் அதில் உணர்வுபூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் இணைந்திருக்கிறோம் . அதற்கு காரணம் 1983க்குப் பிறகு ஈழத்தில் சிங்களத்-தமிழ் இனக்கலவரத்தோடு ஏற்பட்ட போர்ச்சூழல். அதையொட்டி தமிழகத்தில் ஈழம் தொடர்பான ஒரு ஆதரவுக் குரல்கள் வெளிப்பட்டு இன்றுவரை அதனை வெவ்வேறு வடிவங்களில் அதனைத் தாங்கியவர்களாக உள்ளோம்.

அரசியல் களம் தாண்டி ஈழத்திற்கு இன்று இன்னொரு முகம் இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழ் இலக்கியம் தமிழ்ப்பண்பாடு என்பது தமிழகம் அளவினதாக  இருந்தது. ஆனால் இன்று தமிழ்ப் பண்பாடு என்பதும் தமிழ் இலக்கியம் என்பதும் தமிழகம் தாண்டி ஈழத்தில் வாழக்கூடிய மக்கள் சார்ந்ததாகவும் அதனையும் தாண்டி உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பண்பாடு சார்ந்ததாகவும் மாறி இருக்கிறது. ஏறக்குறைய தமிழ் இலக்கியமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனும் ஐந்திணைகள் வகுத்தது இன்றைக்கு கடல்வழியாகவும், வான்வழியாகவும் புலம்பெயர்ந்து சென்று நாடற்றவர்களாக, தங்களது மனோபாவங்களைத் தேசத்தைத் தாண்டியவர்களாக  கொண்டு வாழ்வோரின், அவர்களது வாழ்நிலப்பரப்பை  ஆறாம் திணையாக வேண்டி நிற்கிறது.

 

ஏறக்குறைய 1983 க்குப் பின்னாளில் ஈழத்தில் இடம்பெற்ற சூடான நினைவுகளை தமிழகத்தில் வைத்திருப்பது அரசியல் மட்டுமல்ல அதற்கு அங்கிருந்து வெளிவந்த படைப்புகளும் மிக  முக்கியமான பங்கை வகிக்கின்றது. குறிப்பாக சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் உள்ளிட்டோர் ஈழப்பிரச்சினை குறித்து எழுதிய கவிதைகள் அந்தப் பிரச்சினையை தமிழ்நாட்டில் புரிந்துகொள்வதற்கு பெரும் உதவியாக இருந்தது.

இப்படி ஈழம் பற்றிய ஒரு பார்வை இருக்கின்ற நிலையில், ஈழம் பற்றி நாம் யோசிக்கும்போது பெரும்பாலும் நம் கவனத்துக்கு வராத ஒரு பகுதி இருக்கிறது. அது ஈழம் என்ற பொது அடையாளம் எந்த அளவுக்கு கவனத்துக்கு வந்து இருக்கிறதோ அதற்கு இணையாக வந்திருக்க வேண்டிய ஒரு அடையாளம். ஒரு பேசுபொருள்.

ஆனால், துரதிஸ்டவசமாக அது அந்தளவுக்கு வரவில்லை. அது என்னவன்றால் ஈழத்தில் வாழக்கூடிய தமிழ் மக்கள் என்றால் அது ஒரு பகுதியைசார்ந்தவர்கள் இல்லை. அங்கு வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், கிழக்கில் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழ்வதைப்போலவே தெற்கில் மலையகத் தமிழர்கள் எனும் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதுதான். ஈழத்தில் மலையகத் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதை அறியாத ஒரு தலைமுறையினரே கூட இப்போது இங்கே தமிழகத்தில் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் என்று சொன்னால் அதில் மலையகத் தமிழர்களும் அடங்கியுள்ளார்கள் எனும் புரிந்துகொள்ளக்கூடிய ஓர் ஓர்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஓர் அவசியத்தில் நாம் இப்போது இருக்கிறோம்.

அத்தகைய ஒரு விழிப்புணர்வை, மலையகம் எனும் தனி அடையாளத்தை உருவாக்கி வளர்த்து வந்ததில் ஒரு பெரிய ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபின் தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளராகவும் அரசியல் செயற்பாட்hளராகவும் மலையகத்தை சர்வதேச மட்டத்திற்கும் கொண்டு சென்றதில் மல்லியப்புசந்தி திலகர் எனும் இந்த நூலாசியருக்கு ஒரு பங்கு இருக்கிறது.

ஏறக்குறைய 150 முதல் 200 வருட காலத்திற்கு முன்பு கோப்பி, தேயிலை முதலான பயிர்சார்ந்து பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் உழைப்பதற்காக தமிழகத்தில் இருந்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் இடம்பெயர்நது சென்றார்கள். இந்த 150-200 வருடகால வரலாற்றில் அவர்கள் தமிழக அடையாளங்களில் இருந்து முற்றிலும் விலகி ஈழத்தில் தனித்துவ அடையாளம் பெற்றவர்களாக அந்த வாழ்வாதாரத்தின் பின்னணியில் வாழக்கூடியவர்களாக பழகிப்போனர்கள். இப்போது அவர்களின் சொந்த நாட்டோடு எந்த தொடர்பும் இருக்க முடியாது.

அதேநேரம் ஈழத்தில் பாரம்பரியமாக  வாழ்ந்துவருகிற  தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவும் ஆகிப்போனார்கள். இப்படி பண்பாட்டு அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் தனித்துவமான, தனித்து நடாத்தப்புடுவதனால் அதுசார்ந்த தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களாக மலையகத் தமிழர்கள் உருவானார்கள். அவர்களுடடைய பிரச்சினைகள், போராட்டம் அனைத்து ஈழத்தமிழர்கள் எதிர்கொள்கின்ற அடையாளங்களை ஒத்ததாக இருந்த அதேநேரம் அவர்களுக்கென்றே தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டதாகவும் இருந்தது.

பெருமளவு தோட்டத் தொழிலாளிகளாக, உடல் உழைப்பாளர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுடைய உழைப்பு அவர்களுடைய  வாழ்வியல் முறை என்பது வேறாக இருந்தது. அவர்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு, தொழிற்சங்கங்களும், அந்த தொழிற்சங்கம் சார்ந்த அமைப்புகளும் அதன் தலைவர்களும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது

. இந்த நிலையில்தான் மலையகத் தமிழர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட ஒரு தனித்த இலக்கிய மரபு உருவானது. அந்த தனித்த இலக்கிய மரபு என்பது ஈழத்து தமிழர்கள் மத்தியிலான எழுத்துசார்ந்த மரபுபோல் அல்லாமல் வாய்மொழி பாடல்களாக, கீர்த்தனைகளாக, சிந்துகளாக இங்கிருந்து இடம்பெயரந்து சென்ற மக்கள், தாங்கள் இடம்பெயர்ந்துசென்ற அந்த வழிநடையின் துயரத்தை பாடல்களாக மாற்றினார்கள்.

அங்கே தோட்டத் துரைமார் எவ்வாறு அவர்களை நடாத்தினார்கள் அதற்காக எவ்வாறு, போராடினார்கள் என்பதை ஆரம்பத்தில் வாய்மொழியாகவும் பின்னாளில் எழுத்துருவிலும் இலக்கியங்களாக உருவாக்கியிருக்கிறார்கள். எந்தவகையிலும் மலையகத்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லக்கூடிய வகையிலே மலையத்தவர்கள் இலக்கியத்திலே ஒரு பொது அடையாளத்தை உருவாக்கியிருககிறார்கள். ‘மiகைளைப் பேசவிடுங்கள்’ எனும் தலைப்பே கூட வ.செல்வராஜா எழுதிய ஒரு நாடகத்தினதும்  தலைப்பு என்றே நூலாசிரியர் தன்னுரையிலே குறிப்பிடடுள்ளார்.

மல்லியப்புசந்தி என்பதே கூட அவர் முதலாவாக வெளியிட்ட கவிதைத் தொகுப்பின் பெயர்தான். அது மலையககத்திலே ஹட்டனிலே அமைந்திருக்கக்கூடிய மக்கள் சந்திக்கின்ற ஒரு இடத்தின் பெயர்   அது வெறும் இடமல்ல. அது ஒரு அடையாளம்.  அது அவர்களின் வாழ்வியலோடு இணைந்த விடயங்களைச் சொல்லுகின்றபோது ஒரு இடத்தின் பெயராக அல்லாமல் ஓர் வாழ்வின்  அடையாளமாகவே அமைந்துவிடுகின்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் முன்னுரையோடு நூலிசியரே உருவாக்கிய பதிப்பகத்தின் ஊடாக ‘மல்லியப்புசந்தி’ எனும் நூலை அவரே வெளியிட்டு இருக்கிறார்.

மலையக இலக்கியம் தொடர்பான ஒரு ஆய்வரங்கம் இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கல், காந்தி கிராமிய பல்கலைக்கழகத்திலே நடைபெற்றது. இலங்கை மலையகத்pல் இருந்து பல இலக்கிய ஆய்வறிஞர்கள் எழுத்தாளர்கள் அங்கே உரையாற்ற வந்திருந்தார்கள். அதன்போது ஈழத்தின் மிக முக்கிய எழுத்தாளுமையான தெளிவத்தை ஜோசப் அவர்களும் வந்திருந்தார். அவரின் வயதின் காரணமாக அவருடன் கூட வந்திருந்த இளையவரான  அவரது  உதவியாளர் என்றுதான்  மல்லியப்புசந்தி திலகரை நான் கணித்தேன். பின்புதான் தன்னை முன்னிலைப்படுத்தாத மூத்தவருக்கு உதவுகின்ற எளிமையான மக்கள் பிரதிநிதியாக நான் அவரை அறிந்துகொண்டேன். அதன் பின்னர் சமூகவலைதளத்தின் ஊடாக அவரை பின்தொடரந்தபோதுதான் அவரது முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக இருந்தது.

சமகாலத்தில் மலையகத் தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர்களில் திலகர் தனித்துவமானவராக விளங்குகிறார். அவர் கல்விப்புலமிக்கவமராக் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழி பேசுபவராக இருப்பது, இதழ்களில் எழுதுபவராக, கவிதை இயற்றுபவராக, மலையக இலக்கிய முன்னோடிகளைத்  தேடிச்சென்று ஒரு தொடர்பை உருவாக்கிக்கொள்பவராக, மலையகத்தின் வரலாறு பற்றிய ஓர் ஓர்மையை உள்வாங்கி அதனடிப்படையில் மலையக மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்பவராக இருப்பதை இவரிடத்தில் காண்கிறேன்.

இவற்றுக்கு மேலாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் மலையகத்துக்கு இருக்க வேண்டிய பக்கத்தை பிச்சினைகளை தனது அரசியல் முன்னோடிகளான மனோகணேசன், திகாம்பரம் போன்றவர்களின் வரிசையிலே இணைந்து முன்வைப்பவராக, மலையக மக்களின் பிரச்சினைகளை  சர்வதேச அரங்குகளிலும் பேசுபவராக பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பவராகவும் உள்ளார்.

சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது ஒன்று அல்ல அங்கு வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறானதாக இருக்கின்றது என்பதை  இணைத்துச் சொல்பவராகவவும் எடுத்துச் செல்லக்கூடியவராகவும் இவரை அடையாளம் காண முடியும்.  இது அவரது முன்னோடிகளுக்கு இல்லாத வாய்ப்பு.

அந்த வாய்ப்பினை மலையகத் தமிழர்களின் மாற்றத்துக்காக முன்னேற்றத்துக்காக இவர் செயற்படுத்திக்கொண்டிருபதை செலவிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த வளரந்த ஒருவரான   திலகர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கிறார் என்பது இங்கு கவனத்துக்குரியது. அந்த அனுபவம் அவருக்கு பெருமளவிலே உதவியிருக்கிறது.

ஆங்கிலேயர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடங்கள், சிறைச்சாலைகள் போன்றனவும் தொழிற்துறைகளில் உருவாக்கிய குடியிருப்புகள் அவர்களின் கண்காணிப்புக்கு ஏதுவாகவே அமைக்கப்பட்டுள்ளது. மலையகத்திலே அவை லைன் வீடுகள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய லைன் வீடுபகளில் பிறந்து வளர்ந்த திலகர் அத்தகைய லைன் வீடுகளை மாற்றி தனித்தனியான வீடுகளை அமைக்கும் எண்ணக்கருவை வலுப்படுத்துதல், அந்த பிரதேசங்களை கிராமங்களாக மாற்றுவதற்கான திறவுகோலாக மலையக அதிகார சபை ஒன்றை நிறுவுதல் முதலான விடயங்களில் அதிக அக்கறை காட்டியுளளார்.

அவ்வாறு உருவாக்கப்பட்ட அதிகார சபை சம்பந்தமாக இந்த நூலிலே விரிவாக எழுதியுள்ளார். அரசியல் செயற்பாட்டாளரான திலகர் ஒரு எழுத்தாளராக இருப்பதன் காரணமாக தினசரிகளில், வார இதழ்களில் மலையக மக்களின் வரலாற்றையும் கடந்தகால அனுபவங்களையும் ஏறிட்டு அதில் இருந்து அவர்களின் தேவை என்ன என்பதையும் அது எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது என்பதையும் அடையாளம் கண்டு தொடராக பல கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அத்தகைய கட்டுரைகளில் ‘அரங்கம்’, ‘ஞாயிறு தினக்குரல்’ ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

இந்த நூலினைப் படிக்கும்போது இரண்டு செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடியம். ஒன்று மலையகத் தமிழர் எனும் அடையாளம் எவ்வாறு உருவானது? அதற்கு முன்னர் அவர்களைச் சுட்டிய பெயர்கள் என்ன என்பன போன்ற விடயங்கள். மலையகத் தமிழர்கள் தொடர்ச்சியாக நடாத்திவந்திருக்ககூடிய போராட்டங்களுக்கு ஒரு ‘ஏஜன்ஸி இருக்கிறது. ஏஜன்ஸி என்றால்  இன்று அவர்களுக்கு கிடைத்துpருக்கக்கூடிய உரிமைகளுக்காக அவர்களே நடாத்தியிருக்கக்கூடிய போராட்டங்களை இந்த நூல் எடுத்துக்காட்ட முனைகிறது. ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட சமூகத்துக்கு இரண்டு விதமான போராட்டங்கள் அமையப்பெறுவதுண்டு.

ஒன்று வெளியில் இருந்து அவர்கள் மீதான அரசியல் பரிவுணர்ச்சியின் காரணமாக இரக்கப்பட்டோ அல்லது தார்மீக உணரச்சியின் அடிப்படையிலோ வெளியில் இருந்து அவர்களுக்காக போராடக்கூடிய ஒரு பகுதி. உலகாளவிய ரீதியில் அவ்வாறான போராட்டங்களே அதிகம் பேசப்படுவதாக இருக்கின்றது. இன்னொன்று அந்த சமூகமே தனக்கான உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம். ஒரு சமூகம் தமக்குத் தாமே நடாத்திக்கொள்ளும் போராட்டம் பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை. எழுதப்படுவதுமில்லை. திலகர் இந்த நூலை எழுதிச்செல்லுகின்றபோது மலையகம் ஏனும் அடையாளததை உருவாக்குவதில் இருந்து இன்று தமக்கான அதிகாரசபை சட்டத்தை  நிறைNவுற்றியது வரையாக தாங்கள் தன்னிச்சையாக நடாத்திவந்த போராட்டங்களை மிக ஏதுவாக தொகுத்துக்காட்டியிருக்கிறார்.

அதற்கான பொருள் அவர்களுக்காக மற்றவர்கள் பாடுபட்டார்கள் என்பதை புறக்கிணப்பதோ மறுப்பதோ அல்ல. ஒரு சமூகம் எப்Nபுhதும் வாய் மூடி கிடப்பதில்லை. அவர்களு;காக மற்றவர்கள் பாடுபடுவதுபோலவே, அவர்கள் அடக்கப்பட்டதற்காக அவர்களே கிளரந்ந்தெழுந்து போராடக்கூடிய ஒருவகைப் போராட்டம் ஒன்று இருக்கிறது. இந்த நூலில் என்னைக் கவர்ந்த அம்சமே, எங்களுக்கு ஒரு ஏஜன்ஸி இருக்கிறது. எங்களது முன்னோடிகள் கோ.நடேசய்யர் முதல் சிவலிங்கம் முதலானர்வகள்  எவ்வாறு அதனை முன்னகர்த்தி வந்துள்ளார்கள் என்பதை அவர் சொல்லமுனைவதுதான்.

மலையகத் தமிழர் வாழ்விலே இரண்டு விடயங்கள் ; பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று 1948 குடியுரிமைப்பறிப்புச் சட்டம். இந்தச் சட்டம் அவர்களின் இலங்கைக் குடியுரிமையை மறததது. அதற்க காரணம் அவர்கள் கொண்டிருந்த இந்திய அடையாளம். இரண்டாவது 1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தம். இந்த ஒப்பபந்தத்தின் அடிப்படையிலே இந்தியாவில் இருந்து இலங்கை சென்று அங்கு பல ஆண்டுகாலம் வாழ்ந்து தலைமுறைகளைக் கடந்தவர்கள்; திடீரெண இரண்டு அரசாங்கங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு நீங்கள் திரும்புங்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை.

இந்த இரண்டு சட்ட விடயங்களினால் இந்த மக்களின் நிலை இலங்கையில் இந்தியர்கள் என்றும் இந்தியாவில் சிலோன்காரர்கள் என்றும் அந்நியப்படுத்தப்படுவதை இந்த நூலிலே தெளிவாக விளக்குகிறார். இந்த இரண்டுமே அவர்களது அடையாளத்தை மறுப்பதாகவே தெரிகிறது. மறுபுறம் மலையகத்தில் இருந்து சமவெளிப் பகுதியான வன்னியிலே சென்று ஒரு பகுதியினர் குடியேறியது பற்றியும் அவர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்புது பற்றியும் விரிவாக குறிப்பிடுகின்றார்.

அதில் அந்தனி என்பவரைப் பற்றிய விரிவான ஒரு பதிவை இந்த நூலிலே பதிவு செய்துள்ளார். பெரியவர்களாக அல்லாமல் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் மகத்தான காரியங்கரளச் செய்கின்றபோது அவர்களது வரலாற்று அடையாளங்களைத் தேடித்தரவேண்டியது நமது கடமை. அத்தகைய ஒருவராக அந்தனி என்பவர் திகழ்ந்திருக்கிறார். அவருக்குரிய அடையாளததைத் தந்தமைக்காக திலகர் மிகுந்த பாராட்டுக்குரியவராகிறார்.

இந்த நூல் இலங்கை மலையகம் தொடர்பாக அறியாமல் இருப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டக்கூடியதாக இருக்கும். அறிந்திருப்பார்களானால் அவர்களுக்கு  ஒரு புதிய பரிமாணத்தை வழங்கக்கூடும். அதற்காகவே இருசாராரும் வாசிக்க வேண்டிய நூல். நூலாசிரியர் திலகருக்கு எனது வாழ்த்துக்கள்.

முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம்

பேராசிரியர்- அமெரிக்கன் கல்லூரி

மதுரை  08-11-2019

 


REALISTIC INTERPRETATION OF ENGLISH BOOKS 

K.S. Sivakumaran

He has a publication of his own called Bhagiyaa Publications. During the Corvid 19 lockdown period, he spent time reading serious valid books in English relating to his environ and thought it would be productive if he could interpret the essential unknown facts which even most of us do not know, leave alone the educated people from Malayagam.The former Member of Parliament for Nuwara Eliya, Thilakarajah is also a young literary figure known as Malliyappusanthi' Thilakar. Eighteen years ago, he was one of the enterprising students in the Journalism class at Colombo University. As an intelligent politician and a purposeful writer of promoting the activities of what is happening in the central hills (which the acronym “Malaiaham” stands.), he has established his identity.

What he did was to write a book in Tamil, of 200 pages calling it “Malaikalai Varaithal”. Malaikal means Mountains, here it also means the hills in upcountry. Varaithal means drawing or sketching, but here it means writing too.

He will launch his book shortly on his birthday that falls on the 29th of this month.

First, I shall give the names of his sourcebooks, which even serious students of contemporary history and sociology might have not read or hear as general information.

There are 20 books in all which an average person cannot read at stretch and then put the ideas in flexible Tamil. It is a stupendous task.
The books in English are:

 1. Time will write a song for you, (Contemporary Tamil Writing from Sri Lanka),
 2. Afro-Asian Poems (Anthology -Vol-1, Part -1)
 3. Tea & Solidarity (Tamil Women & Work in Post War Sri Lanka)
 4. The Indo-Lankans (Their 200-year Saga)- With photograph Illustrations- Part -1& Part-2
 5. Charred Lullabies (Chapter in an Autobiography of Violence)
 6. Endless Inequality (The Right of the Plantation Tamils in Sri Lanka)
 7. Archive of Memory (Reflections on 70 Year of Independence)
 8. Alienated Every Where (As the story on the condition of the Indian origin in Sri Lanka and Sri Lankan repatriates in India)
 9. Sri Lankan Repatriates in Tamil Nadu (Rehabilitation and Integration)
 10. The Epic of Tea (Politics in the Plantations of Sri Lanka)
 11. Analysis of Ages of Lives on Earth and Dravidian Culture (Shakthi Baliah’s research from Ravana till upcountry)
 12. Social Development and Poverty in the Plantation in Sri Lanka)
 13. Peoples and Cultures of Early Sri Lanka (A Study based on Genetics and Archaeology)
 14. Rehabilitation of Sri Lankan Repatriated- Acritical Appraisal- edited by Prof.V. Soorya Narayanan)
 15. Hill Country Tamil of Sri Lanka: Towards Meaningful Citizenship (a research report jointly presented by ISI+VR)
 16. Upcountry Tamils: Charting a New Future in Sri Lanka (Compiled by Daniel Pass and P Skanda Kumar- an Introduction)
 17. The Implementation of Outgrowing system in Selected Tea Plantation sector in Sri Lanka (a research study by Prof A Chandrabhose)
 18. A History of the Up-Country Tamil People in Sri Lanka (Leftist S Nadesans research book)
 19. The drum of a Herald (collection of articles by C Jeyashankar
 20. Tea & Solidarity - Mythri Jegatheesan 

My purpose here is not to evaluate the translations or to give an opinion on the contents but to let know the existence of such reading matter in both in English (and now) in Tamil so that interested researchers will make them as sourcebooks.

However, I came across some names which interested me. For example, one of the first Parliamentarians (1947), an English poet and Trade Unionist, C V Velupillai. Author of Born to Labour, and Human Cargo he has written mainly in English. He was married to a Sinhalese lady. In later stages, he wrote in Tamil too. Another name is famous journalist S Muttiah who was the Features Editor of the Sunday Times then. Souljah and Rodrigo were the versatile subeditors then.

They wrote on the Lankan Arts field widely. Should I mention that my pieces on Tamil literary scene also appeared in the late ‘50s & 60s. Mutthia later went back to India and wrote a few illustrated books on tourist interests and wrote a column on Chennai(then Madras) in The Hindu Both these gentlemen knew me. And so was M Vamadevan, who was in the SLAS and worked for the Planning Ministry and held high posts there.

Thilagar also mentions Lanka born academics in the U S- Maithree Jegatheesan, Valentine Daniel, Yogewary Vijayabalan a lawyer (now living in London), Geetha Ponkalan, Daniel Baas and Dr Siva Thiyagarajan and a few others in his book.

We must congratulate Malliyapoo Thilagar for the painstaking effort.

 


இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும்

( நேர்காணல் : யோ.தர்மராஜ்)

அரசாங்கம் வசம் ஜனாதிபதி பதவி இருக்கும்போது பாராளுமன்றத்தையும் தங்கள் பலத்தில் வைத்துக்கொள்ளவே ஆளுங்கட்சி தேர்தலைக் கோருகிறது. எதிர்கட்சி இப்போது பலமாக இருப்பதால் தேர்தலைப் பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருகிறது. எனவே இரண்டு தரப்பிலும் அவர்தம் சுயநலம் உண்டு. சிலவேளை எதிர் கட்சி தற்போது பெரும்பான்மை கொண்டிருக்காவிட்டால் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எனும் கேள்வியும் உள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், தேர்தலைப் பிற்பொடுவதால் நாட்டில் ஜனநாயக சூழல் உருவாவது பின்னோக்கிப் போகிறது எனும் அபாயம் உள்ளது இனி இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து உள்ளார்.

 

கொரொனா தொற்றுடன் உங்களைப் போன்ற அரசியல் தலைவர்களை காண முடியாதுள்ளதே ஏன்?

இந்த கொரொனா காலத்தில் எல்லோரும் வீட்டிலேயே இருங்கள் வெளியே செல்லாதீர்கள் எனும்போது எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை நீங்கள் எங்கே காணவேண்டும் என எண்ணுகிறீர்கள்?. சமூக சேவை செய்து களைத்துப் படுத்துறங்கும் ஓர் அரசியல்வாதியை நீங்கள் அவரது முகநூலில் பார்ப்பதில் திருப்தி அடையலாம்.அந்தப்படம் யாரால் எடுக்கப்பட்டது? எப்படி அவரது முநூலிலேயே பதிவேற்றம்பெற்றது பொன்ற மறுபக்கங்களும் அதில் உண்டு.

என்னால் முடிந்த பணிகளை வீட்டில் இருந்தவாறு செய்துகொண்டு எழுத்து வேலைகளில் அதிக கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறேன். அவை ஊடகங்களிலும் எனது சமூக வலைத்தள பக்கங்களிலும் வந்து கொண்டு இருக்கின்றன. அதனால்தான் நீங்களும் இப்போது என்னைப் பேட்டி காணும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அவசியம் என கருதப்பட்ட கூட்டங்களுக்குச் சென்று வந்து கொண்டு இருக்கிறேன் . தேவையானவர்களுடன் பேசி தீர்வுகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறேன் .

 

கொரொனா தொற்று அச்சுறுத்தலையடுத்து மலையக மக்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்களிலும் மலையக தலைவர்கள் அரசியல் இலாபம் தேடுவதா மக்களின் நகுற்றச்சாட்டை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அவர்கள் அரசியல்தலைவர்களாக அல்லது மக்கள் பிரதிநிதிகளாக அந்த நிவாரணப் பணிகளை முன்னெடுக்கிறார்களா? அல்லது “வேட்பாளர்களாக” நிவாரணப் பணி செய்கிறார்களா என்ற கேள்விக்கு விடை தேடினால் உங்களுக்கு இந்தக் கேள்விக்கான பதில் கிடைத்துவிடும்.என்னைப் பொறுத்தவரை தேர்தல் காலத்தில் இந்த கொரொனா இடர் வந்திருக்காவிட்டால் அரசியல்வாதிகள் தமது சொந்த நிதியில் இந்தளவுக்கு நிவாரணம் வழங்கி இருப்பார்கள் என நான் எண்ணவில்லை. எனவே வேட்பாளராக தனது பெயரை முன்னிறுத்தி நிவாரணம் வழங்குவது அரசியல் லாபம் என நீங்கள் கருதினால் நானும் ஆம் என்றேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும் அரசியல்வாதிகளின் பணி அரசாங்கத்திடம் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும் என்பது. அதனை எவ்வாறு செய்யலாம் எனும் ஆலோசனையை கொரொனா ஆரம்ப நாட்களிலேயே என்சாரந்த அரசியல் கூட்டணிக்கு நான் முன்வைத்தேன்.இன்றுவரை அது பற்றி அக்கறைகொள்ளாமை தொடர்பாக உள்ளக ரீதியாகவும் பகிரங்கமாகவும் எனது அதிருப்பதியைப் பதிவு செய்துள்ளேன்.

பாராளுமன்றம் இயங்கி இருந்தால் கட்சி அல்லது கூட்டணி எல்லைகளைக் கடந்து அந்த அழுத்தத்தை பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கி இருப்பேன். துரதிஸ்டவசமாக இப்போது அதுவும் இல்லை என்ற அடிப்படையில் கூட்டுப் பொறுப்பின் அடிப்படையில் செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம் அவ்வாறான ஒன்று நடக்காதது கவலைக்குரிய விடயம் . அரசியல் இயக்கங்களும் நிவாரணம் பொதி வழங்குவதோடு திருப்தி அடையுமானால் அவை தர்மஸ்தாபனமாகவே இயங்கிவிட்டுப் போகலாம்.

 

இவ்வாறான அசாதாரண நிலைமைகளில் கூட மலையத் தலைவர்களிடத்தில் ஒற்றுமையின்மை மக்களை பாதிக்காதா?

மலையக அரசியல் தலைவர்களிடம் மாத்திரமல்ல இலங்கையின் எந்த அரசியல் தலைவர்களிடத்திலும் அப்படியான ஒற்றுமையைக் காணக்கிடைக்கவில்லை. மாறாக உள் முரண்பாடுகள் கூட அதிகளவு வெளிப்பட்டு நிற்பதை அவதானிக்கலாம். இது இலங்கை அரசியல் கட்டமைப்புக்கு ஏற்பட்டு இருக்கும் சாபம்.

மலையக மக்களுக்கு எப்போதும் ஏமாற்றம் மட்டுமா கிட்டும், 1000 மற்றும் 50 ரூபா என

ஏமாற்றப்பட்ட மக்களுக்கு பின்னர் சம்பள உயர்விலும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அரசின் 5000 ரூபாவிலும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதற்கு அரசின் அக்கறையின்மையா

அல்லது மலையத் தலைவர்களின் பொறுப்பற்றத் தன்மை காரணமா?

இதன் பின்னணியைத் தேடி பார்க்க வேண்டியது ஊடகவியலாளர்களாக உங்களைப் போன்றவர்களது கடமை. நான் இது தொடர்பாக தொடர்ந்து பேசி வந்துள்ளேன் . கொரொனா இடர்கால ஆரம்பத்தில் இதனை வலியுறுத்தி கூறி இருந்தேன் .

இந்தப் பேட்டி வெளிவரும் இதே நாளில் உங்களது சகோதர ஊடகம் ஒன்றுக்கு விரிவான கட்டுரை ஒன்றையும் எழுதி உள்ளேன் . எனவே இங்கே சுருக்கமாக சொல்கிறேன்.

மலையக மக்கள் அரச பொது நிர்வாகத்தில் முழுமையாக உள்வாங்கப்படாமையே இதற்கான காரணம். அதற்கு பல தடைகள் உள்ளன. அவற்றை ஓரளவுக்கு நிவர்த்திக்கும் வகையிலேயே மலையக அதிகார சபை உருவாக்கப்பட்டது. அது பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டம். அந்த சட்டத்தை இன்னும் நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிக்க வில்லை. ஆனால் அந்தச் சட்டத்தின்படி அமையப்பெற்ற அதிகாரசபையின் அனைத்து வெற்றிடங்களும் நிரப்பபட்டுள்ளன. எனவே இப்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் அந்த அதிகாரம் கொண்ட பதவியில் இருப்போர் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என குறைந்த பட்சம் ஊடகங்கள் தானும் கேள்வி எழுப்பலாம்.

மார்ச் மாத சம்பளத்தில் 1000 ரூபா சம்பளம் உயர்வு கிடைக்குமென கூறியதை பெற்றுக் கொள்ள முடியாதமைக்கு கொரோனா காரணமாகிற்றா?

இல்லை. அது சாத்தியமில்லை என்பதை அமைச்சரவை அனுமதி வழங்கிவிட்டது என்ற அறிவிப்பு வந்த ஜனவரி மாதம் முதலே பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் நான் பகிரங்கமாக தெரிவித்து வந்துள்ளேன். கொரொனா வருவதற்கு முன்னர் அரசாங்கம் - கம்பனி - தொழிற்சங்கம் ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தது என்பதை மறந்துவிணக்கூடாது . மார்ச் 19 தான் கொரொனா ஊரடங்கு வந்தது. மார்ச் 1 முதல் கொடுப்பதாகவே சொன்னார்கள். பெருந்தோட்டத்துறை கட்டமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவராமல் 1000 ரூபா மட்டுமல்ல மலையகத்தின் 1000 பிரச்சினைகளுக்கும் தீர்வு இல்லை.

பெருந்தோட்ட மக்களுக்கு விடிவு கிடைக்குமென ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் கூறுகின்ற போதிலும் அரசுக்கு அரசு ஏமாற்றமடைவது பெருந்தோட்ட மக்களின் விதியா அல்லது மலையக அரசியல்வாதிகளின் தந்திர அரசியலா?

ராஜதந்திரமற்ற அரசியல் எனலாம். மக்களுக்கான அரசியலை முன்வைக்கும் இதயசுத்தியும், ஈடுபாடும், அர்ப்பணிப்பும் சார்ந்த அரசியல் பணி அவசியம். பாராளுமன்றத்தை சரியாக பயன்படுத்தவும் தெரிய வேண்டும். தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்காக சுதந்திரத்துக்குப் பின்வந்த அனைத்து மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள்ளையும் ஆய்வுக்கு உட்படுத்தி குறைந்த பட்சம் ஒருவர் எத்தனை மலையக பிரச்சினைகளை பிரேரணையாக முன்வைத்த உள்ளார்கள் என்பதைத்தானும் உங்களால் கண்டுபிடிக்க முடியுமானால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிடும்.

தேர்தல் ஆணைக்குழுவுடனான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் உறுப்பினர் என்ற வகையில் பாராளுமன்றத் தேர்தல் கள நிலவரங்கள் எவ்வாறுள்ளது?

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான தொழிலாளர் தேசிய முன்னணி யின் பொதுச் செயலாளர் என்ற வகையிலேயே நான் கலந்து கொள்கிறேன். எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தி எனப்படும் கூட்டணியின் அங்கத்துவ கட்சி என்றஙவகையில் மார்ச் 11 க்குப்பிறகு மே 13 மாத்திரமே ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அந்தக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகள் அடிப்படையில் ஆளும் கட்சியின் ஆதரவு கட்சிகள் தேர்தல் நடாத்தப்படவேண்டும் என்றும் எதிர்கட்சிகள் பிற்போடப்படவேண்டும் என்ற கருத்தும் வெளிப்பட்டது.

பிற்பொடைவது நல்லது எனும் எனது கருத்து கொரொனா பரவல் ஏதும் வந்துவிடும் எனும் அச்சந்தான். மற்றபடி தேர்தலைப் பிற்பொடுவதால் நாட்டில் ஜனநாயக சூழல் உருவாவது பின்னோக்கிப் போகிறது எனும் அபாயம் உள்ளது. அதனாலேயே தேர்தல். செலவுகள் குறித்து கேட்டிருந்தேன். இனி ஆறுமாதங்கள் கழித்துதான் தேர்தல் என்றாலும் அது இப்போதைய செலவுமதிப்பீட்டின் இரட்டிப்பைவிட அதிகரிக்கும் என ஆணையாளர் பதில் அளித்தார். இனி இலங்கையில் ஜனநாயகத்தை அதிக விலை கொடுத்தே நிலைநாட்ட வேண்டி இருக்கும்.

ஜூன் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா?  நடத்தாவிட்டால் அரசியலமைப்பின் படி அடுத்தக் கட்ட நகர்வுகள் எவ்வாறிருக்க வேண்டும்?

இன்றைய திகதியில் ஜூன் நடக்க வாய்ப்பில்லை. அது தொடர்பில் 9 வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. எனவே நீதிமன்ற தீர்ப்பு அடுத்த வாரம் வெளிவரும் வரை உறுதியான திகதியைக் குறிப்பிடமுடியாது. ஆனால் திகதி மாறியென்றாலும் தேர்தல் நடக்கும் சாத்தியமே உள்ளது. நடக்காவிட்டால் அதுநடைபெறும் வரை நாட்டை எப்படி நிர்வகிப்பது என்பதை தீர்மானிக்கும் அடுத்த வழக்குகள் இடம்பெற வாய்ப்புண்டு. எனவே நீதியையே மக்கள் எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது.

ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவதாக எதிர்க் கட்சியினர் குற்றச்சாட்டுவதில் உண்மையுள்ளதா?

ஜூன் முதலாம் திகதிவரை அவருக்கு அரசியலமைப்பு ரீதியாக பாராளுமன்றம் இன்றி நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரம் ஐனாதிபதிக்கு உண்டு. மார்ச் 2 முதல் ஜூன் 1 வரையான அந்த மூன்று மாதங்களுக்குள் தேர்தலை நடாத்தி புதிய பாராளுமன்றத்தை அமைக்கும் நிபந்தனையுடனேயே தனது அதிகாரத்தைக் கொண்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.எனவே தேர்தலை நடாத்த அவரது அணி முனைகிறது என கொள்ளலாம். ஆனால் கொரொனா இடர் இயல்பாக தேர்தல் திகதியை பின்கொண்டு சென்றதால் உருவாகியுள்ள புதிய சூழல் அரசியலமைப்பு திகில் நிலையைத் தோற்றுவித்துள்ளன.

அச்சத்துடன் தேர்தலுக்கான நகர்வுகளை அரசு முன்னெடுப்பது அரசின் சுயநலமா அல்லது அரசின் பலமா?

கொரொனா இல்லாவிட்டாலும்கூட எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆளும் கூட்டணி ஆட்சியமைக்கும் பலத்தை பெறும் அரசியல் சூழ்நிலையே நாட்டில் உள்ளது. கலைக்கப்பட்ட பாராளுமன்றில் பெரும்பான்மைக் கொண்டிருந்த ஐக்கிய தேசிய முன்னணி ஐக்கிய தேசிய கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும் இரு பிரிவுகளாக களம் இறங்குகின்றனர் என்பதே இதற்கான பிரதான காரணமாகும்.

