எழுத்துலகத்திலும் அவரின் ஈடுபாடு ஒருபோதும் குறைந்ததில்லை

இலங்கைத்தேயிலையின்நூறாவது ஆண்டுநிறைவைக் கொண்டாடுவதற்காக, இலங்கைத்தேநீர் பிரசாரசபை தேயிலையின் நூற்றாண்டு வளர்ச்சி குறித்து சிறப்பு நூலினைஎழுதுவதற்கு D.M.Forrest  என்றஆங்கிலஎழுத்தாளரைப்பணியில்அமர்த்தி, A Hundred Years of Ceylon Tea (1867-1967)என்றநூலை1967ஆம்ஆண்டில்வெளியிட்டது.

இந்நூல் 320பக்கங்கள்கொண்டது.பதினாறு அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலில், வெளிமடைக் குமரனின்வார்த்தைகளில் ‘உதிரத்தை நீராக்கி தேயிலைக்கே ஊற்றிவிட்ட’ மலையகத்தொழிலாளர்கள் பற்றி ஒரு அத்தியாயத்திற்குக்கூட இடமில்லாமல்போய்விட்டது.தோட்டத்துலயங்களிலிருந்து எழும் பெருங்கூச்சலும், தலைமுடியைப்பிடித்துக்கொண்டுஅவர்கள் போடும் சண்டைகளும் இந்த நூலாசிரியருக்கு, மலையக மக்களது சமூகவாழ்வின் முக்கிய அம்சங்களாகத் தோன்றி இருக்கிறது.

இலங்கையின் கோப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்களில் அதன் 200 ஆண்டுகாலவரலாற்றில் மலையக மக்களின் ஒரு கோடி உயிர்களாவது பலியாகியுள்ளன.மலையகமக்களின் பேருழைப்பில், பெருமூச்சில், கண்ணீரில், வியர்வையில், ரத்தத்தில், ஏழ்மையில், ஏக்கத்தில், எலும்புக்கூடுகளில்தான்மலைநாடு அல்ல, முழு இலங்கையுமே வளம் கண்டது.அந்த மக்களின் உழைப்பில்தான்இலங்கை நவீனத்தைநோக்கி நகர்ந்தது. இலங்கையின் நாகரிக வளர்ச்சிக்கு, நவீனமோஸ்தர் வாழ்க்கைக்கு, ஆடம்பர வாழ்க்கைக்குஇந்த பஞ்சைபராரிகள்தான் ஓடாய்உழைத்தனர்.

 

ஆனால், வெள்ளை  ஏகாதிபத்தியக்கட்டமைப்பில்அவர்கள் மனிதர்களாகவேகணிக்கப்படவில்லை. Gangஎன்று அவர்கள்அழைக்கப்பட்டனர்; கம்பளிகளைப்போர்த்தியபடி தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களைப்பார்க்கும்போது, ஒரு தோட்டத்துரைக்கு ‘கறுத்த செம்மறியாட்டுக்கூட்டம்மேய்ந்துகொண்டிருப்பதை’ போலத்தெரிந்திருக்கிறது. கோப்பித்தோட்டங்களில்வேலைபார்க்கப்போதுமான தொழிலாளர்கள் கிடைக்காதபோது, இந்தியாவிலிருந்துதொழிலாளர்களைக்கொண்டுவரஎவ்வளவுமுயற்சிகள் மேற்கொண்டபோதும், வேண்டியbodiesவந்து கிடைக்கவில்லை என்று ஒரு துரை ஆதங்கப்பட்டிருக்கிறான்.

 

‘இலங்கையின்தமிழ்க்கூலி அதிர்ச்சிதரும் காட்டுமிராண்டி – அருவருக்கத்தக்க, பரிதாபகரமான சிருஷ்டி’என்று ஹென்றி டபிள்யு கேவ் என்ற எழுத்தாளர் வெறுப்பைஉமிழ்கிறார்.1911ஆம் ஆண்டில் இலங்கையின் குடிவிபரவியல் அறிக்கையில், ஒவ்வொரு இனத்தவரும் இலங்கை வரைபடத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும்தாங்கள் கண்டுபிடித்த கற்பனார்த்த தேசிய உடையில் நிமிர்ந்துவாசகரைநேரே பார்க்கும் பாணியில் தோன்ற, இந்தியத்தொழிலாளர் மட்டும் வளைந்துகுனிந்து, தேயிலைச்செடிக்கு உழைப்பை வழங்கும் பாவனையில், பார்ப்பவரின் பார்வைக்குள் வராமல் நின்றுகொண்டிருப்பதை பேராசிரியை நிராவிக்ரமசிங்க அவதானிக்கிறார்.

