மலையகத்தின் புதிய பரிமாணமாக….

ஈழம் என்று சொன்னால் நாம் எல்லாம் அதில் உணர்வுபூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும் இணைந்திருக்கிறோம் . அதற்கு காரணம் 1983க்குப் பிறகு ஈழத்தில் சிங்களத்-தமிழ் இனக்கலவரத்தோடு ஏற்பட்ட போர்ச்சூழல். அதையொட்டி தமிழகத்தில் ஈழம் தொடர்பான ஒரு ஆதரவுக் குரல்கள் வெளிப்பட்டு இன்றுவரை அதனை வெவ்வேறு வடிவங்களில் அதனைத் தாங்கியவர்களாக உள்ளோம்.
அரசியல் களம் தாண்டி ஈழத்திற்கு இன்று இன்னொரு முகம் இருக்கிறது. ஒரு காலத்தில் தமிழ் இலக்கியம் தமிழ்ப்பண்பாடு என்பது தமிழகம் அளவினதாக  இருந்தது. ஆனால் இன்று தமிழ்ப் பண்பாடு என்பதும் தமிழ் இலக்கியம் என்பதும் தமிழகம் தாண்டி ஈழத்தில் வாழக்கூடிய மக்கள் சார்ந்ததாகவும் அதனையும் தாண்டி உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பண்பாடு சார்ந்ததாகவும் மாறி இருக்கிறது.
ஏறக்குறைய தமிழ் இலக்கியமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனும் ஐந்திணைகள் வகுத்தது இன்றைக்கு கடல்வழியாகவும், வான்வழியாகவும் புலம்பெயர்ந்து சென்று நாடற்றவர்களாக, தங்களது மனோபாவங்களைத் தேசத்தைத் தாண்டியவர்களாக  கொண்டு வாழ்வோரின், அவர்களது வாழ்நிலப்பரப்பை  ஆறாம் திணையாக வேண்டி நிற்கிறது.
ஏறக்குறைய 1983 க்குப் பின்னாhல் ஈழத்தில் இடம்பெற்ற சூடான நினைவுகளை தமிழகத்தில் வைத்திருப்பது அரசியல் மட்டுமல்ல அதற்கு அங்கிருந்து வெளிவந்த படைப்புகளும் மிக  முக்கியமான பங்கை வகிக்கின்றது. குறிப்பாக சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் உள்ளிட்டோர் ஈழப்பிரச்சினை குறித்து எழுதிய கவிதைகள் அந்தப் பிரச்சினையை தமிழ்நாட்டில் புரிந்துகொள்வதற்கு பெரும் உதவியாக இருந்தது.
இப்படி ஈழம் பற்றிய ஒரு பார்வை இருக்கின்ற நிலையில், ஈழம் பற்றி நாம் யோசிக்கும்போது பெரும்பாலும் நம் கவனத்துக்கு வராத ஒரு பகுதி இருக்கிறது. அது ஈழம் என்ற பொது அடையாளம் எந்த அளவுக்கு கவனத்துக்கு வந்து இருக்கிறதோ அதற்கு இணையாக வந்திருக்க வேண்டிய ஒரு அடையாளம். ஒரு பேசுபொருள். ஆனால் துரதிஸ்டவசமாக அது அந்தளவுக்கு வரவில்லை. அது என்னவன்றால் ஈழத்தில் வாழக்கூடிய தமிழ் மக்கள் என்றால் அது; ஒரு பகுதியைசார்ந்தவர்கள் இல்லை. அங்கு வடபகுதியில் யாழ்ப்பாணத்தில், கிழக்கில் மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழ்வதைப்போலவே தெற்கில் மலையகத் தமிழர்கள் எனும் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதுதான். ஈழத்தில் மலையகத் தமிழர்களும் வாழ்கிறார்கள் என்பதை அறியாத ஒரு தலைமுறையினரே கூட இப்போது இங்கே தமிழகத்தில் இருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் என்று சொன்னால் அதில் மலையகத் தமிழர்களும் அடங்கியுள்ளார்கள் எனும் புரிந்துகொள்ளக்கூடிய ஓர் ஓர்மையை உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஓர் அவசியத்தில் நாம் இப்போது இருக்கிறோம். அத்தகைய ஒரு விழிப்புணர்வை, மலையகம் எனும் தனி அடையாளத்தை உருவாக்கி வளர்த்து வந்ததில் ஒரு பெரிய ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபின் தொடர்ச்சியாக ஒரு எழுத்தாளராகவும் அரசியல் செயற்பாட்hளராகவும் மலையகத்தை சர்வதேச மட்டத்திற்கும் கொண்டு சென்றதில் மல்லியப்புசந்தி திலகர் எனும் இந்த நூலாசியருக்கு ஒரு பங்கு இருக்கிறது.
ஏறக்குறைய 150 முதல் 200 வருட காலத்திற்கு முன்பு கோப்பி, தேயிலை முதலான பயிர்சார்ந்து பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட பெருந்தோட்டங்களில் உழைப்பதற்காக தமிழகத்தில் இருந்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் இடம்பெயர்நது சென்றார்கள். இந்த 150-200 வருடகால வரலாற்றில் அவர்கள் தமிழக அடையாளங்களில் இருந்து முற்றிலும் விலகி ஈழத்தில் தனித்துவ அடையாளம் பெற்றவர்களாக அந்த வாழ்வாதாரத்தின் பின்னணியில் வாழக்கூடியவர்களாக பழகிப்போனர்கள். இப்போது அவர்களின் சொந்த நாட்டோடு எந்த தொடர்பும் இருக்க முடியாது. அதேநேரம் ஈழத்தில் பாரம்பரியமாக  வாழ்ந்துவருகிற  தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவும் ஆகிப்போனார்கள். இப்படி பண்பாட்டு அடிப்படையிலும் அரசியல் அடிப்படையிலும் தனித்துவமான, தனித்து நடாத்தப்புடுவதனால் அதுசார்ந்த தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர்களாக மலையகத் தமிழர்கள் உருவானார்கள்.
அவர்களுடடைய பிரச்சினைகள், போராட்டம் அனைத்து ஈழத்தமிழர்கள் எதிர்கொள்கின்ற அடையாளங்களை ஒத்ததாக இருந்த அதேநேரம் அவர்களுக்கென்றே தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டதாகவும் இருந்தது. பெருமளவு தோட்டத் தொழிலாளிகளாக, உடல் உழைப்பாளர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களுடைய உழைப்பு அவர்களுடைய  வாழ்வியல் முறை என்பது வேறாக இருந்தது. அவர்கள் மத்தியில் பணியாற்றுவதற்கு, தொழிற்சங்கங்களும், அந்த தொழிற்சங்கம் சார்ந்த அமைப்புகளும் அதன் தலைவர்களும் உருவாக வேண்டிய அவசியம் எழுந்தது