இந்த நிலையில் அரசாங்கம் வசம் ஜனாதிபதி பதவி இருக்கும்போது பாராளுமன்றத்தையும் தங்கள் பலத்தில் வைத்துக்கொள்ளவே ஆளுங்கட்சி தேர்தலைக் கோருகிறது. எதிர்கட்சி இப்போது பலமாக இருப்பதால் தேர்தலைப் பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு கோருகிறது. எனவே இரண்டு தரப்பிலும் அவர்தம் சுயநலம உண்டு. சிலவேளை எதிர் கட்சி தற்போது பெரும்பான்மை கொண்டிருக்காவிட்டால் எப்படியான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் எனும் கேள்வியும் உள்ளது. கொரொனா அச்சுறுத்தல் தொடர்பாக சுகாதார துறை அறிக்கை சாதகமான சமிக்ஞையை காட்டினால் தேர்தலை நடாத்திவிடுவது ஒட்டுமொத்த முடிவைத் தந்துவிடும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பாராளுமன்றத் தேர்தலில் உங்னளைப் போன்ற படித்த அரசியல்வாதிகளுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

படிப்பதற்கு பணத்தை செலவிட்டுவிட்டேன். அவை என்னுள் மனித மூலதனமாகவும் ( Human. Capital ) ஐந்தாண்டு பதவி காலத்தின் பின் சமூக மூலதனமாகவும் ( Social Capital ) ஆகவும் மாறி இருக்கிறது. ஒரு மனிதனுக்குள் இருக்கும் மனித மூலதனத்தையோ அவன்பால் சார்ந்திருக்கும் சமூக மூலதனத்தையோ உணர்ந்து கொள்ளும் அரசியல் கலாசாரம் நம் இடையே இன்னும் ஏற்படவில்லை என நினைக்கிறேன். எனது படிப்பு செலவுகளுக்கு தோட்டத் தொழிலாளிகளான எனது பெற்றோரின் உழைப்பும் சிறுவயது முதலான உழைப்பும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

“திலகர் நன்றாக பாராளுமன்றில் பேசுகிறார்” என்று யாராவது சொன்னால், அது அம்மா அப்பாவின் உழைப்பின் விளைச்சல் என அவர்களுக்கே அதனைக் காணிக்கையாக்குவேன். அந்த அம்மா அப்பா போல ஆயிரமாயிரம் அம்மா அப்பாவின் பிள்ளையாக அவர்களுக்கான குரலாக ஒலிப்பதே எனது இலக்கு. கடந்த முறை போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்ட போது அந்த ஆயிரமாயிரம் அம்மா அப்பாக்களும் சகோதரர்களும் சகோதரிகளும் எனக்கு அறுபத்தேழாயிரம் வாக்குகளை வழங்கி ஆசிர்வதித்திருந்தார்கள். அதற்கான நியாயத்தை ( justify ) நான் கடந்த நான்கரை வருடங்களில் வழங்கி உள்ளேன் என நம்புகிறேன். அந்த திருப்தியோடு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். இந்தமுறை யும் களமிறங்கியிருந்தால் எனக்கான ஆசீர்வாதம் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும் என்பது எனது ஆழமான நம்பிக்கை.

தேசியப் பட்டியலில் தெரிவு செய்வது குறித்து முன்னரே உங்களிடம் பேசப்பட்டதா அல்லது கட்சியே தீர்மானித்து உங்களிடம் அனுமதிக்கோரியதா?

இல்லை. கட்சி மட்டத்தில் உத்தியோகபூர்வமாக ஒரு கூட்டம் நடாத்தப்பட்டு அந்த முடிவு எடுக்கப்படவில்லை. மார்ச் முதலாம் திகதி இடம்பெற்ற தேசிய சபை கூட்டத்தில் பின்னர் தீர்மானிக்கப்படும் என சொல்லப்பட்டபோதும் அவ்வாறு எந்த கூட்டமும் 19 ம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் வரை நடாத்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு தலைமையினால் அறிவிக்கப்பட்டது. அதன்போது கட்சி உயர்பீடத்தையோ நிர்வாக சபையையும் கூட்டுவதற்கான வாய்ப்பு இருக்கவில்லை. ஆனால் கூட்டணி யின் உயர்பீடம் மார்ச் 15 கூடியது. அதிலும் எனக்கு அறிவிக்கப்பட்டதை நானே கூட்டணி உயர்பீடத்துக்கும் அறிவித்தேன்.

அப்போதைய சூழலில் நிபந்தனைகளின் அடிப்படையில் தேசிய பட்டியலுக்கான பெயர் பிரேரணையை ஏற்றுக் கொண்டேன். ஆனால் அந்தக்கூட்டத்துக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் காரணமாக தேசிய பட்டியலிலும் எனது பெயர் இடம்பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற முடிவுக்கு வந்து அதற்கான வேட்பு மனுவிலும் கையொப்பம் இடுவதில் இருந்தும் என்னைத் தவிரத்துக் கொண்டேன். அப்போதும் தொடர்ந்து கட்சியில் இயங்கும் உடன்பாடு எனக்கு இருந்தது. எனினும் வேட்புமனுவுக்கு முதல்நாள் தலைமை தனிப்பட்ட ரீதியில் எனக்கு உத்தரவாதம் அளித்து எனது இல்லத்துக்கு வந்து அழைத்துச்சென்று மனுவில் கையொப்பம் இடக் கோரியதன் பின்னணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் எனது பெயரும் உள்ளது. அதனைப் பெற்றுக் கொடுப்பதை கட்சித்தலைமையும் கூட்டணி உயர்பீடமுமே இனித் தீர்மானிக்க வேண்டும்.எனது கையில் ஒன்றும் இல்லை. ஏனெனில் 2010 ல் நான் நடந்த நாடகத்தின் காட்சிகளில் நான் திரும்பவும் நடிக்கத் தயார் இல்லை.

 

உங்களைப் போன்றவர்களை போட்டியிடுவதிலிருந்து புறக்கணிப்பதன் ஊடாக பாராளுமன்றத்திற்கு இளையத் தலைமுறையினரின் வருகைகான கதவுகள் மூத்த அரசியல் தலைவர்களால் மூடப்படுகின்றதாக நினைக்கின்றீர்களா?

இளமைத்முடிப்புடைவராக இருக்கவேண்டும், படித்தவராக இருக்கவேண்டும், பாராளுமன்றத்தில் பேசக்கூடியவராக இருக்கவேண்டும் என்பது போலவே பணம் படைத்தவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இந்த அரசியல் சூழலில் இருக்கிறது. நான் அதிஷ்டவசமாக அரசியலுக்கு வந்தவனல்ல. திட்டமிட்டே வந்தவன். யாரையும் நட்டப்படுத்தி நான் வரவில்லை. என்னோடு பயணித்தவர்களை இணைத்துக் கொண்டே எனது பயணம் செல்கிறது. என்னிடம் ஒரே கொள்கை. ஒரே கட்சி. எனது போராட்டங்களை அதற்குள்ளேயே நிகழ்த்துவேன். அஞ்சி ஓடமாட்டேன்.

சமூகத்திற்கான அரசியல் ஒன்றை முன்னெடுப்பதில் எதிர்கட்சியுடனான போராட்டத்தை விட உள்கட்சி கட்டமைப்பை கட்டி எழுப்புவதே கடினம் என்பது அரசியல் யதார்த்தம். ஊருக்குள் ஒரு மரணாதார சங்ககம், கலை, இலக்கிய மன்றம், விளையாட்டு கழகம் போன்றவற்றில் கூட இந்த உள் அரசியல் பிரச்சினைகளை பார்க்கலாம். இப்போது மலையக அரசியலை கட்சி பேதமின்றி விமர்சிக்கும் எல்லோரும் சேர்ந்து ஒரு கட்சியை தொடங்கினால் மலையக மக்களுக்கான தூய்மையான அரசியல் அமைப்பு உதயமாகிவிடும். ஏனெனில் இன்றைக்கு மலையக அரசியலை விமர்சிப்பவர்களே அதிகம் . அதற்கான காரணம் கூட எல்லோரிடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் அத்தகைய கட்சி ஒன்றை அவர்களால் ஏன் ஒன்றிணைந்து உருவாக்கிவிட முடியாதுள்ளது. இதுதான் அரசியலில் உள்ள பிரச்சினை என்பது புரியும்.

எனவே தொழிலாளர் தேசிய சங்க மீள எழுச்சிக்கு வித்திட்டவன் என்ற தகுதியும் தொழிலாளர் தேசிய முன்னணி யின் ஸ்தாபக செயலாளர் என்ற பலமும் என் இடத்தில் உண்டு. அதனடிப்படையில் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை தொடரும். கதவுகளை மூட நான் அறை அரசில்காரன் அல்ல. கள அரசியல்காரன்.

நன்றி : ஞாயிறு தினக்குரல்

 


பூவெலிக்கட மரணங்களும்  மதிப்பாய்வும்

மயில்வாகனம் திலகராஜா ( முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

கண்டி பூவெலிக்கட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து மூன்று உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது. அந்த உயிர்களின் பெறுமதி குறித்த கேள்வியே இன்று எம் முன் நிற்கும் கேள்வி. அவர்கள் பாதுகாப்பான ஒரு இல்லத்தில்தான் வாழ்ந்தார்கள். ஆனால் அவர்கள் அருகாமை வீடு பாதுகாப்பு இல்லாதவகையில் அமைக்கப்பட்டதனால் அம்மாவும் அப்பாவும் குழந்தையும் என ஓர் அழகிய குடும்பம் இந்த மண்ணில் இருந்து பிரிந்து இலங்கை நாட்டுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுத்துச் செல்கிறது.

அந்தப் பாடம்தான் மதிப்பாய்வு. கடந்த பாராளுமன்ற காலத்தில் ( 2015 -2020) ஓர் இனத்தின் / சமூகத்தின் பிரதிநிதியாக ‘மலையகம்’ என்ற சொல்லை எந்தளவுக்கு உச்சரித்து இருக்கிறேனோ அதே அளவுக்கு நாட்டிற்காக ‘ மதிப்பாய்வு’ என்ற சொல்லையும் உச்சரித்து வந்துள்ளேன். இந்த மலையகம், மதிப்பாய்வு இரண்டையும் சுமந்து கொண்டே சர்வதேச மாநாடுகளிலும் திரிந்தேன்.

இப்போது மலையகத்தை ஒரு புறம் வைத்துவிட்டு மதிப்பாய்வு பற்றி தெரிந்து கொள்ளுந் தேவையை இறந்து போன இந்த அழகிய குடும்பத்தின் பெயரில் அஞ்சலி செலுத்தி அறிந்து கொள்வோம்.

மதிப்பாய்வு ( Evaluation) என்பது ஒன்றும் உலகத்தில் இல்லாத ஒரு பூதம் கிடையாது. குறிப்பாக ‘மேற்கு நாடுகளில் எல்லாம் சரியாக இருக்கிறது’ என்கிற மனநிலை இந்த மதிப்பாய்வு கலாசாரந்தான். அதனை இலகுவாக புரிந்து கொள்ள இந்த பூவெலிக்கட சம்பவத்தை எடுத்துக்கொள்வோம்.

ஒரு வீடு கட்டுவது என்றால் அதில் பங்கு கொள்ளும் நிறுவனங்கள் என நாம் அவதானத்தில் கொள்ள வேண்டிய நிறுவனங்களைப் பார்ப்போம்.

காணி ( காணித் திணைக்களம் - land department ), அந்த மண் அதில் அமைய வேண்டிய கட்டடம் ( தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் - National Building Research organization - NBRO) அதற்கு அடிப்படை உட்கட்டுமான வசதிகள் வழங்கும் நிறுவனங்கள் ( Local Government - for infrastructure உள்ளூராட்சி மன்றங்கள்) போன்றவற்றுடன் குறித்த பகுதியின் சூழல் பிரச்சினைகளை கவனிக்க மத்திய சுற்றாடல் அதிகார சபை ( Central Environmental Authority ) பாதைகள், பாலங்கள், மதகுகள், போன்றவற்றை அமைப்பதன் பொறுப்பு நிறுவன ( RDA, PRDA, Local Government , DS ), நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ( Drinking Water & Drainage ) தொடர்புடைய தேசிய மற்றும் உள்ளூர் நிறுவனங்கள், ( National Water supply & Drainage board ) (இதில் கழிவகற்றலில் அசுத்த நீர் மலசல கூட கழிவுகள் என இரண்டு வகை உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது.) தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ( Tele Communication ) மின்சார விநியாக நிறுவனம் ( electricity board ) இப்படி பல அமைப்புகள் சம்பந்தப்படுகின்றன.

ஆனால், இந்த நிறுவனங்கள் இடையே இலங்கையில் ஒரு ஒருங்கிணைப்போ கூட்டிணைந்த செயற்பாடுகளோ இல்லை. காணி திணைக்களத்தை ‘உறுதி’ வாங்க மட்டுமே பயன்படுத்துகிறோம். மலைப்பிரதேசங்கள் அதுவும் குறிப்பாக தோட்டப்பகுதிகளுக்கே விசேடமாக கட்டட ஆய்வு நிறுவனமும், எப்போதாவது சூழல் பாதுகாப்பு நிறுவனம் எதேட்சையகவும் பயன்பாட்டுக்கு வரும். மற்றப்படி ஏனைய நிறுவனங்கள் அவரவர் இஷ்டத்தைக்கு அனுமதியைக் கொடுக்கிறார்கள். அதற்குள் ஊழல் உச்ச அளவிலும் நடக்கிறது.

வீதியை ‘கார்ப்பட்’ இட்ட பிறகுதான் குடிநீர் வழங்கும் நிறுவனம் தடதடவென இயந்திரம் போட்டு உடைப்பார்கள். அவர்களது வேலை முடிந்ததும் அள்ளிப்போட்டு மூடிவிட்டு போவார்கள். அடுத்து தொலைபேசி, மின்சார சபை வந்து தனித்தனியாக குழிதோண்டி மூடிவிட்டு போவார்கள். காப்பட் இட்டவீதி மீண்டும் குண்டும் குழியுமாக இருக்கும்.

ஒரு ஒழுங்கையில் இரண்டு மாடி கட்டடம் தான் அமைக்கலாம் என்ற விதி இருந்தால் அதில் ஒரு வசதிகாரர் ஐந்து மாடி கட்டுவார். ஏன் ‘அப்பார்ட் மண்ட்’ கூட கட்டுவார்கள். அதற்கு அனுமதி எடுத்துக் கொள்ளும் ‘நுட்பங்கள்’ அவர்களுக்குத் தெரியும்.

ஒரு ஒழுங்கைக்குள் திடீரென ஒரு ‘ அப்பார்ட்மண்ட்’ வந்தால் வீதிப் பாவனை (மக்கள் - வாகனம்), நீர்ப்பாவனை ( குடிநீர் - கழிவு நீர்), என பலவிடயங்கள் விரிவுபடுத்தல் வேண்டும். அதற்கான வாய்ப்பும் வேண்டும். ஒரு வீட்டுக்கு ஒரு அங்குல அகல குடிநீர்க்குழாய் வழியாகவந்த குடிநீரை ஒரு பத்து மாடி ‘அப்பார்ட்மென்டுக்கு’ எடுக்க பயன்படுத்துவார்கள். அதற்காக நிலக்கீழ் தாங்கி அமைத்து ‘மோட்டார்’ போட்டு மேலே தாங்கிக்கு ஏற்றி ‘அப்பாட்மென்டின் கம்பொட்டபல்’ ஐ உறுதி செய்வார்கள். சுற்றியுள்ள மக்களின் வீடுகளுக்கு தண்ணீர் பொகாமல் ‘அன்கொம்பட்டபல்’ ஆவது பற்றி இவர்களுக்கு அக்கறையும் இருக்காது.

இதுபோல நேரெதிர் பக்கங்களைப் பேசிக் கொண்டே போகலாம்.

சரி, மீண்டும் பூவெலிக்கட சம்பவத்துக்கு வருவோம். இப்போது உணரப்பட்ட புவி நடுக்கம், மாடி வீட்டுக்கார்ரகள் தெரிந்து கொண்டே ஓடிவிட்டார்கள், அருகில் உள்ள வடிகால் அல்லது கழிவுக் கால்வாய் அமைததவர்கள் காரணம் என்றெல்லாம் கதை வருகிறது. ஆனால், மேலே கூறிய எல்லா நிறுவனங்களும் இந்த விடயங்களுக்கு பொறுப்பு என்பதுதான் ‘மதிப்பாய்வு’. அதாவது நடைபெற்ற தவறுக்கு பொறுப்பு எனக் கொள்ளக்கூடாது. இத்தகைய தவறு நடக்காமல் இருப்பதற்கான பொறுப்பு.

இவற்றை ஒன்றிணைத்து செயற்பட இலங்கை நாட்டில் ஒரு தேசிய கொள்கையே இருக்கவில்லை. 2002 / 2004 ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு பின்னர் ஆட்சி மாற்றத்தால் கைவிடப்பட்டு 2013 ல் எதிர்கட்சியில் இருந்தபோது கபீர்ஹாசிம் ( பாராளுமன்ற உறுப்பினர்) தூசுதட்டப்பட்டு 2016 அவரது வழிகாட்டலில் நாங்கள் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு உயிர்கொடுத்து 2018 செம்தெம்பர் 14 பிரதம் ரணில் விக்கிரமசாங்க தலைமையில் “தேசிய மதிப்பாய்வு கொள்கையை” அமைச்சரவை அங்கீகாரத்துடன் கொண்டுவந்தோம்.

அது தொடர்பான ( இந்த கட்டட அமைப்பு மட்டுமல்ல அதற்குள பல பாரிய தேசிய திட்டங்கள் முதல் சட்ட விடயங்கள்வரை அடக்கம்) சர்வதேச மாநாட்டினை மூன்று நாட்கள் கொழும்பில் நடாத்தினோம். ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதிசபாநாயகர் ( ஆனந்த குமாரசிரி - இலங்கை பாராளுமன்ற அமைப்பு தலைவர்), கபீர் ஹாசிம் ( சர்வதேச பாராளுமன்ற அமைப்பு தலைவர்) மயந்த திசாநாயக்க , நான் ( கட்டுரையாளர் ) பொருளாளர் என செயற்பட்டோம்.

வெற்றிகரமான மாநாட்டின் விளைவாக 75 நாடுகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 200 க்கு மேல் வருகை தந்திருந்தார்கள். கொள்கை வடிவமைப்பு விடயத்தை அறிந்து கொள்ள மயந்த திசாநாயக்கவை சிறப்பு அதிதியாகவும் மதிப்பாய்வுக்கான பாராளுமன்ற நிலையியல் குழுவை அமைத்தல் வேண்டும் என்ற எனது யோசனைக்காகவும் கிரிகிஸ்தான் நாட்டு பாராளுமன்றங்களுக்கு நாங்களை அழைக்கப்பட்டு உரையாற்றச் செய்யப்பட்டோம்.