இவையெல்லாம் காலனியச்சித்திரம் என்றால், இலங்கையின்சுதந்திரத்திற்குப்பின் நிலை இன்னும் மோசமாகியது. 1948இல் இலங்கையின்அரசியல் வானில் ஒளிக்கிரணங்கள் வீசியபோது, மலையகத்தமிழர்கள் வாழ்விலோஅந்தகாரம் கவிழ்ந்தது. இலங்கை என்பது வெறும் பிராந்திய, புவியியல்பிரதேசமாகத்தோற்றம் தந்ததே தவிர, ஒரு தேசமாக உருவாகவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் இருந்தனரேதவிர, இலங்கையர்களைக்  காணவில்லை.  சிங்களவர்கள்என்று பெரும்பான்மை இனம் ஒன்று உருவாக்கப்பட்டது. Majorities are made, not bornஎன்கிறார் Dru Gladney.பத்துலட்சம் மக்கள்  அரசியல் களத்திலிருந்து அநாயாசமாகக்கூட்டோடு தூக்கி எறியப்பட்டனர்.

இலங்கையில் அவர்கள் ரத்தமும் தசையுமாய் உயிர்கொண்டிருந்தாலும்  அரசியல்கண்களில் அவர்கள் அந்த நாட்டிற்கு உரியவர்கள் அல்லவர்களானார்கள். அவர்கள்இலங்கையர்கள் ஆகமாட்டார்கள் என்று அரசு கூறியது.அவர்கள்  இந்தியர்கள் ஆகமாட்டார்கள் என்று இந்திய அரசு கூறியது.

இலங்கையில் மலையக மக்கள் தங்கள் உரிமைக்காக நடத்திய போராட்டங்கள்நீண்டன. அந்த மக்களின் போராட்ட வரலாற்றை, சமகால பிரச்சினைகளை அவர்கள்  மத்தியிலிருந்து இளஞாயிறு போலெழுந்த மல்லியப்புசந்தி திலகர்இந்தநூலில்பேசுகிறார். ‘மலைகளைப்பேசவிடுங்கள்’ என்று தனது நூலுக்குஅவர் மகுடம் சூடியிருக்கிறார்.

Go Tell It on the mountain,

       over the hills and everywhere;

Go tell it on the Mountain,

       that Jesus Christ is born

என்ற ஆபிரிக்க-அமெரிக்க கிறிஸ்தவ பிரார்த்தனைப்பாடல் பிரபல்யம் மிக்கது.

அந்த அடியையொட்டி James Baldwinஎன்ற எழுத்தாளர் Go Tell It on the mountain  என்ற தலைப்பில் எழுதிய நாவல் இன்று கிளாசிக் அந்தஸ்தைஎட்டியிருக்கிறது.

இங்கெல்லாம் மலை என்பது உங்களின் செய்தியை வெறுமனே கேட்டுநிற்கும்passive பொருளாகவே அமைந்திருந்தது. அதுவும் நல்ல செய்திகளை மட்டுமே உரத்துப்பிரகடனப்படுத்துவதற்குரிய ஒரு இடமாகவே அதனைப்பார்த்திருக்கிறோம்.