. இந்த நிலையில்தான் மலையகத் தமிழர்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்ட ஒரு தனித்த இலக்கிய மரபு உருவானது. அந்த தனித்த இலக்கிய மரபு என்பது ஈழத்து தமிழர்கள் மத்தியிலான எழுத்துசார்ந்த மரபுபோல் அல்லாமல் வாய்மொழி பாடல்களாக, கீர்த்தனைகளாக, சிந்துகளாக இங்கிருந்து இடம்பெயரந்து சென்ற மக்கள், தாங்கள் இடம்பெயர்ந்துசென்ற அந்த வழிநடையின் துயரத்தை பாடல்களாக மாற்றினார்கள்.
அங்கே தோட்டத் துரைமார் எவ்வாறு அவர்களை நடாத்தினார்கள் அதற்காக எவ்வாறு, போராடினார்கள் என்பதை ஆரம்பத்தில் வாய்மொழியாகவும் பின்னாளில் எழுத்துருவிலும் இலக்கியங்களாக உருவாக்கியிருக்கிறார்கள். எந்தவகையிலும் மலையகத்தவர்கள் யாழ்ப்பாணத்தவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லக்கூடிய வகையிலே மலையத்தவர்கள் இலக்கியத்திலே ஒரு பொது அடையாளத்தை உருவாக்கியிருககிறார்கள். ‘மiகைளைப் பேசவிடுங்கள்’ எனும் தலைப்பே கூட வ.செல்வராஜா எழுதிய ஒரு நாடகத்தினதும்  தலைப்பு என்றே நூலாசிரியர் தன்னுரையிலே குறிப்பிடடுள்ளார். மல்லியப்புசந்தி என்பதே கூட அவர் முதலாவாக வெளியிட்ட கவிதைத் தொகுப்பின் பெயர்தான். அது மலையககத்திலே ஹட்டனிலே அமைந்திருக்கக்கூடிய மக்கள் சந்திக்கின்ற ஒரு இடத்தின் பெயர்   அது வெறும் இடமல்ல. அது ஒரு அடையாளம்.  அது அவர்களின் வாழ்வியலோடு இணைந்த விடயங்களைச் சொல்லுகின்றபோது ஒரு இடத்தின் பெயராக அல்லாமல் ஓர் வாழ்வின்  அடையாளமாகவே அமைந்துவிடுகின்றது. பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் முன்னுரையோடு நூலிசியரே உருவாக்கிய பதிப்பகத்தின் ஊடாக ‘மல்லியப்புசந்தி’ எனும் நூலை அவரே வெளியிட்டு இருக்கிறார்.
மலையக இலக்கியம் தொடர்பான ஒரு ஆய்வரங்கம் இரண்டொரு ஆண்டுகளுக்கு முன்னர் திண்டுக்கல், காந்தி கிராமிய பல்கலைக்கழகத்திலே நடைபெற்றது. இலங்கை மலையகத்pல் இருந்து பல இலக்கிய ஆய்வறிஞர்கள் எழுத்தாளர்கள் அங்கே உரையாற்ற வந்திருந்தார்கள். அதன்போது ஈழத்தின் மிக முக்கிய எழுத்தாளுமையான தெளிவத்தை ஜோசப் அவர்களும் வந்திருந்தார். அவரின் வயதின் காரணமாக அவருடன் கூட வந்திருந்த இளையவரான  அவரது  உதவியாளர் என்றுதான்  மல்லியப்புசந்தி திலகரை நான் கணித்தேன். பின்புதான் தன்னை முன்னிலைப்படுத்தாத மூத்தவருக்கு உதவுகின்ற எளிமையான மக்கள் பிரதிநிதியாக நான் அவரை அறிந்துகொண்டேன். அதன் பின்னர் சமூகவலைதளத்தின் ஊடாக அவரை பின்தொடரந்தபோதுதான் அவரது முக்கியத்துவத்தை உணரக்கூடியதாக இருந்தது.
சமகாலத்தில் மலையகத் தமிழர்களின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர்களில் திலகர் தனித்துவமானவராக விளங்குகிறார். அவர் கல்விப்புலமிக்கவமராக் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழி பேசுபவராக இருப்பது, இதழ்களில் எழுதுபவராக, கவிதை இயற்றுபவராக, மலையக இலக்கிய முன்னோடிகளைத்  தேடிச்சென்று ஒரு தொடர்பை உருவாக்கிக்கொள்பவராக, மலையகத்தின் வரலாறு பற்றிய ஓர் ஓர்மையை உள்வாங்கி அதனடிப்படையில் மலையக மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்பவராக இருப்பதை இவரிடத்தில் காண்கிறேன். இவற்றுக்கு மேலாக அதிகாரப்பகிர்வு விடயத்தில் மலையகத்துக்கு இருக்க Nவுண்டிய பக்கத்தை பிச்சினைகளை தனது அரசியல் முன்னோடிகளான மனோகணேசன், திகாம்பரம் போன்றவர்களின் வரிசையிலே இணைந்து முன்வைப்பவராக, மலையக மக்களின் பிரச்சினைகளை  சர்வதேச அரங்குகளிலும் பேசுபவராக பல்வேறு நாடுகளுக்கு பயணிப்பவராகவும் உள்ளார். சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது ஒன்று அல்ல அங்கு வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் வேறானதாக இருக்கின்றது என்பதை  இணைத்துச் சொல்பவராகவவும் எடுத்துச் செல்லக்கூடியவராகவும் இவரை அடையாளம் காண முடியும். இது அவரது முன்னோடிகளுக்கு இல்லாத வாய்ப்பு. அந்த வாய்ப்பினை மலையகத் தமிழர்களின் மாற்றத்துக்காக முன்னேற்றத்துக்காக இவர் செயற்படுத்திக்கொண்டிருபதை செலவிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த வளரந்த ஒருவரான   திலகர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக வந்திருக்கிறார் என்பது இங்கு கவனத்துக்குரியது. அந்த அனுபவம் அவருக்கு பெருமளவிலே உதவியிருக்கிறது.
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய பள்ளிக்கூடங்கள், சிறைச்சாலைகள் போன்றனவும் தொழிற்துறைகளில் உருவாக்கிய குடியிருப்புகள் அவர்களின் கண்காணிப்புக்கு ஏதுவாகவே அமைக்கப்பட்டுள்ளது. மலையகத்திலே அவை லைன் வீடுகள் என அழைக்கப்படுகின்றன. அத்தகைய லைன் வீடுபகளில் பிறந்து வளர்ந்த திலகர் அத்தகைய லைன் வீடுகளை மாற்றி தனித்தனியான வீடுகளை அமைக்கும் எண்ணக்கருவை வலுப்படுத்துதல், அந்த பிரதேசங்களை கிராமங்களாக மாற்றுவதற்கான திறவுகோலாக மலையக அதிகார சபை ஒன்றை நிறுவுதல் முதலான விடயங்களில் அதிக அக்கறை காட்டியு;ளளார்.