கிரிகிஸ்தான் ( முன்னைய சோவியத் நாடு ) நாட்டில் எங்கள் இருவரையும் சபாநாயகரின் இரண்டு பக்கங்களிலும் அமரச் செய்து கௌரவம் செய்தார்கள். எங்கள் இருவரோடு கபீர் ஹாசிம் அமைச்சரையும் அமரவைத்து பாராளுமன்ற ஊடக அறையில் பேட்டி எடுத்து கிரிகிஷ் மொழியில் வெளியிட்டார்கள். கிரிகிஸ்தானில் மதிப்பாய்வு சட்டம் கொண்டு வந்தார்கள். பிலிப்பைன்சில் கொள்கை கொண்டு வந்தார்கள். அதற்கு உந்துதல் இலங்கையில் நடந்த மாநாடு என்று எங்களைப் பாராட்டினார்கள். கிரிகிஸ்தான் என்னை இரண்டு தடவை அந்த நாட்டுக்கு அழைத்தது.

இந்ந விடயத்தில் சட்டத்தை கண்காணிக்கும் அம்சமும் அடங்கும். அதாவது நாங்கள் உருவாக்கிக் கொள்கிற சட்டத்தை காலத்திற்கு காலம் மதிப்பாய்வு செய்து மறுசீரமைத்தல் வேண்டும் என்பது. சட்ட உருவாக்கத்தின் முன்னரும் பின்னரும் கூட இது நடக்கவேண்டும். இதனை கண்காணிப்பு ( scrutinizing) எனலாம். இதுவும் மதிப்பாய்வு கோட்பாட்டு அடிப்படையில் நான் முன்வைத்து அந்த முன்மொழிவை சமர்ப்பிக்க ஜனநாயகத்துக்கான வெஸ்ட் மினிஸ்ட்டர பவுன்டேசன் ( WFD) என்னை இங்கிலாந்துக்கு அழைத்து கருத்து பகிரச்சொன்னது. அதனை உயர்மட்ட அரசியல் உரையாடல் என்பார்கள் ( high level political forum ). அதில் அதிகபட்சம் 15 பேர்தான். இங்கிலாந்து பிரபுக்கள் சபை உறுப்பினர்கள் முதல் ஹல் பல்கலைக்கலக பேராசிரியர்கள்வரை அதில் அடக்கம்.

ஈஸ்ட்டர் தாக்குதல் நடந்த இரண்டு நாளில் நான் இங்கிலாந்தில் நின்றது இதற்குத்தான். என்கூட பாராளுமன்ற ஆய்வாளர் அஜிவாடீனும் கலந்துகொண்டார். எனது கருத்துக்களை ஏற்றுக்கொண்டு உடனடுத்து இடம்பெற்ற கிழக்காசிய மாநாடு ஒன்றில் உரையாற்ற வருமாறு அழைத்தார்கள்.

அவர்களே அனுசரணையும் வழங்கினார்கள். மியன்மார் நாட்டில் சுமார் 1500 பேராளர்கள் மத்தியில் இந்த Pre & Post Legislative Scrutinization சம்பந்தமாக உரையாற்றினேன்.

அவுஸ்திரேலிய, இந்தோனேசிய, இங்கிலாந்து அரசியல்வாதிகள் அறிஞர்களுடன் அமர்ந்து பல கேள்விகளுக்கும் பதிலும் அளித்தேன். இதே மாநாட்டில் இலங்கைப் பாராளுமன்றத்தில் இப்போதைய அனுபவங்களைப் பகிர பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் டிக்கிரி தென்னக்கோன் மற்றும் பாராளுமன்ற அலுவலர் நிப்புனிக்கா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். “நீங்கள் எமது நாட்டிற்கு பெருமை சேர்க்கிறீர்கள்” என்று அந்த நிகழ்வு முடிய என்னை வாழ்த்தினார்கள்.

 

இலங்கையில் அப்படி பெருமைப்படும்படியாக ஒன்றும் நடந்துவிடவில்லை. ஆனால் ஒன்று, பாராளுமன்றத்தினுள் மதிப்பாய்வுக்கான செயன்முறைக்கு ஒரு நிலையான குழு வேண்டும் என அதனைத் தீர்மானிக்கவும் மதிப்பாயவ்வு சட்டம் இயற்றவும் ஒரு தெரிவுக்குழு வேண்டும் என்ற எனது முன்மொழிவை ஏற்று சபாநாயகர் கரு ஜயசூரிய அனுமதி அளித்தார். எனது வேண்டுகோளை ஏற்று அந்த முன்மொழிவுக்கு மக்கள் விடுதலை முன்னணியும் ஒப்புதல் அளித்து கைச்சாத்து இட்டது. அந்தக் குழுவுக்கு பிரதி சபாநாயகர் தலைமை வகித்தார். இப்படியான ஒரு குழு அமைந்தது இலங்கைப் பாராளுமன்றத்தில்தான் என்பது உலகப் பாராளுமன்றத்திற்கே முதன்முறை என்ற பெருமை உண்டு. அதனை முன்மொழிந்தவன் என்ற பெருமை வேண்டுமானால் எனக்கு வரும்.

அப்படி ஒரு நிலையியற் குழு அமைந்தால் ( Standing Committee ) அதன் பெயர் CODE ( Committee on Development Evaluation ) என பெயர் வைக்கலாம் என்றும் முன்மொழிவு செய்துள்ளேன். இது COPE போன்றது( Committee on Public Enterprises). COPE க்கும் CODE க்கும் என்ன வித்தியாசம் என்றால் COPE தவறுகள் நடந்த பின்னர் அதனை விசாரிக்கும். மரண விசாரணை மாதிரி அதுவும் தேவை. CODE மரணம் நடக்கும் முன்பே உரிய தற்காப்பு வேலையைச் செய்யும். அது எப்படி என்பதை விரிவாக உரை வழங்குவதே எனது சிந்தனையும் பணியுமாக இருந்தது. இதுதான் மதிப்பாய்வில் எனது வகிபாகம்.

இந்த விடயங்களை எல்லாம் முன்னிலைப்படுத்தி அமைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு மதிப்பாய்வு சட்டமூலத்த்தை தயாரித்து , நிலையியில் குழு மாத்திரமல்லாது சுயாதீன ஆணைக்குழு அமைக்கவும் பரிந்துரைத்தது. ஆனால் உத்தியோகபூர்வ அறிக்கை சமர்பபிக்க முன்பதாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது.

இப்போது பூவெலிக்கடை சம்பவத்துக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வேண்டுமாம். ஹெம்மாத்தகமவில் விழப்போகும் கட்டடத்தை இப்போதே அடையாளம் கண்டு விட்டார்கள். அதற்காக அமையப்பொகும் குழு அதனை வீடியோ ஆதாரங்களுடன் இப்படித்தான் விழுந்தது என அறிக்கையிடலாம்.

இப்படியான விபத்துக்களைத் தவிர்க்க, அப்பாவி மரணங்களைத் தடுக்க நாட்டை நிலைபேறான அபிவிருத்தி நோக்கி இட்டுச்செல்ல ஜனாதிபதி விசாரணைக் குழுக்களால் மட்டும் முடியாது. ஊழல் அற்ற மக்கள் மனநிலை, ஊழல் செய்யாத அதிகாரிகள் அவசியம். அதற்கேற்ப கொள்கை உருவாக்கம், சட்ட ஏற்பாடுகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் அவசியம். அதுவே பாராளுமன்றத்தின்/ உறுப்பினர்களின் பணிகளாக இருத்தல் வேண்டும்.

மதிப்பீடுகளில் (Estimation ) ( நிதிப்பெறுமானத்தில்) இருந்து ஆரம்பமாகும் கட்டுமானங்கள் (construction ) ( மதிப்பாய்வு - மதி ( அறிவுப்) ப்பெறுமானத்தில் Evaluation) இருந்து ஆரம்பிக்கப்படல் வேண்டும். இது அரசியல்/ கட்சி கட்டுமானத்துக்கும் பொருந்தும்.

இப்போதைய 20 வது திருத்த முன்மொழிவில் அரச நிறுவனங்களுக்கு கணக்காய்வே ( Auditing ) வேண்டாம் என்கிறார்கள். சுயாதீன ஆணைக்குழு ( Independent Commission ) வேண்டாம் என்கிறார்கள்.ஏற்கனவே COPE ஐ முறையாக செய்த சுனில் ஹந்துனெத்தியை மக்கள் வேண்டாம் என்றும், CODE ஐ முன்மொழிந்த மயில்வாகனம் திலகராஜை தலைவர்கள் வேண்டாம் என்றும் தீர்மானித்து விட்டார்கள். வாழ்க ஜனநாயகம்!

பூவெலிக்கட வீடு விபத்தில் பலியான அந்த பிஞ்சுக் குழந்தையின் கால்களில் விழுந்து இந்தத் தேசமே மன்னிப்பு கோரினாலும் அந்த மூவரையும் நாம் எல்லோரும் கொலை செய்த குற்றம் கழுவப்படாது.

என்னை மன்னித்தருள்வாய் என் குழந்தையைப்போன்ற பிஞ்சுக் குழந்தாயே !

 


எண்பதாண்டுகளுக்கு முன் வெளிவந்த கோ.நடேசய்யர் எழுதிய நூலின் இரண்டாம் பதிப்பு

- மல்லியப்புசந்தி திலகர்

இலங்கை மலையக வரலாற்றில் கோ.நடேசய்யருக்கு என்று தனித்துவமான இடமுண்டு. 1920 களிலேயேமலையகப் பெருந்தோட்ட தொழிலாளர் மக்களிடையே தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கி அவர்களைஅமைப்பாக்கம் செய்தவர். அத்தகைய அமைப்பாக்கத்தின் தொடர்ச்சியாகவே அந்த மக்கள்அரசியல்மயப்படுத்தப்பட்டனர். அதன்விளைவாக அப்போதைய நாடாளும் சபையான அரச பேரவையிலும் அந்தமக்களின் பிரிதிநிதியாக அங்கம் வகித்தார்.

இந்த அமைப்பாக்கத்தை  அரசியல், தொழிற்சங்கசெயற்பாட்டுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்ளாமல், அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரான நடேசய்யர்தனது பத்திரிகைப் பணியையும் தொடர்ந்தார். அவர் ‘தேசநேசன்’, ‘தேசபக்தன்’,’உரிமைப்போர்’, ‘ The Citizen’, ‘ The Forward’, உட்பட 11 பத்திரிகைகளையும் வெளியிட்டவர். அந்தப் பத்திரிகை ஒன்றில் அவர்எழுதிய ‘ ராமசாமி சேர்வையின் சரிதம்’ என்ற கதை மலையகத்தின் முதலாவது சிறுகதையாகவும் பதிவாகிறது.

இவ்வாறு தொழிற்சங்க, அரசியல், ஊடகவியல், இலக்கியம் ( சிறுகதை), வரிசையில் நாடகத்துறையிலும்ஈடுபட்டுள்ள இவர் நூல்களை அச்சிட்டு வெளியிட்டதன் மூலம் ஒரு பதிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தியமலையக நிர்மாண சிற்பி கோ.நடேசய்யர்.

தனதுபதிப்பு முயற்சிபள் மூலம் ‘வெற்றியுனதே’, ‘நீ மயங்குவதேன்’, ‘ புபேந்திரன் சிங்கன் அல்லதுநரேந்திரபதியின் நகர வாழ்க்கை’, ‘ இந்தியா - இலங்கை ஒப்பந்தம்’, ‘ தொழிலாளர் சட்ட புஸ்த்தகம்’, ‘ The Planter Raj’, ‘The Ceylon & Indian Critics’ ‘கணக்குப்பதிவு நூல்’, ‘ கணக்குப் பரிசோதனை’, ‘ ஆபில் எஞ்சின்’, போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டவர்.

அந்த வரிசையில் 1937 ஆம் அவர் வெளியிட்ட நூல்களில் ஒன்று ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர்அந்தரப் பிழைப்பு நாடகம்’. இந்த நாடகத்தில் வரும் பாடல்களை எழுதியவர் ஶ்ரீமதி கோ.ந.மீனாட்சிம்மாள்என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நூலினை கோ.நடேசய்யர் யாருக்கு உரிமையாக்கியுள்ளார் என்பதுஉணர்ச்சிகரமானது.

“அந்நியர் லாபம் பெற அந்திய நாட்டில் நெற்றி வியர்வை நிலத்தில் வீழ உழைத்துப் போதிய ஊதியமும் பெறாதுஉழலும் எனது இந்திய சகோதர சகோதரிகளுக்கு இந்தூல் உரிமையாக்கப்பெற்றது” எனக்குறிக்கின்றார்கோ.நடேசய்யர்.

இந்த நாடக நூல் மலையகப் பெருந்தோட்ட மக்களின் வரலாற்று ஆவணம் என்றவகையில் இதனை 2018 ஆண்டு மறுபதிப்பு செய்துள்ளார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அந்தனிஜீவா. 1937 ஆம் ஆண்டுகொழும்பு கமலா அச்சகத்தில் முதற்பதிப்பாக அச்சிடப்பட்டுள்ள இந்த நூலை கொழும்பு, குமரன் பதிப்பகம் ( புத்தக இல்லம்) மறுபதிப்பு செய்துள்ளது.

இலக்கியப் பயணியான ( Literary Traveller) அந்தனிஜீவா இந்தியா சென்றிருந்த சமயம் சென்னையில்நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் பற்றிய சிறப்பிதழாகவெளிவந்திருந்த ‘மாற்றுவெளி’ இதழில் ஆங்கில விரிவுரையாளரும் நாடக செயற்பாட்டாளருமானதிருமதி.

அ.மங்கை எழுதியிருந்த கட்டுரையில் இந்த நடேசய்யரின் நாடக நூலைப் படித்ததாக குறிப்பிட்டி ருந்ததை அறிந்து, ரோஜா முத்தையா நூலகத்துக்குச் சென்று அந்தப் பிரதியினைப் பெற்று இந்தமறுபதிப்பைக் கொண்டுவந்துள்ளார். அத்துடன் அ.மங்கை எழுதிய ‘மாற்றுவெளி’ ( 2010) கட்டுரையையும் இந்தநூலில் இணைத்துள்ளார். அதில் ‘நான் அறிந்தவரையில் தமிழில் அரசியல் அரங்கம் குறித்த வரலாற்றைஎழுதுகையில் தொழிற்சங்கவாதியாகவும் அரசியலில் தீவிரமாகவும் பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சியாகஇந்நாடகத்தைக் காணலாம்’ என அ.மங்கை பதிவு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கேசரி தகவல் களஞ்சியத்தில்’ ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன்எழுதியுள்ள கட்டுரையை இந்த நூலுக்கான முன்னுரையாகவும் இணைத்துள்ளார் பதிப்பாசிரியர் அந்தனிஜீவா. அந்த கட்டுரையில் அற்புதமான பல தகவல்களைத் தரும் அது.நித்தியானந்தன் இறுதியாக இவ்வாறு நிறைவுசெய்கிறார்:

‘இந்த நாடகத்திற்கு நடேசய்யர் எழுதியிருக்கும் முகவுரை இலங்கையில் வாழும் இந்தியத் தொழிலாளர்களின்நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும்.இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் தோட்டத்தொழிலாளர்கள் ஆசைவார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்டு வருபவர்கள்தானே தவிர, தமதுசுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்லர் என்பதை நடேசய்யர் இந்நாடகநூலில் ஆணித்தரமாகவலியுறுத்துகிறார். இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதுதான்நடேசய்யர் இந்நூலில் உணர்த்த விரும்பும் உண்மையாகும்’.

இந்த மறுபதிப்பு நூலின் வெளியீட்டினை 2017 செப்தெம்பரில் பிரான்சில் இடம்பெற்ற உலகத்தமிழ் நாடகவிழாவில் நடாத்த பதிப்பாசிரியர் அந்தனிஜீவா எண்ணியிருந்தாலும் அது சாத்மியமற்றுப் போகவே, அதே ஆண்டுதமிழ்நாடு திண்டுக்கல் காந்தி கிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மலையக இலக்கியஆய்வரங்கில் அப்போதைய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மயிலவாகனம் திலகராஜாகரங்களில் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு வெளியிட்டு வைத்தார்.

அதனை அடுத்து 2018 ஆம் ஆண்டுகொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் அறிமுகவிழாவினை நடாத்தி இருந்தார். இதன்போது கிழக்குப்பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் செ.யோகராசா ‘ஈழத்தின் முதலாவது அரசியல் நாடக நூல்’ கோ.நடேசய்யரின் ‘இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்’ எனஆதாரபூர்வமாக உரையாற்றி இருந்தார். இந்த விழாவிலும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கியதுடன் 50 பிரதிகளையும் கொள்வனவு செய்து மலையகப் பிரதேச நூலகங்களுக்கு வழங்கிவைத்திருந்தார் ம.திலகராஜா.

இந்த மறுபதிப்பைச் செய்து வெளியிட்ட அந்தனிஜீவா அனைவரதும் பாராட்டுக்குரியவர். அதேநேரம் இந்தநூலின் பிரதிகளை வாங்கி வாசித்து இந்த நாடகத்தை மேடையேற்றுவதே பதிப்பாசிரியருக்கும் நூலாசிரியர்கோ.நடேசய்யருக்கும் வழங்கும் கௌரவமாகும்.

 

 

 

 

 

 

 

 

 


41வது இலக்கிய சந்திப்புக்கான பயணத்தை முன்னிறுத்திய ஒரு நினைவுப்பதிவு

 -மல்லியப்புசந்தி திலகர்

2013 ஜுலை 19ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் செல்வதற்கு 16ஆம் திகதியே இரண்டு பஸ் டிக்கட்டுகளை எனக்கும், என் நண்பர் லெனின் மதிவானம் அவர்களுக்கும் பதிவு செய்து கொண்டேன்.

உலகின் பல நாடுகளுக்கு பயணித்துள்ள நான் சில நாடுகளுக்கு பலமுறை பயணித்துள்ளேன் என்றாலும், அப்போதெல்லாம் இல்லாத பரபரப்பும் ஒரு தவிப்பும் இப்போது எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.

நான் யாழ்ப்பாணம் செல்லும் பிரதான நோக்கம் அங்கு 20, 21

 

ஆம் திக

 

 

திகளில் நடக்கும் 41ஆவது இலக்கிய சந்திப்பில் உரையாற்றுவது. ஆரம்பத்தில் ஓர் ஆசிரியனாக பணியாற்றியதாலும் தற்போது முகாமைத்துவ உசாத்துணைவனாக பணி செய்வதாலும் கட்டுரை சமர்ப்பிப்பது, உரையாற்றுவது போன்ற விடயங்கள் பதற்றத்தைத் தருவதில்லை. இருந்தும் இந்தப் பயணத்தின் பரபரப்புக்கான காரணம் வேறாக இருந்தது.