ஆனால், மல்லியப்பு திலகர் மலைகளை வெறும் அசையாத,  உயர்ந்த பர்வதங்களாகமட்டுமே பாராது, இந்த நூலில் மலைகளைப் பேசவிட்டிருக்கிறார். விண்ணைத்தொடும் அந்த மலைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். மலையக மக்களின் துயரவாழ்வினை, அவர்கள் காலம்காலமாகத் தாங்கிநின்ற சிலுவைகளை, பாடுகளை ,பலிகளைப் பேசுவதற்கு இந்த மலைகளைவிடத் தகுதியானது எது?  மலைக்குரல் என்றும், குன்றின் குரல் என்றும் ஏற்கெனவே இந்தக்குரல் நமக்குபழகிப்போயிருந்தாலும், ‘மலைகளைப்பேசவிடுங்கள்’  என்ற தலைப்பிலே தொனிக்கும்காம்பீரியம், தற்துணிபு, தைரியம், எதற்கும் தளராதமனத்திண்மை என்பன, அத்தலைப்பிற்குத் தனிச்சோபை சேர்க்கிறது.

 மல்லியப்புசந்தி திலகர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேதான் இந்த தலைப்பைத்தேர்கிறார். ‘மலைகளின் மௌனத்திற்குக்கீழே பல குமுறல்கள் புதைந்துகிடக்கின்றன.மலைகளைப்பேச விடுங்கள்’ என்று இந்த இளம் சிங்கம்அரசபேரவையிலேஆர்ப்பரித்திருக்கிறது. அந்த மலைகள் இந்த நூலிலே பேசுகின்றன.

தோய்ந்து துவண்டு கிடந்த மலையக அரசியலில் புதிய நட்சத்திரமாய்உதயமாகியவர் மல்லியப்பு சந்தி திலகர். நுவரெலியா தேர்தல் தொகுதியில் திலகர்போட்டியிட்டபோது அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த பெரும் செல்வாக்கை நான்நேரடியாகப்பார்த்திருக்கிறேன்.’ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானதொழிலாளர்களைப்பார்க்கிறேன்’ என்று ஹட்டனில் தொழில் பார்த்த ஒருசட்டத்தரணி தனது சமூக ஈடுபாட்டிற்கு சாட்சியம் சொல்கிறார்.

வெறுமனேதொழிலாளர்களைப்பார்த்துக்கொண்டிருப்பதுகூட சமூக சேவை என்றாகிப்போன  அவலச்சூழலில், ஒரு மின்வெட்டாய் வெளிக்கிளம்பியவர் திலகர். இலக்கியச்சூழலில்முதலில் அறிமுகமான திலகர், பின்னர் அரசியலில் தன்னைபட்டைதீட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு  மக்களின்பாஷையில்பேசத்தெரிந்திருக்கிறது.மக்களின் பிரச்சினைகள் எவையென்பதை அவர்மக்களின் நாடிபிடித்துப்பார்த்து அறிந்து வைத்திருக்கிறார்.

பாராளுமன்றத்தில்மலையக மக்களின் பிரச்சினைகள்  குறித்து, திலகர் சிங்களத்தில் ஆற்றிய உரைஅனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தினைப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மதிப்பாய்வினை நிறுவனமயப்படுத்தும் அம்சத்தைத் தேசியக்கொள்கையாகமுன்னெடுப்பதில் திலகர் வகிக்கும் பங்கு பாராட்டத்தக்கது. அமைச்சர் கபீர்ஹாசிம், பிரதிச்சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க ஆகியோருடன் இணைந்து,  இளைஞர்திலகர் மேற்கொண்டுவரும் பணி தேசியரீதியில்அவர்பெயரை என்றும்நிலைநிறுத்தும்.

பொருளாதார முகாமைத்துவ அறிவுடன், கணக்கியல் துறைசார்கல்வியுடன் அரசுத்திட்டங்களின் மதிப்பாய்வினை நெறிப்படுத்தும் தகைமையினைத்திலகர் கொண்டிருப்பது அவரின் செயல் திறனுக்கு வலிமை சேர்க்கிறது.