அவ்வாறு உருவாக்கப்பட்ட அதிகார சபை சம்பந்தமாக இந்த நூலிலே விரிவாக எழுதியுள்ளார். அரசியல் செயற்பாட்டாளரான திலகர் ஒரு எழுத்தாளராக இருப்பதன் காரணமாக தினசரிகளில், வார இதழ்களில் மலையக மக்களின் வரலாற்றையும் கடந்தகால அனுபவங்களையும் ஏறிட்டு அதில் இருந்து அவர்களின் தேவை என்ன என்பதையும் அது எவ்வாறு நிறுவப்பட்டிருக்கிறது என்பதையும் அடையாளம் கண்டு தொடராக பல கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். அத்தகைய கட்டுரைகளில் ‘அரங்கம்’, ‘ஞாயிறு தினக்குரல்’ ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
இந்த நூலினைப் படிக்கும்போது இரண்டு செய்திகளை நாம் அறிந்துகொள்ள முடியம். ஒன்று மலையகத் தமிழர் எனும் அடையாளம் எவ்வாறு உருவானது? அதற்கு முன்னர் அவர்களைச் சுட்டிய பெயர்கள் என்ன என்பன போன்ற விடயங்கள். மலையகத் தமிழர்கள் தொடர்ச்சியாக நடாத்திவந்திருக்ககூடிய போராட்டங்களுக்கு ஒரு ‘ஏஜன்ஸி இருக்கிறது. ஏஜன்ஸி என்றால்  இன்று அவர்களுக்கு கிடைத்துpருக்கக்கூடிய உரிமைகளுக்காக அவர்களே நடாத்தியிருக்கக்கூடிய போராட்டங்களை இந்த நூல் எடுத்துக்காட்ட முனைகிறது. ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட சமூகத்துக்கு இரண்டு விதமான போராட்டங்கள் அமையப்பெறுவதுண்டு. ஒன்று வெளியில் இருந்து அவர்கள் மீதான அரசியல் பரிவுணர்ச்சியின் காரணமாக இரக்கப்பட்டோ அல்லது தார்மீக உணரச்சியின் அடிப்படையிலோ வெளியில் இருந்து அவர்களுக்காக போராடக்கூடிய ஒரு பகுதி. உலகாளவிய ரீதியில் அவ்வாறான போராட்டங்களே அதிகம் பேசப்படுவதாக இருக்கின்றது. இன்னொன்று அந்த சமூகமே தனக்கான உரிமையை வென்றெடுப்பதற்கான போராட்டம். ஒரு சமூகம் தமக்குத் தாமே நடாத்திக்கொள்ளும் போராட்டம் பெரும்பாலும் சொல்லப்படுவதில்லை.
எழுதப்படுவதுமில்லை. திலகர் இந்த நூலை எழுதிச்செல்லுகின்றபோது மலையகம் ஏனும் அடையாளததை உருவாக்குவதில் இருந்து இன்று தமக்கான அதிகாரசபை சட்டத்தை  நிறைNவுற்றியது வரையாக தாங்கள் தன்னிச்சையாக நடாத்திவந்த போராட்டங்களை மிக ஏதுவாக தொகுத்துக்காட்டியிருக்கிறார். அதற்கான பொருள் அவர்களு;கக்காக மற்றவர்கள் பாடுபட்டார்கள் என்பதை புறக்கிணப்பதோ மறுப்பதோ அல்ல. ஒரு சமூகம் எப்Nபுhதும் வாய் மூடி கிடப்பதில்லை. அவர்களு;காக மற்றவர்கள் பாடுபடுவதுபோலவே, அவர்கள் அடக்கப்பட்டதற்காக அவர்களே கிளரந்ந்தெழுந்து போராடக்கூடிய ஒருவகைப் போராட்டம் ஒன்று இருக்கிறது. இந்த நூலில் என்னைக் கவர்ந்த அம்சமே, எங்களுக்கு ஒரு ஏஜன்ஸி இருக்கிறது. எங்களது முன்னோடிகள் கோ.நடேசய்யர் முதல் சிவலிங்கம் முதலானர்வகள்  எவ்வாறு அதனை முன்னகர்த்தி வந்துள்ளார்கள் என்பதை அவர் சொல்லமுனைவதுதான்.
மலையகத் தமிழர் வாழ்விலே இரண்டு விடயங்கள் ; பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒன்று 1948 குடியுரிமைப்பறிப்புச் சட்டம். இந்தச் சட்டம் அவர்களின் இலங்கைக் குடியுரிமையை மறததது. அதற்க காரணம் அவர்கள் கொண்டிருந்த இந்திய அடையாளம். இரண்டாவது 1964 ஆம் ஆண்டு செய்யப்பட்ட சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தம். இந்த ஒப்பபந்தத்தின் அடிப்படையிலே இந்தியாவில் இருந்து இலங்கை சென்று அங்கு பல ஆண்டுகாலம் வாழ்ந்து தலைமுறைகளைக் கடந்தவர்கள்; திடீரெண இரண்டு அரசாங்கங்கள் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இந்தியாவுக்கு நீங்கள் திரும்புங்கள் என்று சொல்லக்கூடிய ஒரு நிலை.
இந்த இரண்டு சட்ட விடயங்களினால் இந்த மக்களின் நிலை இலங்கையில் இந்தியர்கள் என்றும் இந்தியாவில் சிலோன்காரர்கள் என்றும் அந்நியப்படுத்தப்படுவதை இந்த நூலிலே தெளிவாக விளக்குகிறார். இந்த இரண்டுமே அவர்களது அடையாளத்தை மறுப்பதாகவே தெரிகிறது. மறுபுறம் மலையகத்தில் இருந்து சமவெளிப் பகுதியான வன்னியிலே சென்று ஒரு பகுதியினர் குடியேறியது பற்றியும் அவர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்புது பற்றியும் விரிவாக குறிப்பிடுகின்றார். அதில் அந்தனி என்பவரைப் பற்றிய விரிவான ஒரு பதிவை இந்த நூலிலே பதிவு செய்துள்ளார். பெரியவர்களாக அல்லாமல் சிறியவர்களாக இருந்தாலும் அவர்கள் மகத்தான காரியங்கரளச் செய்கின்றபோது அவர்களது வரலாற்று அடையாளங்களைத் தேடித்தரவேண்டியது நமது கடமை. அத்தகைய ஒருவராக அந்தனி என்பவர் திகழ்ந்திருக்கிறார். அவருக்குரிய அடையாளததைத் தந்தமைக்காக திலகர் மிகுந்த பாராட்டுக்குரியவராகிறார்.
இந்த நூல் இலங்கை மலையகம் தொடர்பாக அறியாமல் இருப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டக்கூடியதாக இருக்கும். அறிந்திருப்பார்களானால் அவர்களுக்கு  ஒரு புதிய பரிமாணத்தை வழங்கக்கூடும். அதற்காகவே இருசாராரும் வாசி;க்க வேண்டிய நூல். நூலாசிரியர் திலகருக்கு எனது வாழ்த்துக்கள்.
முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம்
பேராசிரியர்- அமெரிக்கன் கல்லூரி 
மதுரை  08-11-2019