1973ஆம் ஆண்டில் இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, வறுமை தாங்காது அரசாங்கம் குடும்பத்துக்கு அரைக்கொத்து அரிசி கொடுத்த செப்டெம்பர் 29ஆம் திகதி நுவரெலியா மாவட்டம், வட்டகொடை நகருக்கு அருகேயுள்ள மடகொம்பரை எனும் தோட்டத்தில் ‘புதுக்காடு’ எனும் பிரிவில் தோட்டத் தொழிலாளர் லயன் குடியிருப்பில் நான்காவது பிள்ளையாக (முதலாவது ஆண்பிள்ளை சந்திரசேகரன் ஒரு வயதுக்குள்ளேயே இறந்து விட்டாராம்) பிறந்தவன் நான். மற்றைய இருவ

ரும் மூத்த சகோதரிகள்.

என் பிறப்பிற்கு இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்பே என் தந்தையின் அப்பா ‘தாத்தா’ குடும்பத்துடன் வன்னியின் கிளிநொச்சி-வட்டக்கச்சி பிரதேசத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். மலையகத்தில் தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளிகளாக இருந்த குடும்பத்தை, காலம் வன்னியில் விவசாயப் பண்ணைகளில் தொழிலாளிகளாக்கியிருக்கிறது.

இடம்பெயர்ந்த குடும்பமென்பது, எனது மூன்று அத்தைமார்களையும் என் சிறிய தந்தையையும்

உள்ளடக்கியது. எங்கள் குடும்பமும் ஓர் அத்தையும் இரண்டு பெரியப்பாமாரும் மலையகத்தின் மடகொம்பரையில் தொடர்ந்து வாழ்ந்தனர். பின்னாளில் மூத்த பெரியப்பாவும் குடும்பத்தோடு வன்னியில் குடியேறிவிட்டார். எஞ்சியிருந்த நாங்கள் அவ்வப்போது வன்னிக்குச் சென்று வந்தோம். அப்படி முதல் தடவையாக ஐந்து வயதில் (1978) சிறிய தந்தையுடன் சென்று வந்த ஞாபகம் இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. என் தாத்தாவையும், ஆச்சியையும் (மலையகத்தின் அப்பாயி -ஆச்சி யானது வன்னித் தொடர்பாக இருக்கலாம்) முதன்முதலாக பார்த்தது அப்போதுதான்.

1979ஆம் ஆண்டு மடகொம்பரை (வடக்கிமலை) தோட்டப் பாடசாலையில் மண் தரையில் அமர்ந்து, ‘ஆனா’ எழுதும் முன்னரே எங்கள் தோட்டத்திற்கு உள் நுழையும் பாதையோரத்தில் இருக்கும் பி.டபிள்யூ.டி குவாட்டர்ஸில் வாழ்ந்த சிங்களக் குடும்பத்தாருடன் இருந்த தொடர்புகள் காரணமாக ‘அயன்ன’ எழுதியிருந்தே

ன். அதற்கு முன்பு எனக்கே வயது தெரியாத நாளில் அடுத்த வீட்டு அந்தி நேர ‘நைட் ஸ்கூலில்’ ஐயா மேகராஜா (என் உறவு வழி சிறிய தந்தை – தற்பொது தமிழகம் குன்னூரில் வாழ்கிறார்) அவர்களினால் என்மீது ‘அரிச்சுவடி’ (அ முதல் Z வரை) எழுதப்பட்டிருந்தது. எனவேதான் அந்தத் தொழிலாளி சித்தப்பா மேகராஜாவையே என் ‘குருநாதர்’ என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. ‘மல்லியப்பு சந்தி’யில் இந்த குருநாதர் பற்றிய எனது பதிவுகளும் (மீண்டும் குழந்தையாகிறேன் பக்-96) என்னைப் பற்றிய அவரது பதிவுகளும் (குருவிடமிருந்து பக்-VII) உள்ளடங்கியுள்ளன.

1977இல் ஆட்சி மாறினாலும் எங்கள் பட்டினி மாறவில்லை. காலையில் ஒரு ‘இசுகோத்து’. பகலுக்கு ‘சவசவக்காய்’ (மலையகத்தில் பிரபலமான காய் வகை) அவியல், பொருளாதாரம் இடமளித்தால் இரவுக்கு கொஞ்சம் சோறு என நாட்கள் நகர்ந்த காலம் அது. வறுமை எங்

களை விரட்ட, வறுமையை விரட்ட அப்பாவுக்குத் தெரிந்த அடுத்த ஒரே வழி தானும் வன்னிக்குச் செல்வதுதான்.

அப்போதும் இருந்த இன வன்முறைகளைப் பார்த்து ‘இனி இந்த நாட்டில் வாழ்வதென்றால் சிங்கள மொழிக் கல்விதான் ஒரே வழி’ என்ற யாருடையதோ தூரநோக்கு சிந்தனையை உள்வாங்கிக் கொண்ட அப்பா, எங்கள் மூவரையும் வட்டகொடை சிங்கள வித்தியாலயத்தில் சேர்த்து விட்டார்.

ஒரு வருடமாக மடகொம்பரை தோட்டத்துப்பள்ளியில் ‘வேட்டி கட்டிய’ யாழ்ப்பாண வாத்தியார் ‘கோபிநாத்’ மாஸ்டர் (தவறு செய்தால் பின்பக்க தொடையில் நறுக்கென கிள்ளுவார். தற்போது பிரான்ஸில் வாழ்வதாக அறியக்கிடைக்கிறது.) அருமைநாயகம் மாஸ்டர் (மட்டக்களப்பு என நினைக்கிறேன்), பள்ளிக்கூட கங்காணி (அங்கேயுமா..!) ‘வத்தங்கி’ தாத்தா ஆகியோரிடமும், ‘அ’ எழுதிப் பழகிய ‘கள்ளுக்குச்சி-சிலேட்டிடமும்’ நண்பர்கள் பலரிடமும் பாலர் வகுப்பிலேயே விடை பெறவேண்டியதாயிற்று.

இப்போது மீண்டும் ‘அயன்ன’ சொல்லிக்கொடுக்க ‘மெனிக்கே டீச்சர்’, ‘அம

ரக்கோன் டீச்சர்’, ‘சரத் சேர்’, மற்றும் ‘விதான சேர்’ என பல சிங்கள ஆசிரியர்கள். மடகொம்பரை மண்தரைப் பள்ளியின் மதியாபரணம், குணராஜாவுக்குப் பதிலாக வட்டகொடையில் நண்பர்களாக ரவீந்திர, நந்தசேன, இந்திக்க, ஜயசேன என எல்லாம் மாறிப்போனது.

அவ்வப்போது அப்பா அனுப்பும் மணியோடர் பசியை ஆற்றியது. கடிதங்க

ள் ஆறுதலையும் ஆர்வத்தையும் தந்தன. கடிதத்தில் நாட்டு நடப்புகளை சுவாரஸ்யமாகவும் ‘பெருமை’யாகவும் எழுதியிருப்பார். ஆனாலும் எங்கள் வீட்டில் வறுமை நீடித்தது.

அம்மாவின் நாட்கூலி வறுமையைப் போக்க உதவியது. அப்பாவுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கும் யாரோ தூரநோக்கு ‘ஐடியாவை’ கொடுத்திருக்க வேண்டும். ‘சிங்களமே படித்துவிட்டால் நாளைக்கு பிள்ளைகளுக்கு தமிழ் தெரிய வேண்டாமா?’. எனவே ‘சிங்கள பாடசாலை முடிந்ததும் அந்தியில் தமிழ் படிக்க’ வென ‘டிவிஷன்’க்கு (Tuition) சேர்த்து விட்டார். அதனால் அந்தியானதும் ‘வட்டகொடை ஸ்ரீ கிருஷ்ணா சமூக நலப் பாடசாலை’யில் ஆஜராகி விடுவோம். என் வாழ்வின் இன்னுமொரு வழிகாட்டி இந்தப் பள்ளியின் ஆசிரியர், நடத்துனர் சண்முகம் மாஸ்டர் அவர்கள். வட்டகொடை – சுப்பையா ராஜசேகரன் என சூரியகாந்தி பத்திரிகையில் எழுதி வருபவர். பாண் தந்து பசியைப் போக்கி, படிப்பு தந்து, வாழ்வையும் உயர்த்தியவர்.இவரைப் பற்றிய ஒரு பதிவும் மல்லியப்புசந்தியில் உண்டு.

1983ஆம் ஆண்டு ஜூலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. தமிழர்கள் எரிந்து கொண்டிருந்த நாளில், நான் சிங்களப் பாடசாலையில் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். என் நண்பன் ‘ரவீந்திர’ ஏதோவொரு சண்டையில் என்னை ‘பறதெமளா’ என திட்டுகிறான். அடுத்த கணம் என் கை ஓங்குகிறது. அவன் வாயில் ரத்தம் வழிய, கையில் கடவாய்ப்பல் ஒன்றை ஏந்தியவாறு அழுது கொண்டிருக்க, அதிபர் முன்னிலையில் விசாரணை. சிங்களத்தில் வாக்குமூலம் கொடுக்கிறேன். (இப்போதும் அப்படித்தான்).

விதான ‘சேர்’ வெறுப்புமிழ்ந்து பார்க்கிறார். சரத் ‘சேர்’ கருணையோடு பார்க்கிறார். பாடசாலை நேரம் முடிய மணியும் அடித்தது. ‘நாளையும் விசாரணையும் தொடரும்’ என அனுப்பி வைத்தார்கள். வரிசையில் சென்ற எங்கள் மூவரையும் சரத் ‘சேர்’ ஓர் ஓரத்திற்கு அழைக்கிறார். அன்பாகப் பேசினார். ‘இனிமேல் இந்த பாடசாலைக்கு படிக்க வராதீர்கள். உங்கள் நன்மைக்குத்தான் சொல்லுகிறேன்’ என்றார். சிங்கள கலாசாரத்தின்படி அவரை வணங்கி விடைபெறுகிறோம். ‘புதுசரணை’ என ஆசிர்வதித்து அனுப்பினார்.

இன்றும் கூட வெள்ளைச்சட்டை, வெள்ளை நீளக்காற்சட்டை அணிந்து சுருள் முடி, கூர்மையான மூக்குடன் என் முன் புன்னகைத்து நிழலாடுகிறார் சரத் ‘சேர்’. உள்ளத்திலும் தோற்றத்திலும் உயர்ந்த மனிதர் சரத் ‘சேர்’.

அப்பாவினது ‘தூரநோக்கு’ நொடிப்பொழுதில் உடைந்துவிட, அம்மாவின் ‘தூரநோக்கு’ கைகொடுக்கிறது. எங்களை வட்டகொடை தமிழ் வித்தியாலயத்துக்கு அழைத்துச் சென்ற சண்முகம் மாஸ்டர், அதிபர் சண்முகநாதனுக்கு எங்களை அறிமுகப்படுத்தி நடந்தவற்றை விளக்குகிறார். சற்று யோசித்த அதிபர் மூன்றாம் வகுப்பு தமிழ்ப்பாட புத்தகத்தைக் கொண்டுவரச் சொல்லி வாசிக்கச் சொன்னார். மரியாதையுடன் கால்கள் இரண்டையும் கிட்டவாக வைத்து நேராக நின்றவன் மூச்சு விடாமல் வாசித்துக்கொண்டு சென்றேன்.

என் முதுகில் தட்டிக்கொடுத்தவாறே புன்னகைத்தார். "இங்கு (தமிழ்ப்பள்ளி) ஐந்தாம் வகுப்புக்காரன் இப்படி வாசிப்பானா என்பது எனக்குச் சந்தேகம்தான்" என சண்முகம் மாஸ்டரைப் பார்க்க, அவர் கடந்த மூன்று வருடம் அம்மாவின் வேண்டுகோளின் பேரில் தனது தனியார் பள்ளியின் மாலை வகுப்பு பற்றி விளக்கினார். நான் நன்றியோடு சண்முகம் மாஸ்டரைப் பார்த்தேன். "அப்பா வரையில்லையாடா.. தம்பி" என்றார் அதிபர். "அப்பா யாழ்ப்பாணத்தில் ரைஸ் மில்லில் வேலை செய்றார், நாங்கள் அம்மாவுடன் தான் இருக்கிறோம். எங்களுடன் சித்தப்பா வந்திருக்கிறார்" என அப்பாவின் தம்பி சித்தப்பா தர்மகுலராஜாவைக் காட்டினேன். "யாழ்ப்பாணத்தில் எந்த ஊர்?" என அதிபர் விசாரிக்க, "கொக்குவில்"என விபரத்தைச் சொன்னார் சித்தப்பா.

அப்பா ‘வன்னி’க்குப் போகவில்லை. அவர் போனதோ யாழ்ப்பாணத்திற்கு – அவர் அனுப்பும் கடிதங்களின் ‘என்விலப்பில்’ ‘…..’ ரைஸ் மில் (அரசி ஆலை) கொக்குவில். என அச்சடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு பூரிப்படைந்திருக்கிறேன்.

"அட… நான் இணுவில்காரனடா… ஏன் நீங்கள் இங்க கிடந்து மாயிறியள்… பேசாமல் அங்க போய் படியுங்கோடா… அதுவரைக்கும் இங்கு அனுமதிக்கிறன். அப்பாக்கு கடிதம் எழுதி விஷயத்தைச் சொல்லுங்கோ" என உடனடியாக வட்டகொடை தமிழ்ப்பள்ளியில் அனுமதித்த அதிபர், அடுத்த தூரநோக்கையும் எங்கள் தலையில் திணித்து விட்டார்.

சுமார் ஒரு மாதம் வட்டகொடை தமிழ்ப் பாடசாலையில் படித்திருப்பேன். எங்கள் உறவுகள் ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பபந்தத்தின் கீழ் இந்தியா (தாயகம்) திரும்பும்போது தோட்டத்தில் வீடு வீடாகச் சென்று ‘பயணம்’ சொல்லி வருவது போல் நாங்களும் பயணம் சொல்லிவிட்டு குடும்பமாய் வன்னிக்கு குடிபெயர்ந்தோம். அங்கு அக்காமாருடன் என்னையும் சேர்த்து கிளிநொச்சி சென்.திரேசா பள்ளியில் (ஐந்தாம் வகுப்பு வரை அப்போது அங்கு ஆண்பிள்ளைகளும் படிக்கலாம் – இப்போது எப்படியென்று தெரியவில்லை) சேர்த்து விட்டார்கள்.

இதில் அப்பாவின் தூரநோக்கம் ஏதும் இருந்ததா அல்லது கொக்குவில் பக்கத்திலேயே அப்பா வாழ்ந்தும் ‘கொக்குவில் இந்து’ வில் என்னைச் சேர்த்துக்கொள்ள முடியாத ‘ராசதந்திரம்’ ஏதும் நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை. 41வது இலக்கிய சந்திப்பில் சாதியம் பற்றிய அமர்வில் ஆசிரிய ஆலோசகர் திரு.ஏ.சி.ஜோர்ஜ் அவர்கள் ஆற்றிய உரை, அப்பாவிடம் இது பற்றி விசாரித்துப் பார்க்க வேண்டும் என இப்போது எனக்குள் ஒரு உந்துதலைக் கொடுத்துள்ளது.

கிளிநொச்சி, கரடிப்போக்கு, சென்.திரேசா பள்ளி நாட்கள் எனக்குள் பல மனத்தாக்கங்களைத் தந்தன. மலையகத் தோட்டத்தில் வாழும்போது அப்பாவை மட்டும் பிரிந்திருந்த நான் இப்போது அம்மாவையும் பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எங்களை வட்டக்கச்சி அத்தை வீட்டில் நிறுத்தி அங்கிருந்து பாடசாலைக்குப் போகுமாறு சொல்லிவிட்டு, அம்மாவும் அப்பாவும் யாழ்ப்பாண வேலைச்சூழலில் அமைந்த வீட்டில் தங்கிவிட்டார்கள். இடையிடையே யாழ்ப்பாண வீட்டிற்கு போய் வருவோம்.

அப்போதெல்லாம் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் பஸ்ஸில் ‘சித்திரச்செவ்வானாம் சிரிக்கக்கண்டேன் …..முத்தான முத்தம்மா’ -ஜெயச்சந்திரன் பாடலும், கண்ணே… கலைமானே…. ஜேசுதாஸ் பாடலும் ஒலித்துக் கொண்டிருக்கும். வானொலியில் கே.எஸ். ராஜா வெள்ளித்திரை விருந்து வைத்துக்கொண்டிருப்பார். சித்தப்பாவுடன் போய் சாந்தியில் ‘மாடிவீட்டு ஏழை’, வின்சரில் ‘அன்பே வா’, மனோகராவில் ‘மீண்டும் கோகிலா’ ராஜாவில்‘மூன்றாம் பிறை’, ராணியில் ‘டிக்…டிக்…டிக்’ பார்த்ததாகச் சின்னதாய் நினைவு இருக்கிறது.

அரிசி ஆலையின் நெல் காய விடுவதற்கான பெரிய சீமெந்துத் தளத்தின் ஓரத்தில் எங்களுக்கு சிறியதாய் ஒரு வீடு வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தளத்தில் எப்படி வேண்டுமானாலும் சைக்கிள் ஓடிப் பழகலாம். அவ்வளவு பெரியது. வலதுபக்கம் உள்நுழையும் ஒழுங்கையை மதில் மறைத்திருக்கும். வீட்டுக்குப் பின்னால் புளியமரம். கூரைக்கு ஏறிவிட்டால் புளியம்பழம் தின்று தீர்க்கலாம். வீட்டின் இடது பக்க ஓரத்தில் முருங்கை மரம். காயாகவும், கீரையாகவும் பறித்துவந்து ‘அம்மா’ கைப்பட சமைத்த உணவு யாழ்ப்பாண வீட்டின் மறக்க முடியாத அனுபவங்கள்.

லீவு முடிந்து திரும்பவும் கிளிநொச்சிக்குப்போய் பள்ளிக்குப் புறப்படுகையில் கண்களில் கண்ணீர் முட்டும் பாடசாலைக்குப் போக தயக்கமாக இருக்கும். மலையகத்தில் சிங்களப் பள்ளிக்குப் போகும்போது கூட இப்படித் தயங்கியது இல்லை.

நான் சிங்களப் பாடசாலையில் இருந்து வந்தவன். எனக்கு வகுப்பறையின் ‘டெக்னிக்கல் டேர்ம்ஸ்’ எல்லாம் தமிழில் வராது. ஆனால் தமிழ் பேசுவேன், வாசிப்பேன், படிப்பேன். உதாரணமாக ‘அழிறப்பர்’ என அங்குள்ள மாணவர்கள் சொல்ல, எனக்கு ‘ம(க்)கனே’ என்றுதான் வாயில் வரும். இரண்டுக்கும் அழிப்பான் என்றுதான் பொருள். ஆனால் முன்னையது தமிழ் பின்னையது சிங்களம் என்பதுதான் பிரச்சினை.