மலையகத்தமிழர் சமூகத்தில் மாற்றம் கோரும் பேராவலில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய மலையக மாணவர்கள் தீவிரமாக செயற்பட்டகாலங்கள் உண்டு. நமது அனுபவத்தின் வரம்பில் இர. சிவலிங்கம் இத்தகையசெயற்பாட்டின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.மலையகத்தின் படித்த இளைஞர்களின்ஆதர்ச அரசியல் தலைவராகத்திகழ்ந்தார்.அவரின் தலைமைப்பண்பும், எளிமையும், அர்ப்பணிப்பும், சொல்வன்மையும், தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றொழுக்காகஉரையாற்றும் திறனும், அயராத உழைப்பும் எழுத்துவன்மையும் அவரின் பெரும்பலமாகத்திகழ்ந்தன. எல்லாக் கட்டங்களிலும் தனது சமூக ஈடுபாட்டிலிருந்தும் அரசியல் செயற்பாட்டிலிருந்தும் அவர்ஒருபோதும் ஒதுங்கிக் கொண்டதில்லை.

இலங்கைப்பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய மலையகப்பட்டதாரிகளில்,திலகர்  தனதுதனித்த அரசியல் பாதையை வெற்றிகரமாகச்செதுக்கிக்கொண்டிருக்கிறார். வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு அமைப்புகளில்இணைந்து மலையக சமூக உணர்வுடன் செயற்பட்ட இளைஞர்களின் மிகப்பெரிய பட்டியலேநம்மிடம் உண்டு.பலர் தத்தம் தொழிற்பதவிகளில்உயர்நிலைகளை எட்டி, புதியதலைமுறைக்கு முன்னுதாரணங்களாகத்திகழ்ந்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் உன்னத பதவிகளைப் பெற்று  மலையக அறிவியல் தகைமைக்கு அணிசேர்த்திருக்கிறார்கள். இலக்கியத்துறையில் பெருமைப்படத்தக்க சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். கணக்காளர்களாக, சட்டத்தரணிகளாக, நல்லாசிரியர்களாக ,நீதியரசர்களாக, ராஜாங்கத்தூதுவர்களாகவெல்லாம் கிளைவிரித்து மலையகம் வலுப்பெற்றுவருகிறது.

மலையகப்பிரச்சினைகளைத் தேசியஅளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும்எடுத்துச்செல்லும் வாய்ப்பும், அதற்கேற்ற தகுதியும் கொண்டவராகத் திலகர்திகழ்கிறார்.ஐரோப்பாவிலும் பிறவிடங்களிலும் நிகழும் இலக்கியச் சந்திப்புகளில்திலகர் மலையகம் குறித்து ஆற்றிய உரைகள் பெரும் தாக்கத்தைஏற்படுத்தியுள்ளன என்பதனைச் சொல்லியாகவேண்டும்.மலையகத்திற்கும் புலம்பெயர் நாடுகளில் வாழ்வோருக்குமிடையிலான நல்லுறவுப்பாலமாக திலகர் இயங்குகிறார். நட்பினைப்பேணுவதில் திலகர் உன்னதமானவர். ஐரோப்பாவில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டம் இருக்கிறது.

இந்தியவம்சாவளித்தமிழர்கள் என்று கூறுபவர்கள் துரோகிகள் என்றுமரணதண்டனைத்தீர்ப்பு வழங்கும் மகானுபவர்கள் உலவும் சூழலில், தாயகம்திரும்பிய மலையகத்தமிழர்களை மீண்டும் மலையக மண்ணுடன் இணைத்து, இந்தஇரட்டைவழிப்பயணத்தை மீட்டெடுத்ததில் திலகரின் பங்கு குறிப்பிடத்தக்கது.இச்சந்தர்ப்பத்தில் தமிழகத்திலிருந்து’மக்கள் மறுவாழ்வு’ என்றபத்திரிகையை நடத்தி மறைந்த எழுத்தாளர்  தொ.சிக்கன்ராஜ்அவர்களை நினைவில்கொள்வது பொருந்தும்.

பரந்த பார்வையில் பிரச்சினைகளை அணுகும் சிந்தனையும், தொலைநோக்குப்பார்வையும் மக்களை அணுகும் சாதுரியமும் திலகரின் அரசியல்வெற்றிக்குக் கைகொடுத்திருக்கின்றன.