'கொரொனா ஏற்படுத்தும் கல்விச்சவால்'

-மயில்வாகனம் திலகராஜா
இலங்கையில் மக்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படுகிறது என்பது இலங்கையின் பெருமைகளில் ஒன்று. அந்த இலவச கல்வி என்பதனை சிங்களத்தில் “நொமிலே அத்யாப்பனய” என அவர்கள் விளிப்பதில்லை. மாறாக “நிதஹஸ் அத்யாப்பனய” என்றே விளிக்கிறார்கள். அதனைத் தமிழ்ப்படுத்தினால் “சுயாதீனக் கல்வி” அல்லது “ சுதந்திரக் கல்வி” என தமிழில் பொருள்படும். எனவே தமிழில் எப்படி இலவசக்கல்வி என மொழியெர்க்கப்பட்டது என ஆராய்ந்தால் அது ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டு இருக்கலாம்.
ஆங்கிலத்தில் அது “ப்ரீ எடியுகேஷன்” ( Free Education) என சொல்லப்படுகிறது. Free எனும் ஆங்கிலச் சொல்லை தமிழுக்கு மொழி பெயர்ந்தால் “இலவசம்” என்றும் சொல்லலாம். சுதந்திரம் என்றும் சொல்லலாம். எனவே இலங்கையில் C.W.W கண்ணங்கர அவர்களால் முன்மொழியப்பட்ட ஒரு கல்வி முறைமையை சிங்களவர் சுதந்திர கல்வி என்றும் ( நிதஹஸ் அத்யாப்பனய) தமிழர்கள் அதனை “இலவச” கல்வி என்றும் பொருள் கொண்டார்கள் என கொள்வோம்.
இனி இலவச கல்வி எனும் வழக்குச் சொல்லே இந்த கட்டுரையில் கையாளப்படும். இந்த இலவச கல்வி (Free Education ) இலங கையில் Fair Education ( நியாயமான கல்வி) ஆக நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்த கேள்வியை எழுப்பும் தேவை எழுகிறது.
இலங்கையின் இலவசக்கல்வியின் தந்தை என போற்றப்படும் சி.டபிள்யு.டபிள்யு. கண்ணங்கர 1940 களில் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் அதனை அறிமுகம் செய்கிறார். அப்போது சர்வஜன வாக்குரிமையின் கீழ் 1931 ஆம் ஆண்டு வாக்குரிமை பெற்றுக் கொண்ட இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மக்கள் இலங்கை பிரஜைகளானபோதும் இந்த இலவச கல்வி இவர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதன் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரையில் இலங்கையின் இலவச கல்வி அறிமுகம் நியாயமான கல்வி அறிமுகமாக இருந்ததா ( Whether introduction of Free education was fair) எனும் கேள்வியை முன்வைக்க வேண்டி வருகிறது.
அன்று அப்படி நடந்திருக்கவில்லை. மலையகப் பெருந்தோட்டங்களில் இயங்கியவை “தோட்டப் பாடசாலைகளாக” வும் மலையக நகரங்களை அண்டிய பாடசாலைகள் கிறிஸ்த்தவ மிஷனரி பாடசாலைகளாகவுமே இயங்கின. இவை இரண்டுமே தற்போது அரசாங்க பாடசாலைகளாக இயங்குவது நாமறிந்ததே. ஆனால் இவை எப்போது அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதன அடிப்படையிலேயே இலவச கல்வி மலையக மக்களுக்கு வழங்கப்பட்டதில் “நியாயம்” ( Fair) கிடைக்கவில்லை என்பது ஆராயப்பட வேண்டி உள்ளது.
மலையகப் பெருந்தோட்டப் பாடசாலைகள் எவ்வாறு உருவாகின என்பது தொடர்பாக புரிதலைப் பெற 2008 ஒக்டோபர் 5 வீரகேசரி வார வெளியீட்டில் லன்டனில் இருந்து மு.நித்தியானந்தன் எழுதிய “ தோட்டப் பாடசாலைகளுக்காக லன்டனில் ஒலித்த குரல்” எனும் தொடர் கட்டுரையை மீள்பிரசுரம் செய்வது நல்லது.
அதே நேரம் தோட்டப்பகுதிகளில் இயங்கிய தன்னார்வ பாடசாலைகளை அரசாங்கத்தைப் பொறுப்பேற்று நடாத்தக் கோரி போராட்டம் நடாத்திய கல்விச்சேவகர் ‘பாரதி’ ராமசாமி ( பசறை) வை. தேவராஜ் ( ஹாலிஎல) போன்ற பெரியவர்கள் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் இங்கே நினைவுபடுத்த வேண்டி உள்ளது. பெரியவர் ராமசாமி அவர்கள் “பாரதி” பெயரில் ஆரம்பித்து நடாத்திய தன்னார் பாடசாலையை வளர்த்தெடுத்து இதனை என்னால் தனிப்பட்ட ரீதியில் நடாத்த முடியாமல் உள்ளது “அரசாங்கமே பொறுப்பெடு” எனும் போராட்டம் செய்து உருவானதே இன்று பதுளை மூன்றாம் கட்டையில் பாரதி தமிழ் வித்தியாலயம் அரசாங்க பாடசாலையாக இயங்கி வருகிறது. இது நடந்தது 60 களில்.
இதற்கு தலைமை கொடுத்தவர்கள் இன்றும் நம்மிடையே வாழ்கிறார்கள் என்பது மலையக கல்வி நிலை குறித்த ஆழமான பார்வைகளை நம்முள் விரிவுபடுத்துகிறது. என்னைப் பொறுத்தவரை ( கட்டுரையாளர்) இலங்கையின் இலவசக் கல்வியின் தந்தை ‘கண்ணங்கர’ என்றால் மலையக கல்வியின் தந்தை ‘பாரதி ராமசாமி’ என்பேன். அது அவரவர்கள் வாழ்ந்த காலத்தின் அடிப்படையில் எழும் பெயர் அல்ல. அவர்களது செயல்வாத எண்ணக்கரு ( Concept & Activism ) சார்ந்தது. நகரங்களில் இயங்கிய கிறிஸ்த்தவ மிஷனரி பாடசாலைகளும் காலத்துக்கு காலம் அரசாங்க பாடசாலைகள் ஆகிவந்தன. அது 60 களுக்கு முன்னதாகவே இடம் பெற்றுள்ளது. ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி, இறக்குவான பரி.யோவான் போன்ற இன்றைய அரசாங்க பாடசாலைகளாகவே 125 வருடங்களைக் கடக்கவில்லை.
ஆரம்பத்தில் மிஷனரி பாடசாலைகளாக இருந்தே பின்னர் அரசாங்கம் பொறுப்பேற்றது. கவிஞர் சிவி வேலுப்பிள்ளை கற்ற காலத்தில் ஹைலன்ஸ் கல்லூரி யின் பெயர் மெதடிஸ்ட் ஆண்கள் கல்லூரி என்றே மிஷனரி பாடசாலையாக இயங்கி இருக்கிறது. இன்றும் அங்கே விளையாட்டுப் போட்டிக்கான இல்லங்களின் பெயர்கள் தோர்ப், நெல்சன், கோர்னிஸ், செனரத்ன என முன்னைய கால நிர்வாகிகள் பெயரிலேயே உள்ளன. தலவாக்கலை சென்.பெட்ரிக்ஸ் இன்று அரசாங்க பாடசாலை ஆயினும் முன்னர் அது யாழ்.சென். பெட்ரிக்ஸ் கல்லூரியின் கிளைப்படாசாலையாகவே இயங்கியுள்ளது.
 