நான் தமிழன். ஆனால் என்னை எல்லோரும் ‘சிங்களவனாகவே’ பார்ப்பதாக உணருவேன். வகுப்பறையில் நான் கடைசி பெஞ்சில் அழுகை முட்ட உட்கார்ந்திருப்பேன். ஒருவன் மாத்திரம் எனக்கு நண்பன். நான் வாழ்க்கையில் மீண்டும் சந்திக்க மாட்டேனா என இன்றுவரை ஏங்கும் நண்பன் ‘நேசகுமார்’. அவன் கண்டி தெல்தெனியா பக்கத்தில் இருந்து ‘வன்செயலில் அடிபட்டு’ வந்திருந்தவன். அவன் தமிழ்ப் பாடசாலையில் இருந்து வந்ததால் அவனுக்கு இந்தத் தமிழ் ‘டெக்னிக்கல் டேர்ம்ஸ்’ எல்லாம் தெரிந்திருந்தது. அவனோடு இருக்கும்போது மட்டும் மனதுக்கு இலேசாக இருப்பதாக உணர்வேன்.

ஒருவாறு ஆண்டிறுதி பரீட்சை வந்தது. அதிக புள்ளி பெற்று முதலாமிடத்துக்கு வந்துவிட்டேன். அடுத்த வகுப்பில் முதல் வரிசையில் இடம் கிடைத்தது எப்படியென்று தெரியவில்லை. இப்போது ‘அழிறப்பர்’ மட்டுமல்ல ‘வெளிக்கிட்டு’, ‘சைக்கிள் உலக்கி’, ‘பேந்து’ என்றெல்லாம் பேசவும் தொடங்கி விட்டேன்.

அந்த நாளிலேயே அங்கு வாழ்ந்த மச்சான் செந்தூரனுடன் சேர்ந்து போய் ‘ஈஸ்வரா’ தியேட்டரில் ரஜினியின் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ பார்த்ததாகவும் ஞாபகம்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த காலத்தின் ஒரு நாள் பெரும் மழையினால் இரணைமடுக் குளம் உடைந்து பெருக்கெடுத்து ஓட, வட்டக்கச்சிக்கும் கிளிநொச்சிக்கும் இடையேயான பாதையின் ‘பன்னங்கண்டி’ பாலங்கள் காணாமல் போயின.

காலையில் பாடசாலைக்கு போய் விட்டோம் பின்னேரம் வீடு திரும்ப முடியவில்லை. ஊர் மக்களின் பகீரதப் பிரயத்தனத்தில் கட்டிய கட்டுமரத்தில் உயிரைக் கையில் பிடித்தபடி வீடு போய்ச் சேர்ந்தோம். பாடசாலை செல்வது அடிக்கடி தடைபட்டது. அப்பா மடகொம்பரை தோட்டத்துக்குப் போனவர் சுகவீனமடைந்ததால் மீண்டும் வடக்கு திரும்புவதில் சிக்கல் வந்தது. அம்மாவும் கிளிநொச்சி வந்து சேர அத்தை வீட்டாரினால் சுமையைத் தாங்க முடியவில்லை.

இப்போது எந்தத் தூரநோக்கும் இல்லாமல் மீண்டும் ‘மலையகம்’ திரும்பி விட்டோம்.
மீண்டும் சண்முகம் மாஸ்டர், சண்முகநாதன் அதிபர், வட்டகொடை தமிழ் வித்தியாலயம். மூன்றாம் வகுப்பில் போனவன் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கு வட்டகொடைக்கே திரும்ப வந்து நின்றேன். அந்தப் பரீட்சையில் சித்திபெற முடியாத அளவுக்கு ‘வீக்’ ஆகியிருந்தேன். இப்போது என் பேச்சில் யாழ்ப்பாண வாசனை அடித்தது. பாக்யலக்ஷ்மி, கோமதி, முத்துலக்ஷ்மி, ஞானாம்பிகை, பவானி, இன்னும்…மணி என பெயர் முடியும் இன்னொரு ஆசிரியை மற்றும் ‘கொத்துரொட்டி’ என பட்டப்பெயர் வைத்து நாங்கள் விளிக்கும் இரத்தினராஜா கணக்குவாத்தி என பல யாழ்ப்பாண ஆசிரியர்கள் வட்டகொடைப் பள்ளியில் பணியாற்றினார்கள்.

பாக்யலக்ஷ்மி டீச்சர் என்னை வைத்து யாழ்ப்பாண பேச்சு வழக்கிலான நாடகம் ஒன்றை வட்டகொடையில் மேடையேற்றினார்கள். அதில் எனக்கு ‘விதானையார்’ பாத்திரம். அசலாக நடிப்பதாக பாராட்டுப் பெற்றேன்.

கொஞ்சநாள் செல்ல மலையகத் தமிழ் மீண்டும் என்னோடு ஒட்டிக்கொண்டது. ஆனால் வட்டகொடைப் பள்ளி ஒட்டவில்லை. பின்பு சித்தப்பா தர்மகுலராஜா அவர் முன்பு படித்த பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் என்னையும் சேர்த்து விட்டார்.

நான் பள்ளியில் சேர்கிறேன். அதிபர் நடராஜா பதவி உயர்வு பெற்று போகிறார். பின்னாளில் அவர் எனக்கு நெருக்கமான போது, எனக்கு ‘புரமோஷன்’ கொடுத்தவன் என சிரிப்பார்.

அங்கும் குகேஸ்வரராஜா (வர்த்தகம்), இருதயநாதன் (தமிழ்), ராஜரட்னம் (கணிதம்), முரளிதரன் (விஞ்ஞானம்), விக்கினேஸ்வரன் (வகுப்பாசிரியர்) என யாழ்ப்பாண ஆசிரியர்கள் இருந்தனர். ஆசிரியர்.ஜி.முரளிதரன் நல்லதொரு கலைஞர். பேராசிரியர் மௌனகுருவின் (தகவலின்படி) ‘மழை’ நாடகத்தைத் தழுவி ‘விடியலைத்தேடும் விழிகள்’ எனும் நாடகத்தை என்னைப் பிரதானமாகக் கொண்டு இயக்கியிருந்தார். தமிழ்மொழித் தினப்போட்டிகளில் தேசிய மட்டம் வரை வந்த நாடகம் அது. தேசிய மட்டப் போட்டியில் கலந்துகொள்ள வந்துகொண்டிருந்த போது கொழும்பு – கண்டி வீதியில் நிட்டம்புவைப் பக்கமான வழியில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜேரத்தினவுக்கு வைத்த குண்டில் பதற்றமடைந்து திரும்பிவிட்டோம்.

பின்னாளில் பி.பி.தேவராஜ் இந்து கலாசார அமைச்சராக தலைமை வகித்து நடாத்திய தேசிய சாகித்திய விழாவில் அந்த நாடகம் அரங்கேற்றப்பட்டு சிறந்த நடிகராகவும் (பாடசாலை நாட்களில்) தெரிவு செய்யப்பட்டிருந்தேன்.

1989ஆம் ஆண்டு ஜே.வி.பி கலவரம். இலங்கைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அந்நிய முதலீடுகளை அழிப்பதாகச் சொல்லி தேயிலைத் தொழிற்சாலைகளை தீயிட்டு கொளுத்திய காலம். ஜே.வி.பி. மலையகத் தொழிலாளர்களை இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் எச்சங்கள் என உச்சரித்திருந்தமையும் நினைவுக்கு வருகிறது.

மடகொம்பரையில் இருந்து பூண்டுலோயா பள்ளிக்குச் செல்லும் போது, இடையில் வரும் மடகும்புர காட்டுப்பகுதியில் பலர் கழுத்தில் டயர் மாட்டப்பட்டு எரியுண்டு கிடப்பதை பல தடவை பார்த்திருக்கிறேன். காலையில் பாடசாலை செல்லும்போது எங்கள் மடகொம்பரைத் தோட்டத்துரை (முகாமையாளர்) தர்மராஜா எனும் தமிழர், ஜே.வி.பி.யினரால் தலையில் சுடப்பட்டு வீதியோரத்தில் கிடந்ததை ஊருக்கு ஓடி தகவல் சொன்னதே நான்தான். அவரது கல்லறை இன்னும் ஊர் முகப்பில் சுட்டுக்கிடத்தப்பட்ட இடத்தில் அடையாளமாக உள்ளது.

அதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் மக்கள் கவிமணி சி.வி வேலுப்பிள்ளை அவர்களின் கல்லறை அதே வீதியோரத்தில் உள்ளது. தெற்கில் ஜே.வி.பி பிரச்சினையை உச்சமாகியிருந்த நிலையில் வடக்கில் இந்திய ராணுவத்தை வெளியேற்றிய நிலையில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தது. பேச்சுவார்த்தைக்கு என கொழும்புக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள் புலிகள். வன்னியே பாதுகாப்பானது போல் உணர்வு மீண்டும் ஏற்பட்டது.

1990ஆம் ஆண்டு க.பொ.த சா.த பரீட்சை எழுதிவிட்டு மீண்டும் வன்னிக்கு உயர்தரம் படிக்கவென கிளம்பியாயிற்று. இப்போது நான் மட்டும். இலங்கையில் 13ஆவது சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு பல மாற்றங்கள் நடந்து இந்தியப் படைகளும் வெளியேறியிருந்த காலம் அது. இப்போது நான் சென்று சேர்ந்த இடம் விஸ்வமடு. அங்கு ஓர் அத்தை குடும்பமும், பெரியப்பாவும் இருந்தார்கள்.

அத்தை வீட்டில் தங்கியிருந்து முரசுமோட்டையில் அல்லது கண்டாவளையில் உயர்தரம் படிக்கலாம் என எண்ணியிருந்தேன். விஸ்வமடுவில் எங்களுக்கு காணியும் இருந்தது. விடுமுறையில் மாமாவின் விவசாயத்துக்கு உதவிக் கொண்டிருந்தேன். அவ்வப்போது துவக்குகளுடன் நடந்த செல்லும் இயக்கப் போராளிகளை கண்டிருக்கிறேன்.

ஒரு நாள் காணிக்கு சைக்கிளில் போய்க்கொண்டிருந்த போது ஒழுங்கை வழியில் அகப்பட்ட முச்சந்தி ஒன்றில் எந்தப்பக்கமும் போக முடியாதவாறு துப்பாக்கித்தாங்கிய மூன்று சைக்கிள்களால் முடக்கப்பட்டேன். எனக்கு உதறல் எடுத்தது.

‘என்ன பெயர்? எங்கு வந்திருக்கிறாய்? எதற்காக வந்திருக்கிறாய்? ஈ.பியுடன் தொடர்பு உண்டா?’ இப்படி ஏகப்பட்ட கேள்விகள். உச்சி வெயிலில், முச்சந்தியில் நின்று பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். ஏற்கனவே இவர்கள் வீதியில் உலாவுவதைக் கண்டுள்ளதனால் அவர்கள் புலிகளென ஊகிக்க முடிந்தது. அவர்கள் விசாரணை முடிந்துவிட்டதாக நினைத்த சில நேரங்களின் பின்னர், ‘சரி போகலாம்’ என வழிவிட்டார்கள்.

சைக்கிளை உலக்கினேன் பயத்தோடும், பதற்றத்தோடும் காணிக்குப் போனேன். பின்னர் வீட்டுக்குப் போனேன். மாமாவிடம் விடயத்தைச் சொன்னேன். ‘அப்படியா?’ என நிதானமாகக் கேட்ட மாமா, ‘வெளிக்கிடு ஒரு இடத்துக்குப் போகலாம்’ என உத்தரவிட்டவராக அவசரமாய் வெளியே புறப்பட்டார். மலையகத் தொழிற்சங்கத் தலைவர் ஏ.அஸீஸ் அவர்கள் காலமான செய்தி வானொலியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

வெளியே சென்று வந்த மாமா ஆயத்தமாய் இருந்த என்னை அவரது சைக்கிளில் ஏற்றினார். வேகமாக மிதிக்கத் தொடங்கினார். நான் படிக்க நினைத்தாக எண்ணிய கண்டாவளை, முரசு மோட்டைப் பள்ளிக் கூடங்கள் எனது சைக்கிள் பயணத்தில் கடந்து போகின்றன. எங்கே போகிறோம் என தெரியவில்லை. என்னைப் பற்றிய சரியான தகவல்களைப் பதிவு செய்ய ‘பெரிய இடத்துக்கு’ மாமா அழைத்துச் செல்கிறார் என்ற கற்பனையோடு ‘சைக்கிள் பாரில்’ உட்கார்ந்து நானும் சப்போர்ட் மிதி கொடுக்கிறேன். அவர் ஒன்றும் பேசுவதாயில்லை. ‘பெரியதுகள் போய்விடு முன் நாம் போய் சேர்ந்து விடவேண்டும்’ என்ற நினைப்பில் மாமா சைக்கிள் மிதிப்பதாகவே எனக்குப் பட்டது. பரந்தன் ரயில்வே நிலையத்துக்கு முன் வந்து இறங்கிய பின்னர் தான் பேசினார்.

‘உனக்கு யாருடனும் தொடர்பில்லை என அவர்களுக்கு தெளிவாக தெரிந்துவிட்டால் உனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் உங்கள் குடும்பத்துக்கு அதுவே பிரச்சினையாகி விடும். நீ வீட்டுக்கு ஒத்தையாள். எனக்கு தெரிந்த ஒரே வழி, உன்னை ஊருக்கு அனுப்புவதுதான்’ என்றார். அப்போதுதான் அவர் போய்விடும் என அவசரப்பட்டது ‘யாழ்தேவி’க்காக என்பது புரிந்தது எனக்கு.

முன்னர் படித்த சென்.திரேசா பாடசாலையை ரயிலில் இருந்தவாறே பார்த்துக் கொண்டு பொல்காவலை வழியாக வட்டகொடை வந்து சேர்ந்தேன். வந்து சேர்ந்து ஒரு மாதத்தில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் மடகொம்பரை வீட்டை சுற்றிவளைத்தது தனிக்கதை. ஆனால் அன்று என்னைப் பொல்காவலையில் இறக்கி விட்டுப்போன ‘யாழ்தேவி’ இன்றுவரை மீண்டும் யாழ்ப்பாணம் போகவில்லை என்பதுதான் தற்போதைய கதை. வவுனியா, தாண்டிக்குளம், என படிப்படியாக இப்போதுதான் கிளிநொச்சிப் போக எத்தணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த யாழ்தேவியின் மீள்பயணத்தை முந்திக்கொண்டு நான் இன்று பஸ்ஸில் யாழ்ப்பாணம் போகிறேன் என்பதால்தான் எனக்குள் இத்தனைப் பதற்றம், பரபரப்பு.

மாமா கூட எத்தனை ‘தூரநோக்குடன்’ செயற்பட்டிருக்கிறார். மாமா சொன்னதைக் கேட்டு அன்று வந்தவன் இன்று இருபத்து மூன்று வருடங்களுகுப் பின் வன்னியைக் கடந்து 27 வருடங்களுக்குப் பின் யாழ்ப்பாணத்துக்குப் போகிறேன்;. இந்த கால இடை வெளியில் வன்னியில் பெரியப்பா மகன் தவராஜா அண்ணன் தற்கொலை செய்து கொண்டிருந்தான். என்னைப் படம் பார்க்கக் கூட்டிப்போன அத்தை மகன் திருச்செந்தூரன் ‘நித்தி’ யாகப் புதைக்கப்பட்டிருந்தான். அத்தை மகள்- மச்சாள் சாந்தினி ‘பூங்குயிலாக’ விதைக்கப்பட்டிருந்தாள். இவர்கள் எல்லாம் மடகொம்பரை மண்ணில் பிறந்து கைக்குழந்தையாக வன்னிக்கு தூக்கிச் செல்லப்பட்டவர்கள் என்பதை யாரறிவார்? ‘ரெயிலராக’ தொழில் செய்த பெரியப்பா மெய்யர் (தங்கையா ரெயிலர்) இறுதிகட்டப் போரில் மக்களை வெளியேறுமாறு கோரப்பட்டபோது தனது தையல் மெஷின் மேல்பாகத்தை மட்டும் தூக்கிக்கொண்டே ஓடிவந்து, அதையும் தூக்க சக்தியில்லாமல் போட்டுவிட்டு வந்த துக்கத்திலேயே நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார். ‘அருணாசலம்’ முள்வேலியில் இருந்து அவரை மீட்டெடுத்து வைத்தியம் பார்த்தும் வெற்றியளிக்காமல் இறந்துபோக அவர் பிறந்த மடகொம்பரை மண்ணிலேயே மீண்டும் புதைத்தோமே… இதையெல்லாம் என் மனதில் சுமந்தபடி எப்படி பதற்றமின்றி பயணப்படுவது?

நண்பர் லெனினுடன் உரையாடிக்கொண்டே பயணம் தொடர்ந்தது. இடையில் அவர் உறங்கிவிட்டாலும் எனக்குள் இருந்த தவிப்பு உறக்கத்தை ஏற்க மறுத்தது. சுவடுகளைப் பார்த்தவாறே பயணித்தேன். இப்போதைக்கு வன்னிக்குள் இறங்குவதில்லை என்ற முடிவோடு யாழ்ப்பாணத்திற்கு. இடையிடையே பஸ் ஓட்டுனரும் ‘மரண’ பயத்தைத் தரத் தவறவில்லை. சில இடங்களில் அவர் மீது கோபப்பட்டாலும் ‘புதிதாக’ திரும்பிப் போகும் எனக்குள் சில கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன்.

பஸ்ஸில் ஊடகவியலாளர்கள் தேவகௌரி, துஷ்யந்தினி மற்றும் கேஷாயினி உடன் பயணித்தாலும் அதிகம் உரையாடக் கிடைக்கவில்லை. அதற்குப் போதுமான நேரடியான அறிமுகமும் அப்போது இருக்கவில்லை.
grope
யாழ்ப்பாணத்தில் இறங்கி நேரடியாக ‘இலக்கியச் சந்திப்பு’ நடக்கும் இடத்திற்குச் சென்றது முதல் அடுத்த நாள் சந்திப்பு முடியும் வரை அங்கிருந்து எங்கும் அசையவில்லை.

இரண்டாவது நாள்; காலையில் முதல் அமர்வில் நான் ‘மலையகக் கவிதை இலக்கிய செல்நெறியும்- மலையக தேசியமும்’ எனும் தலைப்பிலும், மாலையில் இறுதி அமர்வில் ‘மலையக தேசியம்- ஒரு பதிகை’ எனும் தலைப்பில் நண்பர் லெனின் மதிவானமும் உரையாற்றினோம். இரண்டாம் நாள் இரவே புறப்படும் எங்கள் திட்டம் தோல்வியடையுமாப்போல் தெரிய மேலதிக ஒரு நாளைக்குமாக பயணத்தை ஒத்திவைத்தோம்.