அரசியல், இலக்கிய ஆளுமைகளைக் கவனப்படுத்துவதில் திலகரின் பரிவும்பணிவும் அக்கறையும் தனித்து நோக்கத்தக்கது. ஒரு eccentricபோக்குடையவராகக்கருதப்படும் சக்தி அ.பாலஐயா அவர்களை இறுதிவரை பாதுகாத்துப்பேணியவர்திலகர். பேராசிரியர் கா.சிவத்தம்பியை அவரின் இறுதிக்காலங்களில்சந்தித்து, உரையாடி அவருக்கு பலமாக இருந்திருக்கிறார். மலையகத்தின் மகத்தானஇலக்கிய வியக்தியாகத் திகழும் தெளிவத்தைஜோசப் அவர்களை என்றும் கவனப்படுத்திவருபவர் திலகர். இன்றும் தங்கள் வீடமைப்புத் திட்டங்களுக்கு மலையகப் பெரியார்களின் பெயர்களை வைத்து கெளரவம் செய்திருக்கும்செயல் திலகரின் பெயரை என்றும் மலையகத்தில் நிலைநிறுத்தும்.வயதில்இளையவரானாலும் முதிர்ந்த அரசியல் ஞானியின் பக்குவம் அவருக்குச்சித்தித்திருக்கிறது.

தனது உரிமைக்காக, தன்  முதுமையிலும்அயராதுபோராடியஎஸ்.ஆர்.அந்தோனிஎன்ற போராளியைத் திலகர் இந்த நூலில் அறிமுகம் செய்கிறார். சிறிமாவோபண்டாரநாயக்க மலையகத்தமிழர்கள் குறித்து மேற்கொண்ட பாதகமானநடவடிக்கைகளைப்பற்றிப்பேசும் பகுதி முக்கியமானது.உள்ளூர் நிர்வாகமட்டத்தில்மலையகத்தமிழர்களை ஒதுக்கிவைத்த நிலைமைகளை மாற்றியமைப்பதில் திலகரின் பங்கு,அவரது பாராளுமன்றச் சாதனையைக் குறிக்கும். பெரும்பான்மை இனத்தவருக்குபிரச்சினைகளை எடுத்து விளக்கி அவர்களின் அனுசரணையுடன் நமது உரிமைகளைவென்றெடுத்திருப்பது அரசியல் ஆடுகளத்தில் சாதுரியமாக காய்நகர்த்தும்திலகரின்  பெரும்ஆற்றலைநிரூபிக்கிறது.

அரசியல் செயற்பாடுகள், தொடர்ச்சியான ஊடக ஊடாட்டங்கள், பொதுநிகழ்ச்சிகள், வெளிநாட்டுப்பயணங்ககள், தொழிற்சங்க நடவடிக்கைகள், எதிரணிகளுக்கெதிரான தீவிர வாதங்கள் என்று அவரது பொழுதுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும் எழுத்துலகத்திலும் அவரின் ஈடுபாடு ஒருபோதும்குறைந்ததில்லை என்பதை இந்த நூல் நிரூபணம் செய்கிறது.

திலகரின் பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். பேசவந்த பொருளுக்குள்வரம்பு கட்டி, எளிமையாகவும் கவர்ச்சிகரமாகவும் உரையாற்றும் வல்லமையை அவர்கொண்டிருக்கிறார். நாளும்பொழுதும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைஎல்லாத்தளங்களிலும் சந்திக்கும் திலகர் கொண்டிருக்கும் தகவல் கிட்டங்கி விரிவானது. எடுத்துக்கொண்ட எதனையும் எடுத்தோம் கவிழ்த்தோம்என்றில்லாமல் நிதானித்துச் செயற்படும் பாங்கு அவரின் இலக்கின் தூரத்தைகுறுக்கிக்கொடுக்கிறது.

மலையகம் நம்பிக்கைக்குரிய ஒரு அரசியல்தலைவனைப்பெற்றிருக்கிறது என்பது நமக்கெல்லாம் தேனாய் இனிக்கும் செய்தி. திலகர் தனது இலட்சியஅரசியல் பயணத்தில் மேன்மேலும் வெற்றிகள் பெற என் நல்வாழ்த்துக்கள்.

 

மு.நித்தியானந்தன்

லண்டன்

19.11.2019