எப்படியோ 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசானதோடு தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த தோட்டப் பாடசாலைகளை அரசாங்கப் பாடசாலைகளாக அரசாங்கம் பொறுப்பேற்றது. என்றாலும் 1980 களில் இருந்தே அது நடைமுறைக்கு வந்தது. “1979 ஆம் ஆண்டு பாலர் வகுப்புக்காக நான் தோட்டப் பாடசாலையில் சேர்க்கப்பட்டேன். அங்கே கல்லுக் குச்சியும் சிலேட்டும் எனக்கு கல்வி உபகரணங்களாக இருந்தன” ( கட்டுரையாளர்) என்ற உணர்வுடனான உண்மை இது.
1980 களிக்குப் பின்னான கல்வி அமைச்சின் கீழான கண்ணங்கரவின் இலவச கல்வி மலையகத் தோட்டப் பாடசாலைகளுக்கும் கிடைக்க ஆரம்பிக்கிறது. அரசாங்கத்துக்கு பொறுப்பேற்றல் என்பது உள்ளதை உள்ளபடி ஏற்பது. இங்கு தோட்டப்படசாலைகளுக்கு பாடவிதான முறைமைகள், நிர்வாக சுற்றுநிருபங்கள, அதிபர் ஆசிரியர் சம்பளங்கள் முதலான விடயங்கள் மாற்றம் பெற்றனவே தவிர பௌதீக நிலைமைகளில் மாற்றம் ஏதும் இடம்பெறவில்லை. அதாவது கட்டடம், மைதானம், உள்கட்டமைப்பு வசதிகள் தரம் உயர்த்தப்படவில்லை.
1990 களில் இதற்கான தேவை உணரப்பட்டபோது வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களான GTZ (ஜேர்மனி), SIDA ( சுவீடன் ) போன்றவை உதவ முன்வந்தன. அதன்போது தோட்டப் பாடசாலை அலகு ( Plantation Schools Unit) என்ற ஒரு அலகு மத்திய கல்வி அமைச்சின் கீழ் இயங்கத் தொடங்கியது. இப்போதும் இயங்குகிறது. இத்தகைய தொண்டு நிறுவனங்களின் நிகழ்ச்சித் திட்டங்களின் ( Project ) நிறைவுக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம், நாற்பது வருடங்களின் பின்னர் உள்வாங்கிக்கொண்ட “தோட்டப் பாடசாலைகளை” அரசாங்கப் பாடசாலைகளாக ஆக்கிக் கொள்ள எத்தகைய சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தது ? செய்துவருகிறது ? எனும் பெரும் கேள்வி எம்முன் நிற்கிறது.
இது ஒரு புறம் இருக்க மாகாண சபை முறைமை (1988) இலங்கையில் அறிமுகம் செய்துவைத்ததன் பின்னர் கல்வி நிர்வாக முறைமை அடிப்படையில் மத்திய அரசாங்கத்துடன் துண்டிக்கப்பட்டு மாகாண அரசுகளின் மாற்றப்பட்டது. இதன்போது “தேசிய” அரசாங்க பாடசாலைகளாக பொறுப்பேற்கப்பட்ட “தோட்டப்பாடசாலைகள்” அனைத்தும் “மாகாண” ( சபைகளின்) அரசாங்கங்களின் பொறுப்புக்கு மாற்றப்பட்டன. இதனகத்துப் பின்னர் ம
லையகப் பெருந்தோட்டப் பாடசாலைகள் எவ்வாறு நிர்வாகிக்கப்பட்டன? படுகின்றன ? எனும் இன்னும் ஒரு கேள்வியும் எழுகின்றது?

இந்த இரண்டு கேள்விகளுக்குப் பின்னாலும் கற்றல், கற்பித்தல் சார் அபிவிருத்தி அறவே இடம்பெறவில்லை என்பது வாதமல்ல. அதில் ஏற்பட்டிருக்க கூடிய மறுமலர்ச்சி - மாற்றம் - முன்னேற்றம் தனியாகப் பார்க்கப்பட வேண்டியது. அதே நேரம் அவை எதிர்நோக்கும்

 சவால்களை சீர்தூக்கிப் பார்த்து அடுத்த க
ட்டத்துக்கு முன் நகர வேண்டியுள்ளதை இந்த கோவிட் - 19 ( கொரொனா) தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.
கொரொனாவுக்குப் பின்னான பௌதீக தாக்கங்கள் அதாவது கைகழுவும் வசதி, அதற்கான தண்ணீர் வசதி, மலசலகூட வசதிகள் அதற்கான பராமரிப்புகள், தூ
ர இடைவெளியைப் பேணி வகுப்பறைகள் அமைக்க நேர்ந்தால அத

ற்கான இடவசதி , அதனால் உருவாகும் கட்டடத் தேவை, அவை அமைக்கப்படுமானால் காணித்தேவை என பௌதீக தேவைகளின் தேவை விரிவடைந்து செல்கிறது. இது எல்லாப்பாட

சாலைகளுக்குமான பிரச்சினை என “ஒட்டுமொத்தப் பார்வைக்குள்” உள்ளடக்கப்படும் ஓர் ‘அரசியல் பதில்’ அளிக்கப்படக் கூடும் என்பதற்காகவே இங்கே வரலாற்றுப் பின்புலத்துடன் இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
மறுபுறமாக கொரொனா உருவாக்கி இருக்கும் இலத்திரனியல் கல்வி முறை போக்ககினை ( E- learning trend ) எதிர்கொள்ள மலையகப் பெருந்தோட்ட மாணவர்களைத் தயார்செய்வதில் உள்ள சவால்களை எடுத்தாராயப்படவேண்டிய விடயமாக உள்ளது. வீடுகளில் - பாடசாலைகளில் பாதுகாப்பான மின்சார வழங்கல் கிடைக்கிறதா?, கண்ணி அல்லது அதற்கு இணையான இலத்திரனியல் சாதனங்கள் ( mobile phone,tab, I pad etc) கிடைக்கின்ற வாய்ப்பு? கிடைத்தால் அதற்கு வலையமைப்பு வாய்ப்புகள் ( tower/ network) அதுவும் கிடைத்தால்  இப்போது பரவலாகப்  பேசப்படும் Zoom, Google meet, Microsoft team, hangout போன்ற செயலிகளை கையாளும் சூழல், அதற்கான அறிவுப்புலம், செலவு என பல தொடர் கேள்விகள் எம்மிடையே எழுகிறது.

இது தகவல் யுகம் ( informational age) எனும் அடிப்படையில் இன்றைய உலகம் எண்ணிமத்தால் ( Digital) கட்டமைக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டமைவுக்குள் (Digital Divides ) எண்ணிமப் பிரித்தாளும் விதியின் அடிப்படையில் வசதி படைத்த மாணவர்களுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கும் சாத்தியப்பாடுகள் அதிகம்.
அரசியல் பிரித்தாளும் விதியினால் நான்கு தசாப்தங்கள் கடந்து கிடைத்த நியாயக் கல்வியை பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தலையெடுத்த மலையகத் தமிழ்ச் சமூகத்தின் மீது ஓர் பேரிடியாக இந்த கொரொனா தாக்கம் தரும் எண்ணிமப்  பிரித்தாளும் பேரிடியையும் எதிர் கொள்ள நேரிடுமோ  எனும் அச்சத்தை  ஏற்படுத்துகிறது.
சகல பேதங்களுக்கும் அப்பால் மலையகம் ஐயாயிரம் ரூபா வட்டத்திற்கு வெளியே எதிர்கொள்ளும் சவால் இது.
பெரியவர் ராமசாமி அவர்களுடன் கட்டுரையாளர்...