இரண்டாம் நாள் இரவு தங்குவதற்காக இடம் மாறி வந்தோம். நட்போடு ஆரம்பித்த நண்பர்கள் அசுரா, தேவதாஸ் அன்போடு அரவணைத்துக் கொண்டார்கள். தங்குமிடம் போகும் முன் ராகவன் – நிர்மலா வீட்டுக்குச் சென்றோம். மேசை மீது ஏறியமர்ந்த தேவதாஸ் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் மலைநாட்டுப் பாடலைப் பாட, நிர்மலாவும், சுமதியும் திருமதி. மீனாட்சியம்மாள் நடேசய்யர் பாடலைப் பாட கச்சேரியே ஆரம்பித்து விட்டது. கோவை நந்தன், அசுரா, ராகவன், லெனின் ஆகியோர் கைதட்டி உற்சாகமூட்ட பலரும் அதிகம் கேட்டிராத மலையகக் ‘கானா’ மன்னன் வட்டகொடை கபாலி செல்லனின் (அவர் இறந்து அப்போது ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை) தோட்டப்புற பாடல்களை நான் பாடினேன்.

‘நாடு… எந்த நாடு…
நம்பி வாழ… சொந்த நாடு…
அந்தரத்தில் வாழச் சொல்லி அனுப்பியிருக்கான் சிட்டிசன் கார்டு’, …..

‘ஏய்க்கிறான் ஆளு ஏய்க்கிறான்.. எங்கள ஏமாளி என்று சொல்லி ஏய்க்கிறான்…’
போன்ற துள்ளிசைப் பாடல்கள் நிர்மலா உள்ளிட்ட நண்பர்களை ஆட்டமே போடவைத்தன. பழகுவதற்கு இனிமையானவராக ஒரு தாய்மையின் ஸ்தானத்தில் இருந்து என்னை வாழ்த்தினார் நிர்மலா.

இலக்கிய சந்திப்பில் உள்ளடங்காது இரவில் இயல்பாக எழுந்த இசை அரங்கு மலையகப் பாடல்களை மாத்திரமே கொண்டிருந்தமை எதேச்சையாக நடந்த ஆச்சரியம். இரவு உணவை முடித்துக் கொண்டு இரவு தங்குவதற்கு இன்னுமொரு வீட்டுக்குச் சென்றோம்.

அங்கே, காகம் – பதிப்பக நண்பர்கள் இத்ரிஸ், இர்பான், இம்தாத் சகோதரர்களுடன் நவாஸ் சௌபி, ஸ்டாலின் ஞானம், விஜி, கவியுவன், தம்பிகள் ஜேசு, திலீபன் ஆகியோருடன் கலகலப்பான கதையாடல்களுடன் இரவு கழிந்தது.

நண்பர் இத்ரிஸ் மத்தியில் நாற்காலி போட்டு அமர்ந்திருந்து வழிநடத்த நாங்கள் வட்டமாக பாயில் அமர்ந்து விவாதிக்க இலக்கியச் சந்திப்பின் இன்னுமொரு அமர்வானது அந்த இரவு.

மூன்றாம் நாள் காலை. இருபத்துமூன்று வருடங்களுக்குப் பிறகு கப்பியிழுத்து கிணற்று நீர்க் குளியல். சில்லென்று இருந்தது காலையுணர்வு. நண்பர்களோடு காலையுணவு.

யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்கப் போவதாக நானும் லெனினும் கிளம்பினோம். நண்பர் லெனினிடம் என் திட்டத்தைச் சொன்னேன். ‘ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் எங்கு போக வேண்டுமோ அங்கு போவோம்’ என ஒத்துழைத்தார்.

காங்கேசன்துறை பஸ்ஸில் ஏறி ‘தாவடியில் இறக்கிவிடுங்க தம்பி’ எனச் சொன்னேன். சொன்னபடி செய்தான் கண்டக்டர் தம்பி. 27 வருடமாக என் மனக்காட்சியில் இருந்த நினைவுகளை வைத்துக்கொண்டும், பாதையோரத்தில் இருந்த கராஜில் ‘அந்த அரிசி ஆலையை’ விசாரித்துக் கொண்டும் அந்த ஒழுங்கைக்குள் நடக்கிறோம். உச்சி வெயில் வேறு.

அந்த ஆலையின் ‘கேட்’டை அடைந்ததும் ஒழுங்கை முடிந்து விடும். அந்த எல்லைக்குள் போனதும் எனக்குள் ஒரு தவிப்பு. லெனின் என் உணர்வுகளைப் புரிந்துகொண்டவராகத் தெரிந்தார்.
நான் சைக்கிளோடிய தளம் ஆங்காங்கே காட்டுச் செடி மண்டிக்கிடக்க, இங்கேதானே வீடு இருந்தது என நெருங்கிப் பார்த்தேன். வீடு இருந்த அடையாளங்களாக அத்திவாரம் கொஞ்சம் தெரிந்தது. முட்டிய கண்ணீரை வெளியே வரவிடாமல் பார்த்துக்கொண்டேன். ஆலைக்குச் சென்று விசாரித்தால் "அவர்கள் எங்களுக்கு விற்று கணகாலம் ஆச்சுது" என்று சொன்னார்கள்.

நாங்கள் வாழ்ந்த வீட்டு பிரதேசம் தளமும் கூறுபோட்டு விற்கப்பட்டிருந்தது. (ஆசையாய் நான் குளிக்கும்)‘தண்ணீர் தொட்டி எங்கே?’ எனக் கேட்டேன்.. ‘அதோ…’ என திசை காட்டினார் புதியவர். படம் எடுத்துக்கொள்ளலாமா என்றேன். முதலாளியைக் கேட்டுச் சொல்வதாகச் சொன்னார். வேண்டாமென நாங்களே தவிர்த்துவிட்டு, வீடும் தளமும் இருந்த அடையாளத்தோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

அந்த நிமிடங்களில் பழைய நாட்களின் அத்தனை நினைவுகளையும் தவிர வேறொன்றும் மனதில் எழவில்லை.
1984 ஆக இருக்கலாம். 10-11 வயதுப் பையனாக ஓடித் திரியும் நான். விடுமுறையில் வந்து அம்மாவுடன் நிற்பதென்றால் தனிச் சந்தோஷம். தோட்டத்தில் வாளி கொண்டுபோய் பீலிக்கரையில் தண்ணீர் பிடிப்பது மாதிரி, அரிசி ஆலையில் இயந்திரத்தில் அரிசி கொட்டும்போது, அதனை வாளியில் பிடிப்பதில் பெரும் ஆனந்தம் எனக்கு. அப்படி பிடித்து வரும் சூடான அரிசியைக் கொண்டு சோறாக்கிச் சாப்பிட்ட காலம் அது. அடிக்கடி கடைக்கு ஓடுவதில் சின்ன சந்தோஷம்.

ஒரு நாள் கடைக்குப் போன என்னிடமும் கூட்டமாய் சைக்கிளில் போன அண்ணாமார்கள் சில துண்டுப்பிரசுரங்களை கொடுத்து விட்டுச் சென்றிருந்தார்கள். அது என்ன ஏதென்று தெரியாமல் கையில் வைத்துக் கொண்டு மிளகாய்த்தூள் வாங்குவதற்கு சந்தியில் இருந்த கிரைண்டிங் மில்லில் நின்றிருந்தேன். பட…பட… வென ஒரே சத்தம். சனம் அலறியடித்துக் கொண்டு ஓட ஆரம்பித்தது. வீதியை எட்டிப் பார்த்தேன்.

துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர்களைத் தேடி ஆமி வெறியாட்டம் ஆடிவருவதாகக் கூறி ‘ஓடடா தம்பி வீட்டுக்கு’ என்று என்னை விரட்டினார் கடையுரிமையாளர் வீரப்பா தாத்தா. வீதியைத் தாண்டும் போது மாடு ஒன்று சூடுபட்டு சுருண்டு விழுவதைக் கண்ணுள் வாங்கியவாறே ஒழுங்கைக்குள் ஓட்டமெடுத்தேன். வளவு ‘கேட்டை’ இறுக்கி தாழிட்டுப் பூட்டிவிட்டு, மூச்சு வாங்க அம்மாவிடம் ஓடி நடந்ததைச் சொன்னேன். உள்ளதைச் சுருட்டிக் கொண்டு அம்மாவும் நானும் வெளியே வந்தோம். அப்பா சற்றே உள்ளே அமைந்த ஆலையில் வேலை. ஆலை பக்கத்தில் உள்ள முதலாளி வீட்டில் இருந்து அவரது அம்மா வெளியே வந்தார். நாங்கள் கலவரப்படுவதை அவதானித்தார். நான் அவரிடம் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்கும்போது நான் இறுகப் பூட்டிய கேட்டை கூட்டமாக வந்த ஒரு குடும்பம் பதற்றத்தோடு தட்டியது.

"ஆமி.. சுட்டுக் கொண்டு.. வாரான்… எங்களை காப்பாத்துங்கோ…கேட்டைத் திறவுங்கோ…" என அலறியது. கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு ஐந்தாறு பேர் இருக்கும். அரிசி ஆலையை வந்தடையும்; ஒழுங்கையின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ள குடிசைகளில் வாழும் குடும்பங்களில் ஒன்று என நான் அடையாளம் கண்டவனாக கேட்டைத் திறக்க ஓடினேன். "தம்பி… திறவாதையோடா….திறவாதையோடா…’" என என்னைத் தடுத்தார் முதலாளி(யின்) அம்மா.

வந்தவர்கள் துடிக்கிறார்கள். அழுகிறார்கள். கெஞ்சுகிறார்கள். ஆனால் முதலாளி- அம்மாவோ கடிந்து கொள்கிறார், என்னை அதட்டுகிறார். எனக்குக் காரணம் புரியவில்லை. சூடுபட்டு சுருண்டுவிழுந்த மாட்டைக் கண்ணால் பார்த்து வெருண்டு போயிருந்த எனக்கு முதலாளி அம்மாவின் அதட்டல் இன்னும் பயத்தைக் கொடுத்தது. எனது அம்மா என்னைக்கிட்டவாக இழுத்து அணைத்துக் கொள்கிறார். நான் கேட்டைத் திறப்பதிலேயே குறியாயிருந்தேன். சூட்டுச் சத்தம் அண்மித்து கேட்கத் தொடங்கியது…
ஓடிவந்த குடுமபத்தின் ஒரு மனிதர், மேல் சட்டையில்லாது சாரத்தை தொடை வரை மடித்துக்கட்டி இடுப்பில் சின்னக்கத்தியும் சொருகியிருந்தார்.

கறுத்த உயர்ந்த அந்த மனிதர் கேட்மீது ஏறி உள்ளே பாய்ந்தார். அவரது முறுக்கேறிய பலம் கொண்ட கை இழுத்த ஓர் இழுவைக்கே பூட்டு பிளந்தது. கேட் திறந்தது. இப்போது அதிக எண்ணிக்கையானோர் நாங்கள் நின்றிருந்த ஆலை வளவுக்குள் நுழைந்தனர். அவர்கள் கையில் அகப்பை, கத்தி, சமையல் சாமான்களும், சிறுசுகள் கையில் உருட்டி விளையாடிய சைக்கிள் டயர்களுமாகக் கூட்டமாக உள்ளே வந்தார்கள். நின்றது நிற்க ஓடிவந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது ஆமியின் சத்தம் குறைந்திருந்தது. இரண்டு மூன்று வளைவுகள் கொண்ட அந்த ஒழுங்கையில் ஆமி இரண்டாவது வளைவைத் தாண்டி உள்ளே வரவில்லை. வெறிச்சோடிக்கிடந்த வீடுகளைப் பார்த்துவிட்டு மீண்டும் வீதிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் உள்ளே வந்த குடும்பத்தினர் ஆலையின் எல்லையெங்கும் பறந்தனர். முதலாளி அம்மா இரண்டு கையாலும் தலையில் அடித்துக் கொண்டார்.

மலையகத் தோட்டங்களில் தொழிலாளர்கள் மத்தியில் ‘ராங்கிப்’ பேசிக் கொள்வதால் சிறுவர்களும் சாதாரணமாகப் பேசுவார்கள். அம்மா என்னை அந்தச் சூழலில் இருந்து தவிர்த்தே வளர்த்து வந்தார். ஆனால் உள்ளே வந்த உயர்ந்த, கறுத்த மனிதர் முதலாளி அம்மாவை நெருங்கி… என்னடி சாதி… ‘………’ சாதி… என இன்னோரன்ன மொழியில் திட்டித்தீர்த்தார். அவர் பேசிய ராங்கி சூழலில் இருந்து அம்மாவால் என்னைத் தவிர்க்க முடியவில்லை. தடுக்கவும் முடியவில்லை. நானும் அந்த ராங்கியை அன்று விரும்பி ரசித்தவனாகவே இன்று உணர்கிறேன். ஆலையில் இருந்து வெளியே வந்த அப்பா முதல் அனைத்து வேலையாட்களும் நாங்களுமாக ஒரு நாடகம் மாதிரி அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தோம்.

அப்போது எனக்கு அதிகம் புரியாத அன்றைய நாளின் காட்சிகள் இலக்கிய சந்திப்பில் எழுத்தாளர் தெணியான், சீனியர் குணசிங்கம், அகல்யா, தேவதாஸ், ரெங்கன் தேவராஜன், ஏ.ஸி.ஜோர்ஜ் போன்றோரின் உரைகளினூடும் அமர்வின் இணைப்பாளராகவிருந்த வேல்தஞ்சனின் படபடப்பில் இருந்தும் அதிகமாகவே புரிந்தது. சிங்களப் பாடசாலையின் ‘சரத் சேர்’ இப்போதும் என் கண்ணுக்குள் நிழலாடிச் செல்கிறார்.


நினைவுகளில் மீண்டவனாக நானும் நண்பர் லெனின் மதிவானமும் திரும்பவும் கே.கே.எஸ். வீதி நோக்கி நடந்தோம். யாழ்.நூலகம், நல்லூர் கோயில் இரண்டுக்கும் சென்றோம். உள்ளே போகக் கிடைக்கவில்லை. பௌர்ணமி நாளில் யாழ்.நூலகம் மூடியிருந்தது. நல்லூர் பூஜை நேர முடிவால் பூட்டியிருந்தது. ஆனால் இலங்கையில் பௌர்ணமி நாளிலும் தங்களது திறமையை பையில் சுமந்தபடி வந்த தேவதாஸ், அசுரா, கோவை நந்தனுடன் ராகவன்-நிர்மலா, சுமதி சிவமோகன், வாசுகி ஆகியோரின் புதிய வீட்டைச் சென்றடைந்தோம்.

முதல் நாள் இரவு கச்சேரி நடாத்திய பழைய வீடு அவர்களது சகோதரி ‘ராஜினி திராணகம’ நினைவகமாக பராமரிக்கிறார்கள் என்பது தெரியவந்தது. வாசலில் அமர்ந்து கலகலப்பாக இருந்துவிட்டு முதல்நாள் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தோம். இரண்டு நாளைக்கு மாத்திரம் ஆடைகள் கொண்டுபோயிருந்த நாங்கள் மூன்றாம் நாள் பயணத் திரும்புதலின்போது நண்பன் அசுரா தனது பிரான்ஸ் பயணப் பொதியில் இருந்து வெளியே இழுத்துத் தந்த புதிய ஷேர்ட்டுகளை அணிந்து கொண்டோம்.

யாழ்ப்பாணத்துடன் ஒரு புதிய உறவு ஏற்பட்டிருப்பதாய் உணர்ந்தேன். பஸ் ஏறும் வரை கூடவே வந்து வழியனுப்பிய நண்பர்கள் அசுரா, தேவதாஸ் ஆகியோருடன் உணர்வுகலந்து விடைபெற்றுக் கொண்டு, ஒடியல், கருவாடு, பருத்தித்துறை தட்டைவடை, இடியப்பத் தட்டு, மோர்மிளகாய், பனங்கட்டி என ஒரு குட்டிச் ‘ஷொப்பிங்’ ஒன்றையும் முடித்துக் கொண்டு கொழும்பு பஸ்ஸில் ஏறிவிட்டோம்.

அவ்வப்போது சட்டைப் பைக்குள் இருந்து கொண்டு நண்பன் அசுரா பகிடி விட்டுக்கொண்டிருப்பது போன்ற உணர்வு அடிக்கடி வந்துபோனது.

அடுத்த நாள் காலை ஆறுமணிக்கு வீடு வந்து சேர்ந்ததும் அம்மா கேட்ட முதல் கேள்வி:
"நம்ம இருந்த யாழ்ப்பாண வீடு எப்படிப்பா இருக்கு……?"
(முற்றும்)
25.7.2013
நன்றி:- ‘ஜீவநதி’


ஆயிரமும் காரணங்களும்

- மயில்வாகனம் திலகராஜா

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுக்கபடவுள்ளதான அறிவிப்பும் - பேச்சுவார்த்தைகளும்- மறுப்புகளும் - போராட்டங்களும் - வாக்குறுதிகளும் - ஆட்சிமாற்றமும் - அமைச்சரவைப் பத்திரமும் - மீண்டும் பேச்சுவார்த்தையும் - வழங்கப்படாமைக்கான காரணங்களும் என ஐந்து வருடங்கள் கடந்து செல்கின்றன.

 

2015 பொதுத்தேர்தல் பிரசார மேடைகளில் வழங்கப்பட்ட வாக்குறுதி 2020 பொதுத்தேர்தலிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த 2020 தேர்தலுக்கு முன்பதாக அதனைக் கொடுத்துவிட்டால் தேர்தலில் பெரு வெற்றிப்பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் 2020 ஜனவரி யில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரமும் இப்போது அர்த்தமற்றதொன்றாகவே தோன்றுகிறது. இதனைப் பெற்றுக் கொடுத்துவிடுவதனால் தோட்டத் தொழிலாளர்களும் நன்மையடைந்து அதனால் அரசியல் இலாபம் ஒன்றும் அடையப்படமுடியுமெனில் அதற்கான இறுதி சந்தர்ப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜூலை 10 ஆம்திகதி யாகும்.

ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி அதற்கு முதல் மாத சம்பளத்தைப் பெற்றுக்கொள்ளும் நிலையில், ஜூலை மாதச்சம்பளத் தொகையில் அது சேர்க்கப்படுமானால் ஆகஸ்ட் 10 ஆம் திகதியே கிடைக்கும். அப்போது (ஆகஸ்ட் 5 ) பொதுத்தேர்தல் நிறைவுபெற்றிருக்கும். எனவே அரசியல் இலாபம் இல்லாது தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டு பொதுத்தேர்தலுக்குப் பின்னான மாதங்களில் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என எதிர்பார்ப்பு கொள்ள முடியாதுள்ளது. மாறாக அப்போதும் ஏன் ஆயிரம் ரூபா கொடுக்க முடியாது? என்பதற்கான காரணத்தையே கேட்கநேரலாம். காரணம் இப்போதே அதற்கான காரணம் தேடித்தேடி கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

 

இறுதியாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தமிழ் ஊடகங்களின் செய்திப் பிரதானிகள் உடனான சந்திப்பில் பிரமர் மகிந்த ராஜபக்‌ஷ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துள்ளார். அதுதான் தேர்தல் காலத்தில் இந்தத் தொகை வழங்கப்படுமாக இருந்தால் அதனை சுயாதீன தேர்தல் ஆணைக்குழு வாக்காளருக்கான லஞ்சம் வழங்கலாகப் பார்க்கக் கூடும் என்பதாகும். ஏற்கனவே மார்ச் முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளமாக நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் என அமைச்சரவைப் பத்திரம் ஊடாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக “தை பிறந்தால் வழி பிறக்கும்” கோஷத்தோடு ஜனவரி 15 அறிவிக்கப்பட்ட போது ஏப்ரல் 10 ஆம் திகதி வழங்கப்பட்டிருக்கக் கூடிய மார்ச் மாத சம்பளத்தில் கிடைத்திருக்க வேண்டும்.