எழுத்துலகத்திலும் அவரின் ஈடுபாடு ஒருபோதும் குறைந்ததில்லை

இலங்கைத்தேயிலையின்நூறாவது ஆண்டுநிறைவைக் கொண்டாடுவதற்காக, இலங்கைத்தேநீர் பிரசாரசபை தேயிலையின் நூற்றாண்டு வளர்ச்சி குறித்து சிறப்பு நூலினைஎழுதுவதற்கு D.M.Forrest  என்றஆங்கிலஎழுத்தாளரைப்பணியில்அமர்த்தி, A Hundred Years of Ceylon Tea (1867-1967)என்றநூலை1967ஆம்ஆண்டில்வெளியிட்டது.

இந்நூல் 320பக்கங்கள்கொண்டது.பதினாறு அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலில், வெளிமடைக் குமரனின்வார்த்தைகளில் 'உதிரத்தை நீராக்கி தேயிலைக்கே ஊற்றிவிட்ட' மலையகத்தொழிலாளர்கள் பற்றி ஒரு அத்தியாயத்திற்குக்கூட இடமில்லாமல்போய்விட்டது.தோட்டத்துலயங்களிலிருந்து எழும் பெருங்கூச்சலும், தலைமுடியைப்பிடித்துக்கொண்டுஅவர்கள் போடும் சண்டைகளும் இந்த நூலாசிரியருக்கு, மலையக மக்களது சமூகவாழ்வின் முக்கிய அம்சங்களாகத் தோன்றி இருக்கிறது.

இலங்கையின் கோப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்களில் அதன் 200 ஆண்டுகாலவரலாற்றில் மலையக மக்களின் ஒரு கோடி உயிர்களாவது பலியாகியுள்ளன.மலையகமக்களின் பேருழைப்பில், பெருமூச்சில், கண்ணீரில், வியர்வையில், ரத்தத்தில், ஏழ்மையில், ஏக்கத்தில், எலும்புக்கூடுகளில்தான்மலைநாடு அல்ல, முழு இலங்கையுமே வளம் கண்டது.அந்த மக்களின் உழைப்பில்தான்இலங்கை நவீனத்தைநோக்கி நகர்ந்தது. இலங்கையின் நாகரிக வளர்ச்சிக்கு, நவீனமோஸ்தர் வாழ்க்கைக்கு, ஆடம்பர வாழ்க்கைக்குஇந்த பஞ்சைபராரிகள்தான் ஓடாய்உழைத்தனர்.

 

ஆனால், வெள்ளை  ஏகாதிபத்தியக்கட்டமைப்பில்அவர்கள் மனிதர்களாகவேகணிக்கப்படவில்லை. Gangஎன்று அவர்கள்அழைக்கப்பட்டனர்; கம்பளிகளைப்போர்த்தியபடி தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களைப்பார்க்கும்போது, ஒரு தோட்டத்துரைக்கு 'கறுத்த செம்மறியாட்டுக்கூட்டம்மேய்ந்துகொண்டிருப்பதை' போலத்தெரிந்திருக்கிறது. கோப்பித்தோட்டங்களில்வேலைபார்க்கப்போதுமான தொழிலாளர்கள் கிடைக்காதபோது, இந்தியாவிலிருந்துதொழிலாளர்களைக்கொண்டுவரஎவ்வளவுமுயற்சிகள் மேற்கொண்டபோதும், வேண்டியbodiesவந்து கிடைக்கவில்லை என்று ஒரு துரை ஆதங்கப்பட்டிருக்கிறான்.

 

'இலங்கையின்தமிழ்க்கூலி அதிர்ச்சிதரும் காட்டுமிராண்டி - அருவருக்கத்தக்க, பரிதாபகரமான சிருஷ்டி'என்று ஹென்றி டபிள்யு கேவ் என்ற எழுத்தாளர் வெறுப்பைஉமிழ்கிறார்.1911ஆம் ஆண்டில் இலங்கையின் குடிவிபரவியல் அறிக்கையில், ஒவ்வொரு இனத்தவரும் இலங்கை வரைபடத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும்தாங்கள் கண்டுபிடித்த கற்பனார்த்த தேசிய உடையில் நிமிர்ந்துவாசகரைநேரே பார்க்கும் பாணியில் தோன்ற, இந்தியத்தொழிலாளர் மட்டும் வளைந்துகுனிந்து, தேயிலைச்செடிக்கு உழைப்பை வழங்கும் பாவனையில், பார்ப்பவரின் பார்வைக்குள் வராமல் நின்றுகொண்டிருப்பதை பேராசிரியை நிராவிக்ரமசிங்க அவதானிக்கிறார்.

இவையெல்லாம் காலனியச்சித்திரம் என்றால், இலங்கையின்சுதந்திரத்திற்குப்பின் நிலை இன்னும் மோசமாகியது. 1948இல் இலங்கையின்அரசியல் வானில் ஒளிக்கிரணங்கள் வீசியபோது, மலையகத்தமிழர்கள் வாழ்விலோஅந்தகாரம் கவிழ்ந்தது. இலங்கை என்பது வெறும் பிராந்திய, புவியியல்பிரதேசமாகத்தோற்றம் தந்ததே தவிர, ஒரு தேசமாக உருவாகவில்லை. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் இருந்தனரேதவிர, இலங்கையர்களைக்  காணவில்லை.  சிங்களவர்கள்என்று பெரும்பான்மை இனம் ஒன்று உருவாக்கப்பட்டது. Majorities are made, not bornஎன்கிறார் Dru Gladney.பத்துலட்சம் மக்கள்  அரசியல் களத்திலிருந்து அநாயாசமாகக்கூட்டோடு தூக்கி எறியப்பட்டனர்.

இலங்கையில் அவர்கள் ரத்தமும் தசையுமாய் உயிர்கொண்டிருந்தாலும்  அரசியல்கண்களில் அவர்கள் அந்த நாட்டிற்கு உரியவர்கள் அல்லவர்களானார்கள். அவர்கள்இலங்கையர்கள் ஆகமாட்டார்கள் என்று அரசு கூறியது.அவர்கள்  இந்தியர்கள் ஆகமாட்டார்கள் என்று இந்திய அரசு கூறியது.

இலங்கையில் மலையக மக்கள் தங்கள் உரிமைக்காக நடத்திய போராட்டங்கள்நீண்டன. அந்த மக்களின் போராட்ட வரலாற்றை, சமகால பிரச்சினைகளை அவர்கள்  மத்தியிலிருந்து இளஞாயிறு போலெழுந்த மல்லியப்புசந்தி திலகர்இந்தநூலில்பேசுகிறார். 'மலைகளைப்பேசவிடுங்கள்' என்று தனது நூலுக்குஅவர் மகுடம் சூடியிருக்கிறார்.

Go Tell It on the mountain,

       over the hills and everywhere;

Go tell it on the Mountain,

       that Jesus Christ is born

என்ற ஆபிரிக்க-அமெரிக்க கிறிஸ்தவ பிரார்த்தனைப்பாடல் பிரபல்யம் மிக்கது.

அந்த அடியையொட்டி James Baldwinஎன்ற எழுத்தாளர் Go Tell It on the mountain  என்ற தலைப்பில் எழுதிய நாவல் இன்று கிளாசிக் அந்தஸ்தைஎட்டியிருக்கிறது.

இங்கெல்லாம் மலை என்பது உங்களின் செய்தியை வெறுமனே கேட்டுநிற்கும்passive பொருளாகவே அமைந்திருந்தது. அதுவும் நல்ல செய்திகளை மட்டுமே உரத்துப்பிரகடனப்படுத்துவதற்குரிய ஒரு இடமாகவே அதனைப்பார்த்திருக்கிறோம்.

ஆனால், மல்லியப்பு திலகர் மலைகளை வெறும் அசையாத,  உயர்ந்த பர்வதங்களாகமட்டுமே பாராது, இந்த நூலில் மலைகளைப் பேசவிட்டிருக்கிறார். விண்ணைத்தொடும் அந்த மலைகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். மலையக மக்களின் துயரவாழ்வினை, அவர்கள் காலம்காலமாகத் தாங்கிநின்ற சிலுவைகளை, பாடுகளை ,பலிகளைப் பேசுவதற்கு இந்த மலைகளைவிடத் தகுதியானது எது?  மலைக்குரல் என்றும், குன்றின் குரல் என்றும் ஏற்கெனவே இந்தக்குரல் நமக்குபழகிப்போயிருந்தாலும், 'மலைகளைப்பேசவிடுங்கள்'  என்ற தலைப்பிலே தொனிக்கும்காம்பீரியம், தற்துணிபு, தைரியம், எதற்கும் தளராதமனத்திண்மை என்பன, அத்தலைப்பிற்குத் தனிச்சோபை சேர்க்கிறது.

 மல்லியப்புசந்தி திலகர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேதான் இந்த தலைப்பைத்தேர்கிறார். 'மலைகளின் மௌனத்திற்குக்கீழே பல குமுறல்கள் புதைந்துகிடக்கின்றன.மலைகளைப்பேச விடுங்கள்' என்று இந்த இளம் சிங்கம்அரசபேரவையிலேஆர்ப்பரித்திருக்கிறது. அந்த மலைகள் இந்த நூலிலே பேசுகின்றன.

தோய்ந்து துவண்டு கிடந்த மலையக அரசியலில் புதிய நட்சத்திரமாய்உதயமாகியவர் மல்லியப்பு சந்தி திலகர். நுவரெலியா தேர்தல் தொகுதியில் திலகர்போட்டியிட்டபோது அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த பெரும் செல்வாக்கை நான்நேரடியாகப்பார்த்திருக்கிறேன்.'ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானதொழிலாளர்களைப்பார்க்கிறேன்' என்று ஹட்டனில் தொழில் பார்த்த ஒருசட்டத்தரணி தனது சமூக ஈடுபாட்டிற்கு சாட்சியம் சொல்கிறார்.

வெறுமனேதொழிலாளர்களைப்பார்த்துக்கொண்டிருப்பதுகூட சமூக சேவை என்றாகிப்போன  அவலச்சூழலில், ஒரு மின்வெட்டாய் வெளிக்கிளம்பியவர் திலகர். இலக்கியச்சூழலில்முதலில் அறிமுகமான திலகர், பின்னர் அரசியலில் தன்னைபட்டைதீட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு  மக்களின்பாஷையில்பேசத்தெரிந்திருக்கிறது.மக்களின் பிரச்சினைகள் எவையென்பதை அவர்மக்களின் நாடிபிடித்துப்பார்த்து அறிந்து வைத்திருக்கிறார்.

பாராளுமன்றத்தில்மலையக மக்களின் பிரச்சினைகள்  குறித்து, திலகர் சிங்களத்தில் ஆற்றிய உரைஅனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தினைப்பெற்றிருக்கிறது. இலங்கையின் மதிப்பாய்வினை நிறுவனமயப்படுத்தும் அம்சத்தைத் தேசியக்கொள்கையாகமுன்னெடுப்பதில் திலகர் வகிக்கும் பங்கு பாராட்டத்தக்கது. அமைச்சர் கபீர்ஹாசிம், பிரதிச்சபாநாயகர் ஆனந்த குமாரசிங்க ஆகியோருடன் இணைந்து,  இளைஞர்திலகர் மேற்கொண்டுவரும் பணி தேசியரீதியில்அவர்பெயரை என்றும்நிலைநிறுத்தும்.

பொருளாதார முகாமைத்துவ அறிவுடன், கணக்கியல் துறைசார்கல்வியுடன் அரசுத்திட்டங்களின் மதிப்பாய்வினை நெறிப்படுத்தும் தகைமையினைத்திலகர் கொண்டிருப்பது அவரின் செயல் திறனுக்கு வலிமை சேர்க்கிறது.

மலையகத்தமிழர் சமூகத்தில் மாற்றம் கோரும் பேராவலில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறிய மலையக மாணவர்கள் தீவிரமாக செயற்பட்டகாலங்கள் உண்டு. நமது அனுபவத்தின் வரம்பில் இர. சிவலிங்கம் இத்தகையசெயற்பாட்டின் முன்னோடியாகத் திகழ்ந்தார்.மலையகத்தின் படித்த இளைஞர்களின்ஆதர்ச அரசியல் தலைவராகத்திகழ்ந்தார்.அவரின் தலைமைப்பண்பும், எளிமையும், அர்ப்பணிப்பும், சொல்வன்மையும், தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றொழுக்காகஉரையாற்றும் திறனும், அயராத உழைப்பும் எழுத்துவன்மையும் அவரின் பெரும்பலமாகத்திகழ்ந்தன. எல்லாக் கட்டங்களிலும் தனது சமூக ஈடுபாட்டிலிருந்தும் அரசியல் செயற்பாட்டிலிருந்தும் அவர்ஒருபோதும் ஒதுங்கிக் கொண்டதில்லை.

இலங்கைப்பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய மலையகப்பட்டதாரிகளில்,திலகர்  தனதுதனித்த அரசியல் பாதையை வெற்றிகரமாகச்செதுக்கிக்கொண்டிருக்கிறார். வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு அமைப்புகளில்இணைந்து மலையக சமூக உணர்வுடன் செயற்பட்ட இளைஞர்களின் மிகப்பெரிய பட்டியலேநம்மிடம் உண்டு.பலர் தத்தம் தொழிற்பதவிகளில்உயர்நிலைகளை எட்டி, புதியதலைமுறைக்கு முன்னுதாரணங்களாகத்திகழ்ந்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் உன்னத பதவிகளைப் பெற்று  மலையக அறிவியல் தகைமைக்கு அணிசேர்த்திருக்கிறார்கள். இலக்கியத்துறையில் பெருமைப்படத்தக்க சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். கணக்காளர்களாக, சட்டத்தரணிகளாக, நல்லாசிரியர்களாக ,நீதியரசர்களாக, ராஜாங்கத்தூதுவர்களாகவெல்லாம் கிளைவிரித்து மலையகம் வலுப்பெற்றுவருகிறது.

மலையகப்பிரச்சினைகளைத் தேசியஅளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும்எடுத்துச்செல்லும் வாய்ப்பும், அதற்கேற்ற தகுதியும் கொண்டவராகத் திலகர்திகழ்கிறார்.ஐரோப்பாவிலும் பிறவிடங்களிலும் நிகழும் இலக்கியச் சந்திப்புகளில்திலகர் மலையகம் குறித்து ஆற்றிய உரைகள் பெரும் தாக்கத்தைஏற்படுத்தியுள்ளன என்பதனைச் சொல்லியாகவேண்டும்.மலையகத்திற்கும் புலம்பெயர் நாடுகளில் வாழ்வோருக்குமிடையிலான நல்லுறவுப்பாலமாக திலகர் இயங்குகிறார். நட்பினைப்பேணுவதில் திலகர் உன்னதமானவர். ஐரோப்பாவில் அவருக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டம் இருக்கிறது.