அதன்போது ஏப்ரல் 25 பொதுத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. எனவே ஏப்ரல் 10 தேர்தல் பிரசார காலமாகவே இருந்திருக்க வேண்டும். எனவே மார்ச் 11 ல் தேர்தல் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெற்ற கட்சி செயலாளர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்போது பதில் வழங்கிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் “பொதுத்தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே அமைச்சரவை அனுமதிக்கப்பட்ட இந்த விடயத்தை அதுவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான இந்த விடயத்தினை ஆணைக்குழு எந்தவித்த்திலும் தடுக்காது” என உறுதி வழங்கப்பட்டது.

 

எனவே இப்போது தேர்தல் காலத்தில் இந்த சம்பளவுயர்வு வழங்கப்பட்டால் தேர்தல் ஆணைக்குழு அதனை லஞ்சம் என குற்றம் சுமத்தலாம் என்ற பிரதமரின் கருத்து ஒரு நொண்டிச் சாட்டு. ஏனெனில் இதற்கு முன்னதாக உறுதி செய்யப்பட்ட மார்ச் முதலாம் திகதி முதல் கொடுக்கப்படாமைக்கான காரணமாக “கொரொனா” முன்வைக்கப்பட்டது. அதுவும் நொண்டிச்சாட்டே என்பது அப்போதே தெளிவாகியது. ஏனெனில் கொரொனா வுக்கான ஊரடங்கு அறிவிப்பு வந்ததே மார்ச் 19 ஆம்திகதி இரவுதான். எனவே மார்ச் ஒன்று முதலே அதற்கான காரணம் கண்டறியப்பட்டமை கண்துடைப்பே அன்றி வேறில்லை.

 

இப்படி காலத்துக்குக் காலம் ஆரிரம் ரூபா வழங்கப்படாமைக்கு அரசாங்கம் பலவித காரணங்களை கண்டறிய முற்படுகிறதே தவிர அதனைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறை அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை. இந்த அரசாங்கத்திடம் மட்டுமல்ல இதற்கு முன்னதான அரசாங்கத்திடமும் அதற்கு முன்னரும் கூட இருக்கவில்லை.

 

1992 ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார்மயப்படுத்தலுக்கு உள்ளானதன் பின்னர் அந்தப் பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் அரசாங்கம் கொண்டிருந்த கட்டுப்பாடுகள் அதிகாரங்கள் எல்லாமே இழக்கப்பட்டன. சம்பளநிர்ணய சபைச் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கமும் ஓர் அங்கமாக பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் வாய்ப்பு இழக்கப்பட்டது.

 

கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் தீர்மானிக்கப்படும் முறைமை நடைமுறைக்கு வந்ததோடு தொழிற்சங்க பிரதிநிதிகளும் - தோட்ட முதலாளிகளும் கூடிப்பேசித் தீர்மானித்துவிடுவதால் அரசாங்கம் அந்த விடயத்தில் ஒரு பார்வையாளர் மட்டுமே. ஏதேனும் அரசியல் அழுத்தங்களால் தொழில் அமைச்சரோ அல்லது அவரின் பிரதிநிதிகளோ அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அல்லது ஒப்பந்தம் கைச்சாத்திடும்போது பார்வையாளர்களாக அமரந்திருந்திருக்கின்றார்களே அன்றி அவர்களுக்கு அந்தத் தொகையைத் தீர்மானிக்கும் எந்த அதிகாரமும் இருந்திருக்கவில்லை.

 

பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதி அமைச்சராகவும் ( தொழில் அமைச்சர் அல்லாத) செயற்பட்டு வந்ததால் அரசாங்கத்தின் தலையீட்டுடன் சம்பளம் பேசித்தீர்மானிக்கப்பட்டதான ஒரு மாயை ( Illusion) உருவாக்கப்பட்டு வந்தது. அந்த மாயை யை மேலும் விரிவாக்க தொழிற்சங்கப் பிரதிநிதியான அந்த அமைச்சர் அப்போது ஜனாதிபதியாக அல்லது பிரதமராக இருப்பவர் முன்னிலையில் தோட்ட முதலாளிகளுடன் கையொப்பம் இட்டு பந்தா காட்டிவிடுவதால் அரசாங்கம் தலையிட்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டதான ஒரு தோற்றப்பாடு மக்களுக்கும் காட்டப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்துக்கு உள்ளே என்ன உள்ளது என்பதை ஜனாதிபதியோ அல்லது பிதரமரோ அறியார். அதற்கான தேவையும் அவருக்கு எழுந்திருக்கவில்லை. அதனை அமைச்சுப் பதவிகள் கொடுக்கும்போதே அவர்கள் கைகழுவி விட்டிருந்தனர்.

இப்போதைய கள நிலவரங்களின்படி அப்படி காட்சிப்பொருளாக கையொப்பம் இடும் தரப்பினர் நடுவே நிற்கும் நிலைமை ஜனாதிபதிக்கோ அல்லது பிரதமருக்கோ இல்லை. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளம் பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சி வரிசையில் இருந்துகொண்டு பாராளுமன்றத்தில் கொச்சைத் தமிழில் அடிக்கடி கூவியவர் மகிந்தானந்த அளுத்கமகே. அவரும் ஒரு தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கத் தலைவர் என்பது பலரும் அறியாத செய்தி. அந்த சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட “இடாப்புப்” பெயர் என்ன என்று ஊர்ஜிதமாக தெரியாத நிலையில் நாவலப்பிட்டி பகுதியில் “மகிந்தானந்த யூனியன்” என அதன் “வீட்டுப் பெயரில்” தொழிலாளர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின்போது இந்த ஆயிரம் ரூபா சம்பளவிவகாரத்தை தாங்கள் வந்ததும் நடைமுறைப்படுத்துவோம் என்றவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நாளில் அங்கே கண்ணில்பட்ட தோட்டத் தொழிலாளி பெண் ஒருவரை தன் அருகே அழைத்த ஜனாதிபதி அவரது சுக நலன்களை விசாரித்ததுடன் தேர்தல் முடிந்த கையோடு நவம்பர் 19 முதல் அதனைப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி அளித்ததாக அப்போது ஊடகங்களில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அது நடைமுறைச் சாத்தியமில்லாதது என அப்போதைய வேட்பாளரும் இப்போதைய ஜனாதிபதியுமான கோட்டபாய ராஜபக்‌ஷ அறிந்துகொண்டு தான் ஜனாதிபதியானதும் இதனை செய்ய முயற்சித்து இருக்கலாம். இதன்போதும் அவருக்காக அங்கும் இங்கும் ஓடித்திரிந்தவர் மகிந்தானந்த அளுத்கமகே ஆவார். அதன் பின்னர் ஜனாதிபதி ஓர் ஆய்வினைச் செய்திருக்க வேண்டும். அப்போதே இந்தப் பிரச்சினையின் ஆழ அகலங்களை அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கிடையில் பொதுத்தேர்தல் காலமும் நெருங்க, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முயற்சி எடுத்துள்ளதான தோற்றப்பாட்டினைக் காட்ட அவரது முன்னெடுப்பிலேயே அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு அனுமதியும் கிடைத்தது.

 

அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி கிடைத்தவுடன் வழங்கப்படுவதாக இருந்தால் இந்த நாட்டில் எத்தனையோ விடயங்கள் இன்று நிறைவு பெற்று இருக்கும். கடந்த அரசாங்கத்தில் நாளாந்த மானியமாக 50/= கொடுப்பதற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சரும், அப்போதைய

பிரதமரும் தனித்தனியே அத்தகைய பத்திரம் சமர்ப்பித்து அவை அனுமதிக்கப்பட்ட போதும் இன்று வரை அது கொடுக்கப்படவில்லை. எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறை அப்படி ஆனதல்ல என்பதை இப்போதே “அரசாங்கங்கள் “ உணரத் தொடங்குகின்றன.

 

தாங்கள் என்னதான் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்தாலும் ஆயிரம் ரூபாவை அடிப்படைச் சம்பளமாக கொடுப்பதாக இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அந்த கம்பனிகளை நடாத்தும் தோட்ட முதலாளிகள் கைகளிலேயே உள்ளது. கம்பனிகளை பொறுத்தவரை இலங்கை குறைந்தபட்ச சம்பளச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வேதனமான 400/= ககும் மேலான ஒரு தொகையாக 700/=ஐ அடிப்படை சம்பளமாக இப்போது கொடுக்கின்றன. அதுவும் ஒப்பந்த தொழிலாளர்கள் விடயத்தில் குறைந்தபட்ச சம்பளச் சட்டம் அவ்வளவு இறுக்கமானதாகவும் இல்லை.

 

எனவே அவர்கள் நிலையில் சட்டத்தை மீறவில்லை என நினைக்கின்றனர். ஆனால் பொதுவான சட்டமான இதில் அடங்கும் தோட்டத் தொழிலாளர்கள் அப்படி ஒன்றும் இலகுவான வேலையில் ஈடுபடவில்லை. அவர்களுக்கு ஆயிரம் ரூபா அல்ல அதற்கு மேலும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு முதலில் வரவேண்டும். அந்த உணர்வை ஆட்சியாளர்கள் பெறாதவரை இந்தப் பிரச்சினை அவர்களுக்கு பத்தோடு பதினொன்றுதான்.

 

ஒன்றில் அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொடுக்க குறைந்த பட்ச சம்பளச் சட்டத்தைத் திருத்தி ஆயிரமாக அதனை உயர்த்த வேண்டும். இதனால் தோட்டத் தொழிலாளர்கள் மாத்திரம் இன்று ஏனைய தொழில் துறை நாட்கூலித் தொழிலாளர்களும் நன்மைப் பெறுவர். அல்லது ஆயிரம் ரூபாவையும் விட அதிகமாக நாளாந்தம் உழைக்கக்கூடியதாக தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உடமையாளராக்க வேண்டும். இதனை தென்பகுதி சிங்கள மக்களுக்கு “அரசாங்கங்கள்” செய்து கொடுத்துள்ளன.

 

எனவே பொறுப்புள்ள அரசாங்கங்கம் எனில் பொருத்தமான தீர்வை முன்வைக்குமேயன்றி கொடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தேடித் தேடி கண்டறியாது!

( மஸ்கெலியா பகுதி தோட்டம் ஒன்றில் தற்போதைய நாட்சம்பளம் பகிரங்கமாக விபரக்கப்பட்டுள்ள காட்சி - படம்)

 


காலத்தை வென்ற கவிதை

இலங்கையின் மத்திய மலைநாட்டில் மேகம் தழுவும் நக்கிள்ஸ் மலையடிவாரத்தில் உள்ள கொற்றகங்கைத் தோட்டத்தில் பிறந்தவர் கவிஞர் அரு.சிவானந்தன். சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தம் காரணமாக புலம் பெயர்ந்து தமிழகம் சென்று கவிதா வானிலே “வண்ணச்சிறகு” என்ற பெயரில் சிறகு விரித்தவர்.

இவரின் கவிதைகள் “வண்ணச்சிறகு கவிதைகள்” என்ற மகுடத்தில் 1985ஆம் ஆண்டு தமிழகத்தின் “மலையரசி” பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் அரு.சிவானந்தன் அகால மரணமானார்.

குறிப்பாக இலங்கையில் குடியுரிமைப் பறிக்கப்பட்டு இலங்கை இந்திய அரசாங்கங்கள் 1964 ஆம் ஆண்டு செய்து கொண்ட சிறிமா - சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் காரணமாக கட்டாயமாக

நாடு விட்டு நாடு செல்ல நேர்ந்த தனது சோகத்தைப் பதிவு செய்த “ சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” கவிதை மலையக சமூகத்தின் நாடு கடத்தல் வரலாற்றுப் பதிவு.

அந்த கவிதை அவரது தனிப்பட்ட சோகமல்ல. அவ்வாறு சென்ற ஐந்து லட்சம் பேரின் சோகப்பதிவு. அந்தக்கவிதையின் முக்கியத்துவம் கருதி 2007 ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் “கொழுந்து” காலாண்டு இதழில் அவரது அகால மரணத்தையும் நினைவு கூர்ந்து பிரசுரித்திருந்தேன்.

அதே 2007 ம் ஆண்டு தனது “மல்லியப்புசந்தி” கவிதை நூலை வெளியிட்டதுடன் தனது தாயாரின் பெயரில் பாக்யா பதிப்பகம் எனும் பதிப்பகத்தையும் தொடங்கியிருந்தார் திலகர். அதன் முதல் வெளியீடுகளாக தனது நூலை மாத்திரமல்லாது. மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் “இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே” எனும் நெடுங்கவிதை நூலை ஆங்கிலமூலத்துடன் இணைத்து மறுமதிப்பு செய்தும் வெளியிட்டிருந்தார். ஆச்சரியமிக்க அந்தப் பணியின் நோக்கத்தை கேட்டபோது, “இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே” முக்கியத்துவம் மிக்க கவிதை நூல். ஆனால் இன்றைய தலைமுறை வாசிக்க பிரதிகள் இல்லை. அதனால் மறுபதிப்பு செய்ய எண்ணினேன். எனது நூல் ஒன்றை வெளியிடும்போது இத்தகைய முக்கியத்துவம் மிக்க நூல் ஒன்றை மறுபதிப்பு செய்யலாம் என எண்ணம் கொண்டுள்ளேன் என்றார்.

அதன்போதே வண்ணச்சிறகு அரு. சிவானந்தன் பற்றியும் அவரது “ சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” கவிதை பற்றியும் கூறினேன். மனதில் உள்வாங்கிக்கொண்டவர் பின்னொருதடவை சந்தித்த போது “வண்ணச்சிறகு” கவிதைத்தொகுதியை இந்தியா சென்ற போது தேடிப்பிடித்து விட்டதாகவும் தனது இரண்டாவது நூல் வெளிவரும்போது நிச்சயம் மறுபதிப்பு செய்வேன் என்றும் சொன்னார். அவரது ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தியது.

அந்தக்காலம் 2012ஆக இருக்கலாம். அப்போது கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறும் “இலக்கியக்களம்” நிகழ்ச்சியில் அரு.சிவானந்தன் கவிதைகள் பற்றி பேச முடியுமா எனக் கேட்டேன். ஒத்துக் கொண்டவர், எனது தலைமையில் ஆற்றிய ஆய்வுரை பலரதும் பாராட்டைப் பெற்றது. அந்த உரையின் சாராம்சத்தையே இந்த இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரையாக இந்த நூலில் பதிவு செய்திருப்பது சிறப்பு.

இலக்கிய செயல்பாடுகளுடன் அரசியல் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் கூட கொண்டிருந்த திலகர் 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இனி இலக்கியப்பக்கம் வரமாட்டார் என்று எதிர்பார்த்தவர்களை ஆச்சரியப்படச்செய்த அவரோ முன்பை விட தீவிரமாகவே இலக்கியச் செயற்பாட்டிலும் ஈடுபடலானார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இலக்கிய சந்திப்புகள், ஆய்வரங்கங்களில் கலந்து கொள்ளச் செய்தார். இந்தியா, தமிழ்நாடு திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் நடாத்திய மலையக இலக்கிய ஆய்வரங்கில் எங்களுடன் ஓர் இலக்கியவாதியாகவே கலந்து கொண்டு மலையக கவிதை இலக்கிய செல்நெறி குறித்து கட்டுரை சமர்ப்பித்தார். தவிரவும், தமிழ்நாட்டுடன் குறிப்பாக தாயகம் திரும்பிய உறவுகளுடன் எப்போதும் நெருக்கமான தொடர்பைப் பேணுபவராகவும் திலகர் திகழ்கிறார்.

2020 அவரது முதலாவது பதவிக்கால இறுதி நாளான மார்ச் 02 காலை எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் எனக்களித்த “தமிழ்நிதி” பட்டத்திற்காக வாழ்த்து தெரிவித்ததோடு உங்களுக்கு இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி, என்னுடைய இரண்டாவது நூலான “மலைகளைப் பேசவிடுங்கள்” அடுத்த வாரம் வெளிவரவுள்ளது கூடவே “வண்ணச்சிறகு” கவிதைகளை “ “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” எனும் தலைப்பில் மறுபதிப்பு செய்தும் வெளியிட உள்ளேன். உங்களுடைய குறிப்பு இந்த நூலுக்கு முக்கியம் வேண்டும் என்றார்.

2007 ல் நான் விடுத்த வேண்டுகோளை 13 வருடங்கள் கழித்தும் நிறைவேற்றும் நல்லுள்ளம் கொண்டவர் மல்லியப்புசந்தி திலகர். அவரதுஅரசியல் பணிகள் மாத்திரமல்ல இலக்கிய பணிகளும் தனித்துவமானவை. வரலாற்றில் இடம் பெறக்கூடியவை. அவரது பாக்யா பதிப்பக முயற்சிகள் மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை, மூதறிஞர் சக்தீ பால அய்யா, சாகித்ய ரத்ணா தெளிவத்தை ஜோசப், கல்வியாளர் எம்.வாமதேவன், கலாபூஷணம் மு.சிவலிங்கம், நாடகாசிரியர் முத்தையா மாஸ்டர் போன்ற மூத்தவர்களினது படைப்புகளை பதிப்பித்த சிறப்பு கொண்டது. அத்துடன் திறனாய்வாளர் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரைத் தொகுப்பு, இளம்வரவு தானா.மருதமுத்துவின் கவிதை நூல் ஆகியவற்றையும் கூட வெளியிட்டுள்ளது. அந்த வரிசையில் அரு.சிவானந்தனின் கவிதைகளையும், அவரது “வண்ணச்சிறகு” தொகுப்பில் வெளிவந்த காலத்தை வென்ற கவிதையான “சென்று வருகிறேன் ஜென்ம பூமியே” எனும் மகுடத்தில் மறுபதிப்பு செய்வதன் ஊடாக பாக்யா பதிப்பகம் ஓர் உயிர்த்தெழுதலை நிகழ்த்துகிறது எனலாம்.

திலகரின் எல்லா முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

 

அன்புடன்

அந்தனி ஜீவா.

57, மகிந்த பிளேஸ் , கிருலப்பனை

03.03.2020