இந்தியவம்சாவளித்தமிழர்கள் என்று கூறுபவர்கள் துரோகிகள் என்றுமரணதண்டனைத்தீர்ப்பு வழங்கும் மகானுபவர்கள் உலவும் சூழலில், தாயகம்திரும்பிய மலையகத்தமிழர்களை மீண்டும் மலையக மண்ணுடன் இணைத்து, இந்தஇரட்டைவழிப்பயணத்தை மீட்டெடுத்ததில் திலகரின் பங்கு குறிப்பிடத்தக்கது.இச்சந்தர்ப்பத்தில் தமிழகத்திலிருந்து'மக்கள் மறுவாழ்வு' என்றபத்திரிகையை நடத்தி மறைந்த எழுத்தாளர்  தொ.சிக்கன்ராஜ்அவர்களை நினைவில்கொள்வது பொருந்தும்.

பரந்த பார்வையில் பிரச்சினைகளை அணுகும் சிந்தனையும், தொலைநோக்குப்பார்வையும் மக்களை அணுகும் சாதுரியமும் திலகரின் அரசியல்வெற்றிக்குக் கைகொடுத்திருக்கின்றன.

அரசியல், இலக்கிய ஆளுமைகளைக் கவனப்படுத்துவதில் திலகரின் பரிவும்பணிவும் அக்கறையும் தனித்து நோக்கத்தக்கது. ஒரு eccentricபோக்குடையவராகக்கருதப்படும் சக்தி அ.பாலஐயா அவர்களை இறுதிவரை பாதுகாத்துப்பேணியவர்திலகர். பேராசிரியர் கா.சிவத்தம்பியை அவரின் இறுதிக்காலங்களில்சந்தித்து, உரையாடி அவருக்கு பலமாக இருந்திருக்கிறார். மலையகத்தின் மகத்தானஇலக்கிய வியக்தியாகத் திகழும் தெளிவத்தைஜோசப் அவர்களை என்றும் கவனப்படுத்திவருபவர் திலகர். இன்றும் தங்கள் வீடமைப்புத் திட்டங்களுக்கு மலையகப் பெரியார்களின் பெயர்களை வைத்து கெளரவம் செய்திருக்கும்செயல் திலகரின் பெயரை என்றும் மலையகத்தில் நிலைநிறுத்தும்.வயதில்இளையவரானாலும் முதிர்ந்த அரசியல் ஞானியின் பக்குவம் அவருக்குச்சித்தித்திருக்கிறது.

தனது உரிமைக்காக, தன்  முதுமையிலும்அயராதுபோராடியஎஸ்.ஆர்.அந்தோனிஎன்ற போராளியைத் திலகர் இந்த நூலில் அறிமுகம் செய்கிறார். சிறிமாவோபண்டாரநாயக்க மலையகத்தமிழர்கள் குறித்து மேற்கொண்ட பாதகமானநடவடிக்கைகளைப்பற்றிப்பேசும் பகுதி முக்கியமானது.உள்ளூர் நிர்வாகமட்டத்தில்மலையகத்தமிழர்களை ஒதுக்கிவைத்த நிலைமைகளை மாற்றியமைப்பதில் திலகரின் பங்கு,அவரது பாராளுமன்றச் சாதனையைக் குறிக்கும். பெரும்பான்மை இனத்தவருக்குபிரச்சினைகளை எடுத்து விளக்கி அவர்களின் அனுசரணையுடன் நமது உரிமைகளைவென்றெடுத்திருப்பது அரசியல் ஆடுகளத்தில் சாதுரியமாக காய்நகர்த்தும்திலகரின்  பெரும்ஆற்றலைநிரூபிக்கிறது.

அரசியல் செயற்பாடுகள், தொடர்ச்சியான ஊடக ஊடாட்டங்கள், பொதுநிகழ்ச்சிகள், வெளிநாட்டுப்பயணங்ககள், தொழிற்சங்க நடவடிக்கைகள், எதிரணிகளுக்கெதிரான தீவிர வாதங்கள் என்று அவரது பொழுதுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தாலும் எழுத்துலகத்திலும் அவரின் ஈடுபாடு ஒருபோதும்குறைந்ததில்லை என்பதை இந்த நூல் நிரூபணம் செய்கிறது.

திலகரின் பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். பேசவந்த பொருளுக்குள்வரம்பு கட்டி, எளிமையாகவும் கவர்ச்சிகரமாகவும் உரையாற்றும் வல்லமையை அவர்கொண்டிருக்கிறார். நாளும்பொழுதும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைஎல்லாத்தளங்களிலும் சந்திக்கும் திலகர் கொண்டிருக்கும் தகவல் கிட்டங்கி விரிவானது. எடுத்துக்கொண்ட எதனையும் எடுத்தோம் கவிழ்த்தோம்என்றில்லாமல் நிதானித்துச் செயற்படும் பாங்கு அவரின் இலக்கின் தூரத்தைகுறுக்கிக்கொடுக்கிறது.

மலையகம் நம்பிக்கைக்குரிய ஒரு அரசியல்தலைவனைப்பெற்றிருக்கிறது என்பது நமக்கெல்லாம் தேனாய் இனிக்கும் செய்தி. திலகர் தனது இலட்சியஅரசியல் பயணத்தில் மேன்மேலும் வெற்றிகள் பெற என் நல்வாழ்த்துக்கள்.

 

மு.நித்தியானந்தன்

லண்டன்

19.11.2019

 

 

 

 


ஒத்திசைவாக 'மலைகளை வரைதல்'

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக அரசியல் ஆய்வாளர், மும்மொழித் திறனாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முக ஆளுமை கொண்ட மல்லியப்புசந்தி திலகரின் 'மலைகளை வரைதல்' என்ற ஆங்கில நூல்கள் பற்றிய  அறிமுக நூல் ஒரு புதுவகையான முயற்சியாகும்.
இந்த நூலின் இருபது அத்தியாயங்களும் ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் தொடர்ச்சியாக 2020 மே மாதம் முதல் செப்தெம்பர் இறுதிவரை கட்டுரைகளாக வெளிவந்தவையாகும். ஓரிரண்டைத் தவிர பெரும்பாலும் 1980-2019 ஆகிய காலப்பகுதியில் வெளிவந்த ஆங்கில நூல்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்டுள்ள போதும், இவை ஆய்வு, கலை இலக்கியம், கவிதை, வரலாறு, நினைவுப்பகிர்வு என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.
இருபது அத்தியாங்களில் 19 நூல்கள், ஒருநூல் பக்கங்களின் எண்ணிக்கைக் காரணமாக இரு அத்தியாங்களை உள்ளடக்கியதாய், பன்னிரண்டு ஆய்வுகளாகவும், நான்கு கலை, இலக்கியம், கவிதை சார்ந்ததாகவும்,  இரண்டு வரலாறுகளாகவும் ஒன்று நினைவுப்பகிர்வாகவும் மிளிர்கின்றன. இவை பெரும்பாலும் மலையகத்தை மையப்படுத்தியவை என்பது குறிப்பிடப்படப்வேண்டியதொன்று.